புழுதியில் நேரடி நெல் விதைப்பை வெற்றிகரமாக்க களை மேலாண்மை மிகப் பெரிய சவாலாக இருந்து வருகிறது. சேற்றில் நடவு நடும் முறையைவிட புழுதி நெல் விதைப்பில் அதிக களைகள் தோன்றும். களையை கட்டுப்படுத்தாவிட்டால் நெல் விளைச்சலை முழுமையாக பாதிக்கும் அளவிற்கு களை மேலோங்கும். களைகளில் பிரதானமாக 3 வகைகள் உள்ளன. புற்கள், அகன்ற இலைகள் மற்றும் புல்கோரை தாவரங்கள். நடைமுறை வழக்கங்கள் களை முளைப்பிற்காக விதைப் பட்டம் தயாரித்தல் மண்ணில் ஏற்கெனவே களை விதைகள் விழுந்து களைகள் அதிகளவில் இருக்கும் போது இம்முறையில் களைகள் கட்டுப்படுத்தப் படுகின்றன. விதைப்பிற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் ஒன்று அல்லது இரண்டு தண்ணீர் பாய்ச்சி களைகளை முளைக்கச் செய்து பின்னர் அவைகளை பாராகுவாட் அல்லது கிளைபோசெட் போன்ற தேர்திறனற்ற களைக் கொல்லிகளை பயன்படுத்தியோ அல்லது மேலாக உழுதோ களைகள் அழிக்கப்படுகின்றன. மண் விதைப்பதற்கு ஏதுவாக இருந்தால் உழாமலேயே தேர்திறனற்ற களைக் கொல்லிகளை பயன்டுத்தி களைகளை அழித்து விதைக்கலாம். உழும்போது களை விதைகள் மண்ணின் மேற்பரப்பிற்கு வருவதால் விதை முளைப்பை மேம்படுத்தலாம். களைக் கொல்லிகளை உபயோகிக்கும் வேளையில் களைகள் தீவிரமாக முளைத்திருக்க வேண்டும். எனவே, மண் உலர்ந்து இருந்தால் களைக்கொல்லி உபயோகிக்கும் முன்னர் ஒரு பாசனம் அளிக்க வேண்டும். புழுதி விதைப்பில் பெருமளவில் களைகளைக் குறைக்கும் சாத்தியம் இம்முறையில் உள்ளது. இரசாயனங்கள் களைகளைக் கட்டுப்படுத்தும் பலதரப்பட்ட களைக் கொல்லிகள் கிடைக்கின்றன. அனைத்து களைக் கொல்லிகளும், பூச்சிக் கொல்லிகள் போன்றே ஆபத்தானவையாக கருதப்படுகிறது. உரிய பாதுகாப்பான முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும். --- இரசாயனங்களை நீருடன் கலக்கும் போதும் பயிரில் தெளிக்கும் போதும் உரிய பாதுகாப்பான உடைகளை அணிய வேண்டும். --- இரப்பர் கையுறை, முகமூடி, கண்ணாடி தொப்பி, நீண்ட கையுடைய நீர் உட்புகாத மேலங்கி, கையுறைகளை உள்ளடக்கிய மேல் சட்டை, ரப்பர் பூட்ஸ், நீண்ட கால்சட்டை போன்றவைகளை பயன்படுத்த வேண்டும். ---- பாதுகாப்பு உரைகளை பயன்படுத்தியவுடன் கழட்டி நீரில் நன்கு கழுவி வைக்க வேண்டும். இரசயானங்களை பயன்படுத்திய பின் அதனை உபயோகித்தவர்கள் சோப் உபயோகித்து குளிக்க வேண்டும். --- இரசயானங்களை கலக்கும் போதோ அல்லது உபயோகிக்கும் போதோ அதனை உபயோகப்படுத்துபவர் புகை பிடிக்கவோ அல்லது உணவருந்தவோ கூடாது. --- பல இரசயானங்கள் விஷத்தன்மை வாய்ந்ததால் தெளிப்பான்களை ஆற்றிலோ, குளத்திலோ கழுவக் கூடாது. அவை மீன் மற்றும் நீர்வாழ் உயிரினங்களை பெரிதும் பாதிக்கும். --- பூச்சிக்கொல்லி கலன்களை ஓடும் நீரிலிருந்து குறைந்தது 50 மீ நீளம் துாரத்தில் 1 மீ ஆழத்தில் புதைக்க வேண்டும். வீடுகள் மற்றும் மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் எரிக்க வேண்டும். அல்லது வாய்ப்புள்ள சூழ்நிலையில் மறு சுழற்சி செய்ய வேண்டும். --- காலியான பூச்சிக்கொல்லி கலன்களை உணவு பொருட்களை மற்றும் குளிர்பானங்கள் வைக்க பயன்படுத்தக் கூடாது. --- குழந்தைகள் நடமாட்டமில்லாத இடங்களில் பூட்டிய கொள்கலனில் பூச்சிக் கொல்லிகளை வைக்க வேண்டும் அனைத்துக் களைக் கொல்லிகளையும் பயன்படுத்துவதற்கு முன்னர் நீரில் கலக்க வேண்டியுள்ளது. சேற்று நீர் களைக் கொல்லிகளின் திறனை குறைத்து விடும் என்பதால் தூய்மையான நீரையே பயன்படுத்த வேண்டும். தெளிகலன், தூவான்கள் முனைகள் ஆகியவற்றை பயன்படுத்திய பின் தூய்மையான நீரில் நன்கு கழுவ வேண்டும். பரிந்துரைக்கப்பட்டால் ஒழிய இரசயானங்களை ஒன்று சேர்த்து பயன்படுத்தக் கூடாது. ஏனெனில் அவைகள் களை கட்டுப்பாட்டுத் திறனை குறைக்கும் என்பதோடு நெற்பயிருக்கு தீங்கு விளைவிக்கும். இரசயானங்களை பரிந்துரைக்கப்பட்ட அளவிலேயே பயன்படுத்திட வேண்டும். பல்முனை தெளிப்பான் மூலம் களைக்கொல்லி பயன்படுத்துதல் விடுபடுதலை தவிர்க்க நில மட்டத்திலிருந்து சற்றே ஒன்றின் மேல் ஒன்றாக தெளிப்பு உயரத்தை அமைத்து விரும்பத்தக்க தெளிப்பு முறையை அடையலாம் வயல் முழுவதும் சீராக விடுபடுதல்கள் இல்லாமல் தெளிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் கைகளை எடுக்க வேண்டி இருப்பதால் அதிக செலவினமாகும் மற்றும் விலையுயர்ந்த இரசயானங்கள் விரயமாகும் என்பதால் அதிகளவிலும் தெளிக்கக் கூடாது. இதனை அடைவதற்கு சிறந்த வழி என்னவெனில் தட்டையான விசிறி முனைகளைக் கொண்ட பல் முனை தெளிப்பான்களை (உதாரணம் மும்முனை தெளிப்பான்கள்) பயன்படுத்திடலாம். இவைகள் மண் மீது சரியான உயரத்தில் (சுமார் 50 செ.மீ) ஒன்றின் மேல் ஒன்றாக தெளிக்கும் தன்மை வாய்ந்தவை. முன் முனைப்புக்களைக் கொல்லிகளின் இலக்கு மண்ணின் மேற்பரப்பாகவும் அல்லது பின் முனைப்புக் களைக் கொல்லிகளின் இலக்கு களைகளாவும் இருப்பதால் தூவிகளை களைகளுக்கு மேல் 50 செ.மீ உயரத்தில் வைத்து பயன்படுத்த வேண்டும். தேர்திறனற்ற களைக் கொல்லிகள் நிலத்தை பண்படுத்தாத நேரடி புழுதி நெல் விதைப்பு முறையில் விதைப்பிற்கு முன் நிலத்தில் ஏற்கெனவே இருக்கும் தாவரங்களை இத்தகையகளைக்கொல்லிகள் அழிக்க பயன்படுத்தப்படுகின்றன. கிளைபோசெட் (எக்டருக்கு 2.5 லிட்டர்) மற்றும் பாராகுவாட்(எக்டருக்கு 2 லிட்டர்) ஆகியன பரிந்துரைக்கப்படுகின்றன. வயல்களில் பல்லாண்டு களைகளின் தாக்குதல் அதிகமிருப்பின் கிளைபோசெட் பயன்படுத்திடலாம். பாராகுவாட் பயன்படுத்தக் கூடாது. தெளிப்பதற்கான பாதுகாப்பான ஆடைகள் விதைப்பிற்கு பின் முக்கியமாக கவனிக்க வேண்டியவை --- முன் முளைப்பு களைக்கொல்லிகளை பயன்படுத்துவதற்கு முன்னர் மண் மேற்பரப்பில் போதிய ஈரம் இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். --- ஈரமான மண்ணில் முன் முளைப்புக் களைக் கொல்லிகளை உபயோகிக்கும் போது அதிக அளவு தண்ணீரை பயன்படுத்த வேண்டும். --- மண்ணில் ஈரப்பதம் இல்லையெனில் முன் முளைப்புக் களைக் கொல்லிகளை பயன்படுத்திய பின் 24 மணி நேரத்தில் நீர்ப் பாய்ச்ச வேண்டும். களையின் வகையைப் பொறுத்தே களைக்கொல்லி தேர்வு செய்யப்படுகிறது. நெற்பயிரின் அனைத்து களைகளையும் ஒரே களைக்கொல்லி கட்டுப்படுத்தாது. முன் முளைப்பு களைக்கொல்லியை விதைத்த பின் 1-3 நாட்களில் நெற்பயிர் முளைப்பதற்கு முன் பயன்படுத்துவதும் தொடர்ந்து விதைத்த பின் 15-25 நாட்களில் பின் முளைப்பு களைக்கொல்லியை பயன்படுத்தியதும் பல தருணங்களில் களைகளை திறம்பட கட்டுப்படுத்தும் சிறந்த முறையாக இருந்திருக்கிறது. இது முன் முளைப்பு களைக் கொல்லியாக பென்ட்டிமெத்தலின் அல்லது ஆக்ஸாடயர்ஜில் ஆகியனவற்றையும் பின் முளைப்பு களைக் கொல்லியாக பிஸ்பைரி பாக்சோடியம் அல்லது அஸிம் சல்பியூரான் அல்லது பிஸ்பைரி பாக்சோடியத்துடன் அஸிம் சல்பியூரான் கலந்து பயன்படுத்துவது போல ஆகும். இருப்பினும் மழை காரணமாக முன் முளைப்பு களைக் கொல்லியை பயன்படுத்த முடியாத போதும் அல்லது மண் அதிகம் காய்ந்திருப்பதால் தெளிக்க முடியாமல் போகின்ற தவறான மேலாண்மை முறைகளின் போதும், வயலில் உள்ள களைகளின் வகைகளைப் பொறுத்து விதைத்தபின் 15 நாட்களில் பின்முளைப்பு களைக் கொல்லியை பயன்படுத்தலாம். மண் உலர்ந்திருக்கும் போது முன் முளைப்பு களைக் கொல்லியை பயன்படுத்தக் கூடாது. தேவைப்பட்டால் முதலில் நீர் பாய்ச்ச வேண்டும். பின் முளைப்பு களைக் கொல்லியை பயன்படுத்திய பின் வறட்சியில் இருக்க விடக் கூடாது. மழை பெய்து கொண்டிருக்கும் போதோ அல்லது 6 - 8 மணி நேரத்திற்குள் மழை பெய்ய வாய்ப்பு தென்பட்டாலோ களைக் கொல்லியை உபயோகப்படுத்தக் கூடாது. இயற்பியல் சார்ந்த களை கட்டுப்பாடு கைக்களை அல்லது இயந்திரங்களின் மூலம் களைகளை கட்டுப்படுத்துவதே இயற்பியல் சார்ந்த களைக் கட்டுப்பாடு ஆகும். ஆள் பற்றாக்குறை மற்றும் அதிகரித்துவரும் ஆள் சம்பளம் போன்ற காரணங்களினால் கைக்களைகளின் மூலமாகவே முற்றிலும் களைகளை கட்டுப்படுத்த முடியும் என்பது பொருளாதார ரீதியாக நடைமுறையில் சாத்தியமாகாது. இருப்பினும் களைக்கொல்லி பயன்பாட்டில் தப்பித்து விடும் களைகளை நீக்க ஒன்று அல்லது 2 கைக் களை எடுப்பது வலுவாக பரிந்துரைக்கப்படுகிறது. ஏனெனில் அக்களைகள் களை விதைகளை உற்பத்தி செய்வதுடன் மண்ணில் குவிந்து விடவும் வாய்ப்பிருப்பதால் அதனை தவிர்க்க கைக்களை அவசியமாகிறது. களையெடுப்பில் ஆள்தேவையை குறைக்க இயந்திர களையெடுப்பு உதவுகிறது. கோனோவீடர், இயந்திரகளையெடுப்பான் மற்றும் பிற கை களையெடுப்பான்கள் இப்பகுதியில் கிடைக்கின்றன. அவைகளை ஒருங்கிணைந்த களை மேலாண்மையில் ஒரு அங்கமாக சேர்த்துக் கொள்ளலாம். புழுதியில் நேரடி நெல் விதைப்பில் களைகளை கட்டுப்படுத்திட ஒற்றை மற்றும் இரண்டு வரிசைகளுக்கு கையாள் இயக்கக் கூடிய கோனா வீடர் (முன் மற்றும் பின் பக்க தோற்றம்) இயந்திர களையெடுப்பான் மேற்பரப்பில் எஞ்சியிருக்கும் கழிவுகளை இருத்தி வைத்தல் நிலத்தை பண்படுத்தாத முறையில் மண்ணின் மேற்பரப்பில் விடப்படுகின்ற தாவரங்களின் எஞ்சிய கழிவுகள் களைகளை வளர விடாமல் தடுத்து உதவுகின்றன. ஆதாரம்: விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச வேளாண் நிதிக்கான வளர்ச்சித் திட்டம் (IFAD) “வளங்களை சேமிக்கும் தொழில்நுட்பம்" திட்டம் (IFAD மானியம் எண் C - ECG-46-IRRI, துணை திட்டம் 2) மற்றும் தெற்காசியாவிற்கான தானிய திட்ட துவக்கத்தின் (CSISA) பதிப்பு