நெல் அறுவடையில் விதையை சேமிப்பது எப்படி?

நெல் அறுவடை தொடங்கும் நேரத்தில் விதைப்பண்ணை அமைத்துள்ள விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்துள்ள நெல் ரகத்தினை பிற ரகத்துடன் கலக்காத வகையில் அறுவடை செய்து தனித்தனியாக சேமித்துவைக்க வேண்டும்.

பயிர் அறுவடை செய்யும் இயந்திரத்தை நன்கு சுத்தம் செய்து பின்பு பயன்படுத்த வேண்டும்.

முதலில் அறுவடை செய்யப்படும் நெல்மணிகளை விதைக்கு பயன்படுத்தக் கூடாது.

அறுவடை செய்த விதைக் குவியல்களை நன்கு சுத்தம் செய்து களங்களில் உலர வைக்க வேண்டும்.

விதைகளின் ஈரப்பதத்தை படிப்படியாகக் குறைத்து 12 முதல் 13 சதம் வரும் வரை உலர வைக்க வேண்டும். பின்னர், நன்கு உலர்ந்த விதைகளை புதிய கோணிப் பைகளில் சேமிக்க வேண்டும்.

மேலும், அடையாளத்துக்காக விதைகளின் ரகத்தை அதில் எழுதி வைக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆதாரம்: திருநெல்வேலி விதைப் பரிசோதனை மையம்