தழைச் சத்து

அறிகுறிகள்

அடி இலைகள் பொன்மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

மஞ்சள் நிறமானது இலை நுனியிலிருந்து அடிப்பாகம் நோக்கி நரம்புப் பகுதியின் இருபுறமும் தோன்றும்.

நிவர்த்தி

யூரியா ((5 கிராம்/லிட்டர்)கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.

மணிச் சத்து

அறிகுறிகள்

வளர்ச்சி குன்றி காணப்படும் மற்றும் முதிர்ந்த இலைகளில் இளஞ்சிவப்பு நிறமாக்கமாக காணப்படும்

நிவர்த்தி

டி.ஏ.பி 2% ஐ தழை தெளிப்பாக தெளிக்கவும்

சாம்பல் சத்து

அறிகுறிகள்

முதிர்ந்த இலைகளில் பற்றாக்குறை காணப்படும்

சீரற்ற காய்ந்த வடிவமைப்புடைய இலைகள் சிவப்பு நிறமாக்கத்துடன் கலந்து காணப்படும்

இலைகளின் நுனியில் நரம்பிடை திசுக்களின் மேல் கீற்றுகள் தோன்றும். அது படிப்படியாக நுனியில் இருந்து அடி வரை கீற்றுகள் சென்று இலைகள் காய்ந்துவிடும்

நிவர்த்தி

பொட்டாசியம் க்ளோரைட் 1 % தழை தெளிப்பாக தெளிக்கவும்

சுண்ணாம்புச் சத்து

அறிகுறிகள்

இளம் இலைகளின் நுனிகள் ஒன்றுடன் ஒன்று ஒட்டி வால் போன்று காணப்படும்.

சொறிபோன்று இலைகளின் விளிம்புகளில், இலைகள் ஒடிந்து, பழுப்பு நிறமாக, விளிம்புகளின் அருகில் ஒட்டிக் காணப்படும் . பின் பழுப்பு நிறமாக மாறிவிடும்.

நிவர்த்தி

கால்சியம் சல்பேட் 2%ஐ தழை தெளிப்பாக இரண்டு முறை தெளிக்கவும்

மெக்னீசிய சத்து

அறிகுறிகள்

இலைகளில் மஞ்சள் கலந்த வெண்ணிற வரிகள் தோன்றும்.

நரம்பிடைப்பகுதிகள் பழுப்பு நிறமாக மாறிவிடும்.

நிவர்த்தி

மெக்னீசியம் சல்பேட் ((5கிராம் /லிட்டர்) கரைசலை பூக்கும் மற்றும் தானியம் உருவாகும் பருவங்களில் 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளிக்க வேண்டும்.

கந்தகச் சத்து

அறிகுறிகள்

மேல் உள்ள இலைகளில் பற்றாக்குறை காணப்படும். வளரும் இலைகள் மங்கலான மஞ்சள் நிறமாக மாறிவிடும்

நிவர்த்தி

மெக்னீசியம் சல்பேட் 1% ஐ தழை தெளிப்பாக தெளிக்கவும்

போரான் சத்து

அறிகுறிகள்

இலைகளின் நுனி வளர்ச்சியை தடுத்து, இலைகள் ஒடிந்து, ஒழுங்கற்ற பசுமை நிறமாகக் காணப்படும்

நிவர்த்தி

போராக்ஸ் 0.5% ஐ இரண்டு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்க வேண்டும்

இரும்புச் சத்து

அறிகுறிகள்

பற்றாக்குறை முதன் முதலில் புதிதாக வளரும் இலைகளில் தோன்றும்

நரம்பிடை திசுக்கள் மங்களான மஞ்சள் மற்றும் பச்சை நிறத்தில் மாறும். அதனுடன் இலை நரம்பின் பசுமை சோகையால் இலைகள் ஒரே மாதிரி மங்சள் அல்லது வெள்ளை நிறத்தில் மாறிவிடும்.

புதிதாக தோன்றி இலைகளில் பசுமை சோகை அறிகுறிகள் தென்படும்

பிறகு முழு பயிர்களும் வெளிறிய தோற்றத்துடன் தோன்றும்

நிவர்த்தி

ஃபெர்ரஸ் சல்பேட்டை 20-25 கிலோ வரை மண்ணில் கலந்து அளிக்கவும் அல்லது ஃபெர்ரஸ் சல்பேட் 1% ஐ ஒரு வார கால இடைவெளியில் தழை தெளிப்பாக தெளிக்கவும்.

தாமிரச் சத்து

அறிகுறிகள்

இளம் இலைகளின் நுனிகள் பழுப்பு நிறமாக மாறி ஒன்றுடன் ஒன்று சுருண்டு ஒடிந்து விடும்.

நிவர்த்தி

காப்பர் சல்பேட் 0.2% தழை தெளிப்பாக தெளிக்கவும்

மேங்கனீஸ் சத்து

அறிகுறிகள்

பற்றாக்குறை முதன் முதலில் இளம் இலைகளில் தான் தோன்றும்.

இலைகளில் கீற்றுகள் மங்களான நிறத்தில் தென்படும் மற்றும் இலைகளில் குறுகிய பெரிய சிதைவுகள் ஏற்படும்.

நிவர்த்தி

மேங்கனீசியம் சல்பேட் 2% ஐ தழை தெளிப்பாக தெளிக்கவும்

துத்தநாகச் சத்து

அறிகுறிகள்

புதிதாக முளைக்கும் இலைகள் மங்களான பச்சை நிறத்தில் தோன்றும்

பசுமை சோகை முனைப்பாக அடிப்பகுதிகளில் தோன்றி நுனி வரையில் காணப்படும்

விளிம்புகளில் சிவப்பு நிறக் கோடுகள் தெளிவாகத் தென்படும்

வெளிறிய வெள்ளைத் திட்டுக்கள் இலையின் மேல் தோன்றும்

முதிர்ந்த இலைகளில் மஞ்சள் நிறக் கீற்றுகள் இலையின் மேல் தோன்றும் அல்லது இலை நரம்புகளின் இடையில் பசுமை சோகை கீற்றுகள் காணப்படும்

நிவர்த்தி

துத்தநாக சல்பேட் 20-25 கிலோ ஹெக் அளவு மண்ணில் கலந்து அளிக்கவும் அல்லது துத்தநாக சல்பேட் 0.5 -ஐ தழை தெளிப்பாக தெளிக்கவும்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்