பாரம்பரியம் (கோ 99043 * கோ.கு 93076) சிறப்பியல்புகள் முன்பட்டத்திற்கேற்ற சிறந்த இரகம் அதிக நடவு கரும்பு மகசூல் – 154 டன் / எக்டர் மிக அதிக சர்க்கரை மகசூல் – 13.05 சதம் அதிக சர்க்கரை மகசூல் – 20.5 டன் / எக்டர் பூக்காத தன்மையுடையது செவ்வழுகல் நோய்க்கு மிதமான எதிர்ப்பு திறனுடையது வறட்சி மற்றும் அதிக நீர்தேக்கத்தை தாங்கும் திறனுடையது சுணையற்றது மற்றும் தோகை மிக எளிதில் உரியக்கூடியது. மறுதாம்பு பயிரில் அதிக மகசூல் – 146 டன் / எக்டர் சாகுபடி முறைகள் பாரம்பரியம் : கோ 99043 * கோ.கு 93076 வயது : 330 நாட்கள் பட்டம் : முன் மற்றும் சிறப்பு பட்டம் கரணை நேர்த்தி : கார்பண்டசிம் 50 கிராம், 1 கிலோ நீர்த்த சுண்ணாம்பு, 1 கிலோ யூரியா மேலும் 200 மில்லி மாலத்தியான் ஆகியவற்றை 100 லி நீரில் கரைத்து அதில் ஒரு ஏக்கருக்கு தேவையான விதை கரணைகளை சுமார் பதினைந்து நிமிடங்கள் ஊர வைத்து பின் நடவு செய்ய வேண்டும். விதை அளவு : ஏக்கருக்கு 30,000 இரு பரு கரணைகள் போக்கிடங்களை பூர்த்தி செய்தல் : நட்ட 25 – 30 நாட்களுக்குள் வளர்ந்த கரும்பு நாற்றை நட வேண்டும் இடைவெளி : 120 * 120 செ.மீ. அல்லது 165 * 165 செ.மீ. இடைவெளியில் 25 * 25 செ.மீ. இணை வரிசை நடவு களை நிர்வாகம் (ஏக்கருக்கு) : தனி கரும்பு பயிராக இருந்தால் களை முளைக்கும் முன் தெளிக்கக்கூடிய களைக் கொல்லியான அட்ரஸின் 1 கிலோ 200 லிட்டர் தண்ணீரில் கலந்து நடவு செய்ய 3 அல்லது 4வது நாள் நிலத்தில் சீராக படும்படி தெளிக்க வேண்டும். ஊடுபயிர் சாகுபடி செய்யும் பொழுது ஆலோக்குலோர் 1 லிட்டர் அல்லது பேசாலின் 1 லி (அ) பென்டிமெத்தலின் 1 லிட்டரை 200 லிட்டரை தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். அகன்ற இலை மற்றும் கொடி வகை களைகள் முளைகள் நிலையில் கட்டுப்படுத்த 2 – 4 – D அமைன் உப்பு 1 கிலோ + மெட்ரிபூசின் 600 கிராம் + 200 லி தண்ணீரில் கலந்து களைகள் மேல்படும்படி தெளிக்க வேண்டும். டிராக்டர் மற்றும் பவர்டில்லர் மூலம் இயங்கும் களை எடுக்கும் கருவி கொண்டு களைகளை கட்டுப்படுத்தலாம். உரம் : மண் பரிசோதனைப்படி உரமிடுவது சிறந்தது அல்லது கீழ்க்கண்ட பொதுவான பரிந்துரைகளை கடைப்பிடிக்க வேண்டும். மொத்த உர அளவு (கிலோ / ஏக்கருக்கு) உரமிடும் காலம் தழை மணி சாம்பல் அடியுரம் - 40 - நட்ட 30ம் நாள் 40 - 27 நட்ட 60ம் நாள் 40 - 27 நட்ட 90ம் நாள் 40 - 26 மொத்தம் 120 40 80 கரும்பு பூஸ்ட்டர் நுண்ணூட்டம் : 1, 1½ மற்றும் 2 கிலோ நடவு செய்த 45, 60 மற்றும் 75வது நாள் 200லி. தண்ணீரில் கலந்து இலைமேல் தெளிக்கவும். சொட்டு நீர் பாசன முறைக்கான உரப்பரிந்துரை (கிலோ கிராம் / ஏக்கர்) பயிர்நிலை (பயிர் நட்ட்திலிருந்து) தழை மணி சாம்பல் 0-30 15.8 0 0 31-60 20.2 10.5 3.6 61-90 22.6 8.2 5.8 91-120 24.1 6.5 6.5 121-180 23.1 0.0 16.2 181-220 4.2 0.0 14.0 நுண்ணுயிர் உரங்கள் : அசோஸ்பைரில்லம் மற்றும் பாஸ்போபாக்டீரியா உயிர் உரங்கள் ஒவ்வொன்றும் ஏக்கருக்கு 1 கிலோ என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்தோடு கலந்து, நடவு சால்களில் கரும்பு நட்ட 40, 70 மற்றும் 100வது நாள் இடவேண்டும். தோகை உரித்தல் : நட்ட 5 மற்றும் 7ம் மாதம் விட்டம் கட்டுதல் : நட்ட 7ம் மாதம் நீர் பாசனம் மொத்த நீர்த்தேவை : 2500 மி.மீ நட்ட முதல் 35 நாட்கள் (முளைப்பு பருவம்) : 9 நாட்களுக்கு ஒரு முறை நட்ட முதல் 36 - 100 நாட்கள் (கிளைப்பு பருவம்) : 8 – 10 நாட்களுக்கு ஒரு முறை நட்ட முதல் 101 - 270 நாட்கள் (வளர்ச்சி பருவம்) : 8 நாட்களுக்கு ஒரு முறை நட்ட முதல் 271 - 360 நாட்கள் : 10 -15 நாட்களுக்கு ஒரு முறை பயிர் பாதுகாப்பு பொதுவாக முக்கியமான நோய் மற்றும் துளைப்பான்களுக்கு மிதமான எதிர்ப்புத் திறன் கொண்ட இரகமாக இருந்தாலும் தேவை ஏற்பட்டால் பொருளாதார சேத நிலைக்கேற்ப பயிர் பாதுகாப்பு முறைகளை கையாள வேண்டும். அறுவடை நன்கு முதிர்ந்த கரும்புகளை தரை மட்டத்தில் வெட்டவேண்டும். கரும்பு நேராக வளரக் கூடியதால் நான்கு அல்லது ஐந்திரை அடிபார் நடவில் இயந்திர அறுவடைக்கு மிக ஏற்றது. சராசரி கரும்பு மகசூல் : 62 டன்கள் / ஏக்கர் சர்க்கரைச் சத்து : 13.05% சர்க்கரை மகசூல் ; 8.1 டன்கள் / ஏக்கர் கேள்வி பதில் 1. கரும்பு பயிருக்கு எத்தனை நீர்ப்பாசனங்கள் தேவைப்படும்? 13 லிருந்து 15 நீர்ப்பாசனங்கள். 2. கரும்பு பயிரின் ஒவ்வொரு நிலையிலும் கொடுக்கப்பட வேண்டிய நீர்ப்பாசன இடைவெளிகள் யாவை? கரும்பு பயிரின் ஒவ்வொரு நிலையிலும் கொடுக்கப்பட வேண்டிய நீர்ப்பாசன இடைவெளிகள் கீழே தரப்பட்டுள்ளன: நிலைகள் நீர்ப்பாசன இடைவெளி நாட்கள் மணற் பகுதி களி மண் பகுதி தூர் விடும் நிலை (36 முதல் 100 நாட்கள்) 8 10 வீரிய வளர்ச்சி நிலை (101 - 270 நாட்கள்) 8 10 முதிர்ச்சி நிலை (271 – அறுவடை) 10 14 3. நிலமட்ட சொட்டுநீர்ப் பாசனம் என்றால் என்ன? சொட்டு நீர் சிறு குழாயினைச் சுற்றி முன் தீர்மானிக்கப்பட்ட தொலைவில் பொருத்தப்பட்டிருக்கும் உமிழி வழியாக நீரை சொட்டுக்களாக அல்லது சிறிய நீரோட்டமாக மண் நிலப்பரப்புக்கு அளிப்பதே நிலமட்ட சொட்டுநீர் பாசனம் ஆகும். இவை இரு வகைப்படும். (i) இணைய சொட்டு நீர்ப் பாசனம் (ii) ஒருங்கிணைந்த சொட்டு நீர்ப் பாசன வகை. ஒருங்கிணைந்த சொட்டுநீர் வரிசையே கரும்புப் பயிருக்கு பரிந்துரைக்கப்படுகிறது. 4. கீழ்மட்ட சொட்டு நீர்ப் பாசனம் என்றால் என்ன? சொட்டு நீர் வரிசையின் உட்சுவரில் பொருத்தப்பட்டிருக்கும் உமிழி வழியாக மண் பரப்புக்கு நீர் அளிக்கப்படுகிறது. இதன் வெளிவிடும் அளவு (1.0-3.0 எல்பீஹச்(LPH). பொதுவாக ஒருங்கிணைந்த மேற்றல சொட்டுநீர்ப் பாசன அளவைப் போன்றதே. இம்முறைப் பாசனம் சற்று வித்தியாசமானது, மேலும் துணைப்பாசன முறையில், நிலநீர்மட்ட கட்டுப்பாட்டினால் வேர்மண்டலத்திற்கு பாசனம் அளிக்கும் இம்முறையோடு குழம்பத் தேவையில்லை. ஒருங்கிணைந்த சொட்டு நீர் வரிசையை (மெல்லிய அல்லது தடிப்பான சுவருடைய) மண் வகை மற்றும் பயிர் தேவைகளின் அடிப்படையில் முன்னரே தீர்மானித்த மண் ஆழத்தில் பொருத்த வேண்டும். இரண்டு முக்கியமான கீழ்மட்ட சொட்டு நீர்ப் பாசனத்தின் வகைகள் (i) "ஒரு பயிர்" (ii) "பல பயிர்" எனப்படும். ஆதாரம்: கரும்பு ஆராய்ச்சி நிலையம், சிறுகமணி