தழைச்சத்து அறிகுறிகள் பயிர்கள் வளர்ச்சி குன்றி இருக்கும் அடி இலைகள் மஞ்சள் நிறமாக மாறும் வயல்வெளி முழுவதும் மஞ்சள் கலந்த பச்சை நிறமாக காட்சியளிக்கும் தூர்கட்டுதல் குறைந்து காணப்படும் கதிரில் மணி பிடித்தல் குறைந்து விடும் நிவர்த்தி எக்டருக்கு 330 கிலோ யூரியாவை பிரித்து மூன்று முறை(110 கிலோ/ ஏக்கர்) என்ற அளவில் மண்ணில் இடவேண்டும். 10 கிராம் யூரியாவை 1 லிட்டர் நீரில் கரைத்து 10 நாள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்கவேண்டும். மணிச்சத்து அறிகுறிகள் பயிர்கள் வளர்ச்சி குன்றியிருக்கும் தூர்கட்டுதல் குறைந்துவிடும் இலைகள் கரும்பச்சை நிறமாக மாறி நெட்டுக்குத்தாக இருக்கும் மணிப்பிடித்தல் குன்றிவிடும் நிவர்த்தி 6 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை 100 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து. மறுநாள் நன்கு கலக்கி, பின் காலையில் மேலாக வடித்து பயிர்கள்மீது 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கவேண்டும். சாம்பல்சத்து அறிகுறிகள் நீண்ட பழுப்புநிறப் புள்ளிகள் இலையின் நடுவிலிருந்து நுனிவரைக் காணப்படும் முதிர்ந்த இலைகளில் இப்புள்ளிகள் அதிகமாகக் காணப்படும். நிவர்த்தி 5 கிராம் பொட்டாசியம் குளோரைடை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்க வேண்டும். காப்பர் சத்து அறிகுறிகள் இலைகள் மஞ்சள் நிறமாகக் காணப்படும். இலைகள் சுருண்டு இலையின் நுனியிலும், விளிம்புகளிலும் திருகி இருக்கும். தலைப்பகுதிகள் வெளிரிக் காணப்படும் நிவர்த்தி காப்பர் சல்பேட் 0.3% (3 கிராம் /லிட்டர்) தழை தெளிப்பாக தெளிக்கவும் மாங்கனீசுசத்து அறிகுறிகள் நரம்பிடைப் பகுதியில் மஞ்சள் நிறக் கோடுகள் இலை நுனியிலிருந்து அடிவரைச் செல்லும். பின்னர் இலை முழுவதும் பழுப்பு நிறமாக மாறி காய்ந்து விடும். நிவர்த்தி 5 கிராம் மாங்கனீசு சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து 15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும். துத்தநாகச்சத்து அறிகுறிகள் இலையின் அடிப்பாகத்தில் நடு நரம்பின் இருபுறமும் பட்டையான மஞ்சள் நிறக் கோடுகள் தோன்றும். சிவப்பு கலந்த பழுப்பு நிறம் கீழ் இலைகளில் காணப்படும். இலைப் பரப்பு குறைந்துவிடும். மணி பிடித்தல் காலதாமதாமாகும். வளர்ச்சி சீராக இருக்காது. நிவர்த்தி மண்ணில் அடியுரமாக 25 கிலோ துத்தநாக சல்பேட் இடவேண்டும். 5 கிராம் துத்தநாக சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து இலை வழியாக 15 நாள் இடைவெளியில் இருமுறை தெளிக்க வேண்டும். ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம்