நிலம் சமன் செய்தல் முக்கியமாக கவனிக்க வேண்டியவை 1 --- வயல்கள் நன்கு சமன்செய்யப்பட்டிருக்க வேண்டும். நிலத்தை நன்கு சமன் செய்வதன் மூலம் புழுதி விதைப்பில் அதிக மகசூல் மற்றும் போதிய உற்பத்தியை பெறமுடியும். லேசர் கருவி மூலம் புழுதி மண்ணை சமன் செய்யும் போது நிலம் நன்கு சமன் செய்யப்படுகிறது. லேசர் கருவி மூலம் மண்ணை சமன் செய்தல் நன்கு சமன் செய்யப்பட்ட வயல்களில் மட்டுமே விதைப்பு / நடவு கருவி கொண்டு விதைகளை துல்லியமாக விதைக்க முடியும். இதன் மூலமே நீர்ப்பாசனம் சரியாக அளிக்க முடிவதால் பயிர் வளர்ச்சியும் ஒரே சீராகி உயரிய களைக் கட்டுப்பாட்டுத் திறன் மற்றும் உர உபயோகத் திறனை பெற இயலும். நிலம் சமன் செய்வதன் மூலம் பாசன நீர்த்தேவையும் குறைகிறது. உழுதல் குறிப்பிட்ட வயலைச் சமன் செய்ய வேண்டிய தேவை மற்றும் களை ஊடுருவலைப் பொறுத்து உழாமலோ அல்லது சாதாரணமாக உழுதோ புழுதியில் நேரடி நெல் விதைப்பு விதைக்கலாம். i) பாரம்பரிய உழவு விதை மண்ணில் நன்கு ஊன்றுவதற்கு ஏதுவாக மண் சிறிய துகள்களாகும் அளவிற்கு5-10 செ.மீ ஆழத்திற்கு நன்கு உழப்பட வேண்டும். மண்வகை மற்றும் நில அமைப்பைப் பொறுத்து இரண்டு முறை கொழு முனைகளைக் கொண்டும் ஒருமுறை ரோட்டவேட்டர் கொண்டும் நிலத்தை உழ வேண்டும். ii) பண்படுத்தாமை (ஜூரோ டில்லேஜ்) வயலில் ஏற்கெனவே உள்ள களைகளை அழிக்க கிளை போசெட் அல்லது பாராகுவாட் போன்ற தேர்திறனற்ற களைக் கொல்லிகளை பயன்படுத்தலாம். களைகள் ஆங்காங்கு தென்பட்டால் வயல் முழுவதும் மருந்தை தெளிக்காமல் களைகள் இருக்கும் இடத்தில் மட்டுமே தெளிப்பது சிறந்தது. விதைப்பிற்கு குறைந்தது 5 நாட்களுக்கு முன்னர் கிளைபோசெட் உபயோகிக்க வேண்டும். அதேவேளை பாராகுவாட் விதைப்பிற்கு முன்னர் 2-3 நாட்களில் உபயோகிக்கலாம். களைகள் நன்கு வளரும் தருணத்தில் களைக் கொல்லிகளை வறட்சியில்லா சூழலில் பயன்படுத்த வேண்டும். வறட்சி நிலவும் சூழலில் களையை நன்கு கட்டுப்படுத்த களைக்கொல்லி இடுவதற்கு 5-7 நாட்கள் முன்னரே லேசாக நீர் பாய்ச்சி அதன்பிறகு களைக்கொல்லியை பயன்படுத்தலாம். பல்லாண்டு களைகள் இருப்பின் பாராகுவாட் பயன்படுத்தக் கூடாது. இச்சூழலில் கிளையோசெட் பயன்படுத்த வேண்டும். முக்கியமாக கவனிக்க வேண்டியவை --களைக் கொல்லிகள் மண் துகள்களிலும் உலோக பரப்புகளிலும் பிணைப்பை ஏற்படுத்தும் என்பதால் கரைசலை தயாரிக்க தூய்மையான தண்ணீரையும், பிளாஸ்டிக் கொள்கலனையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும். --முழு பரப்பிலும் தெளிக்க தட்டை விசிறி முனைகளைக் கொண்ட பல்முனை தெளிப்பான்களை பயன்படுத்தவும். --களைக் கொல்லிகளை உபயோகிக்கும் போது பாதுகாப்பான உடைகளை அணியவும். ஆதாரம்: விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச வேளாண் நிதிக்கான வளர்ச்சித் திட்டம் (IFAD) “வளங்களை சேமிக்கும் தொழில்நுட்பம்" திட்டம் (IFAD மானியம் எண் C - ECG-46-IRRI, துணை திட்டம் 2) மற்றும் தெற்காசியாவிற்கான தானிய திட்ட துவக்கத்தின் (CSISA) பதிப்பு