தழைச் சத்து

அறிகுறிகள்

செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும் நூற்புக்கதிர் மங்களான மஞ்சள் அல்லது ஆழ் மஞ்சள் நிறத்தில் செடியின்நுனியில் தோன்றும்.

அது விளிம்பு வரை அடியில் சென்று அடியில் இருந்து சிறியதாக வளரும் இலைகளின் அளவைக் குறைக்கும்.

நிவர்த்தி

யூரியா 1% அல்லது டி.ஏ.பி.2% தழை தெளிப்பாக தெளிக்கவும்

மணிச் சத்து

அறிகுறிகள்

செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும் நூற்புக்கதிர் மங்களான மஞ்சள் அல்லது ஆழ் மஞ்சள் நிறத்தில் செடியின்நுனியில் தோன்றும்.

அது விளிம்பு வரை அடியில் சென்று அடியில் இருந்து சிறியதாக வளரும் இலைகளின் அளவைக் குறைக்கும்.

நிவர்த்தி

யூரியா 1% அல்லது டி.ஏ.பி.2% தழை தெளிப்பாக தெளிக்கவும்

சாம்பல் சத்து

அறிகுறிகள்

அடி இலைகளின் நுனி மற்றும் ஒரங்கள் மஞ்சள் நிறமாக மாறி காய்ந்து விடும்

நிவர்த்தி

பொட்டாசியம் குளோரைடு (5 கிராம்/ லிட்டர்) கரைசலை இலைவழியாக 10 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரை தெளிக்க வேண்டும்.

சுண்ணாம்புச் சத்து

அறிகுறிகள்

இளம் இலைகள் பொதுவாக பாதிக்கப்படுகின்றன

இலைகளின் ஒரங்கள் ஒடிந்தும் கிழிந்தும் காணப்படும்

நிவர்த்தி

ஜிப்சம் உப்பை (200 கிலோ/எக்டர்) விதைக்கும்போது நிலத்தில் இடவேண்டும்.

கால்சியம் குளோரைடு கரைசலை (5 கிராம்/லிட்டர்), பயிர் தழைக்கும் பருவத்தில் 10 நாட்கள் இடைவெளியில் இலை வழியாகத் தெளிக்க வேண்டும்.

மெக்னீசிய சத்து

அறிகுறிகள்

பற்றாக்குறை பொதுவாக முதலில் முதிர்ந்த இலைகளில் தோன்றும்.

காய்ந்த புள்ளிகள் நுனியில் தோன்றி இலையின் விளிம்பு வரை சென்று ஆழ்ந்த சிவப்பு நிறமாக மாறி இலைகள் ஒடிந்தும், பழுப்பு நிறமாகவும் மாறிவிடும்.

நிவர்த்தி

மெக்னீசியம் சல்பேட் 2 % தழை தெளிப்பாக தெளிக்கவும்

கந்தகச் சத்து

அறிகுறிகள்

பற்றாக்குறை பொதுவாக மேல் இலைகளில் காணப்படும். வளரும் இலைகள் மங்களான மஞ்சள் நிறத்தில் மாறிவிடும்.

நிவர்த்தி

சுண்ணாம்பு சல்பேட் 2% தழை தெளிப்பாக தெளிக்கவும்

போரான் சத்து

அறிகுறிகள்

இலைகளின் நுனி வளர்வதைத் தடுத்து, இலைகள் ஒடிந்து அல்லது கிழிந்து, சீரற்ற பசுமை சோகையை உருவாக்கும்.

நிவர்த்தி

போராக்ஸ் 0.5% ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்

தாமிர சத்து

அறிகுறிகள்

இளம் இலைகளின் நுனி பழுப்பு நிறமாக மாறி இலைகள் ஒன்றுடன் ஒன்று சுருண்டு ஒடிந்துவிடும்.

நிவர்த்தி

தாமிரசல்பேட் 0.2% தழை தெளிப்பாக தெளிக்கவும்

இரும்புச் சத்து

அறிகுறிகள்

இளம் இலைகளின் நரம்பிடைப்பகுதிகள் வெளிரி விடும்.

நரம்புகள் வெளிர் பச்சை நிறக் கோடுகளாக காணப்படும்.

நிவர்த்தி

பொரஸ் சல்பேட் (5 கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை இலை வழியாகத் தெளித்தல்.

மாங்கனீசு சத்து

அறிகுறிகள்

இலையின் நரம்படைப்பகுதிகள் வெளுத்து, அதில் பழுப்பு நிறப் புள்ளிகள் தோன்றி, பின் அழுகிவிடும்

நிவர்த்தி

மாங்கனீசு சல்பேட் (3 கிராம் 1 லிட்டர் தண்ணீர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாக குறை தீரும்வரைத் தெளிக்க வேண்டும்.

துத்தநாகச் சத்து

அறிகுறிகள்

இலையின் அடிப்பகுதியில் நரம்பின் இருபுறங்களிலும் பெரிய வெளிர்நிற வரிகள் தோன்றும்

கணுக்களின் இடைவெளி குறைந்து காணப்படும்.

நிவர்த்தி

துத்தநாக சல்பேட் உப்பை (10 கிலோ/எக்டர்) மண்ணில் இட வேண்டும்.

துத்தநாக சல்பேட் (5 கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாக இருமுறை தெளிக்க வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்