த.வே.ப.க. வீரிய ஒட்டு நெல் கோ 4 பெற்றோர் : கோ எம் எஸ் 23ஏ/சிபி 174 ஆர் வயது : 130 – 135 நாட்கள் பருவம் : பின்சம்பா / தாளடி மகசூல் : 7350 கிலோ / எக்டர் கோ (ஆர்) 49 – ஐ விட 17 சதமும், 27 பி 11 என்ற தனியார் வீரிய ஒட்டு நெல்லைவிட 14 சதமும் அதிக மகசூல் தரவல்லது. சிறப்பியல்புகள் குலைநோய் மற்றும் பழுப்பு புள்ளி நோய்க்கு எதிர்ப்புத்திறனும், பச்சை தத்து பூச்சி, வெண் முதுகு தத்துப்பூச்சி, இலையுறை அழுகல், இலையுறை கருகல் மற்றும் துங்ரோ ஆகிய நோய்களுக்கு மிதமான எதிர்ப்புத்திறனும் உடையது. மத்திய சன்ன அரிசியை உடைய இந்த இரகம் நல்ல அரவைத்திறன் கொண்டது. அமைலோஸ் என்ற மாவுப் பொருள் இடைப்பட்ட அளவில் இருப்பதால் சமைப்பதற்கு உகந்தது. தமிழ் நாட்டில் பின் சம்பா மற்றும் தாளடி பருவத்தில் பயிரிட ஏற்றது. சாகுபடி குறிப்புகள் சாதாரண முறை விதையளவு : எக்டருக்கு 15 கிலோ நாற்றங்கால் : 15 சென்ட் விதை நேர்த்தி : ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் டி.ஏபி. : ஒரு சென்டுக்கு 1 கிலோ நாற்றின் வயது : 25 நாட்கள் நடவு இடைவெளி : 20 * 20 செ.மீ. (சதுர மீட்டருக்கு 25 குத்துக்கள்) திருந்திய நெல் சாகுபடி முறை விதையளவு எக்டருக்கு 5 கிலோ நாற்றங்கால் 2.5 சென்ட் (மேட்டுப்பாய் நாற்றங்கால்) விதை நேர்த்தி ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் நாற்றின் வயது 15 நாட்கள் நடவு இடைவெளி 25 * 25 செ.மீ. (சதுர மீட்டருக்கு 16 குத்துக்கள்) களை மேலாண்மை ரோட்டரி வீடர் / கோனோவீடர் நட்டபின் 10 – 15 நாட்கள் இடைவெளியில் 3 முதல் 4 முறை நடத்துதல். உர அளவு மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரமிடும் அல்லது கீழ் குறிப்பிட்ட அளவில் இடவும் தொழு உரம் 12.5 டன் / எக்டர் (அல்லது) பசுந்தாள் உரம் 6.25 டன் / எக்டர் உர அளவு (கிலோ/எக்டர்) தழை மணி சாம்பல் துத்தநாக சல்பேட் அடியுரம் - 50 25 25 நடவுசெய்த 15 - 20 நாட்களில் 30 - - - நடவுசெய்த 35 - 40 நாட்களில் 30 - - - நடவுசெய்த 55 - 60 நாட்களில் 30 - 12.5 - நடவுசெய்த 75 - 80 நாட்களில் 30 - - - பூக்கும் தருணத்தில் 30 - 12.5 - உயிர் உரங்கள் அசோஸ்பைரில்லம் : 600 கிராம் / எக்டர் (விதை நேர்த்தி) 1000 கிராம் / எக்டர் (நாற்றுக்களின் வேர் நனைத்தல்) 2000 கிராம் / எக்டர் (நடவு செய்வதற்குமுன் வயலில் தெளிக்க வேண்டும்) அசோலா : எக்டருக்கு 500 கிலோ அளவில் நடவு செய்த 10 நாட்களில் இட வேண்டும் சூடோமோனாஸ் : எக்டருக்கு 2.5 கிலோ அளவில் நடவு செய்த 45 மற்றும் 60 ஆம் நாள் இடவும். களை நிர்வாகம் : பூட்டாகுளோர் அல்லது தயோ பென்கார்ப் 2.5 லி/எக்டர் நட்ட மூன்றாம் நாளில் இடவும் பயிர் பாதுகாப்பு நாற்றாங்கால் / நடவு வயல் : பூச்சி மற்றும் நோய்களின் பொருளாதார சேத நிலை அறிந்து ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை பின்பற்றவும். நெல் பழ நோய் பாதுகாப்பு அறுவடை ; கோசைட் – 101 – 400 கிராம் / ஏக்கர் அறுவடை : பயிர் பூத்த 30 – 35 நாட்களில் அறுவடை செய்யவும் கோ.ஆர்.எச் 3 வீரிய ஒட்டு நெல் பெற்றோர் : டிஎன்ஏயுசி.எம்.எஸ். 2 ஏ/சி.பி.87 ஆர் வயது : 115 நாட்கள் பருவம் : சொர்ணவாரி / கார் / குறுவை / நவரை பட்டங்களில் பயிரிட ஏற்றது. மகசூல் : 7500 கிலோ / எக்டர் சிறப்பியல்புகள் குறுகிய கால பயிர் (115 நாட்கள்) உயர் விளைச்சல் இரகங்களை விட 24 சதவிகிதம் அதிக மகசூலை தருவது. *முந்தைய வீரிய ஒட்டு நெல்லைவிட 13% அதிக மகசூலை தரவல்லது. குலை நோய் மற்றும் துங்ரோ வைரஸை தாங்கும் சக்தி பச்சை தத்துப்பூச்சிக்கு எதிர்ப்பு சக்தியும், வெண்முதுகு தத்துப்பூச்சி மற்றும் புகையானையும் தாங்கும் சக்தி. நடுத்தர சன்ன அரிசி வெள்ளை நிற, வாசனை இல்லாத மற்றும் ஒட்டும் தன்மை இல்லாத அரிசி நல்ல சமையல் பண்பு ஒன்று போல் பூக்கும் தன்மையுடைமை பெற்றோரை உடையது. சாகுபடி குறிப்புகள் – சாதாரண முறை விதையளவு : எக்டேருக்கு 15 கிலோ நாற்றங்கால் : எக்டேருக்கு 15 சென்ட் விதைநேர்த்தி : ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டாசிம் விதைப்பு : ஒரு சென்ட்டுக்கு 1 கிலோ விதை மற்றும் 2 கிலோ டி.ஏ.பி (விதையை பரவலாக விடுவதால் நன்கு தூர்கட்டிய நாற்றுகள் கிடைக்கும்) நாற்றின் வயது : 20 நாட்கள் நடவு இடைவெளி : 15 * 10 செ.மீ. (அ) 20 * 20 செ.மீ நடவுமுறை : ஒரு குத்துக்கு நன்கு தூர்கட்டிய ஒரு நாற்று களைக்கொல்லி : நட்ட மூன்றாம் நாள் (பூட்டோகுளோர் 400 மி.லி) திருந்திய நெல் சாகுபடி முறை விதையளவு : எக்டருக்கு 5 கிலோ நாற்றங்கால் : 2.5 சென்ட் (மேட்டுப்பாய் நாற்றங்கால்) விதைநேர்த்தி : ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் சூடோமோனாஸ் நாற்றின் வயது : 15 நாட்கள் நடவு இடைவெளி : 25 * 25 செ.மீ. (சதுர மீட்டருக்கு 16 குத்துக்கள்) களை மேலாண்மை : ரோட்டரி வீடர் / கோனோவீடர் நடத்துதல் நட்டபின் 10 – 15 நாட்கள் இடைவெளியில் 3 முதல் 4 முறை உர அளவு : மண் பரிசோதனை பரிந்துரைப்படி உரமிடவும் அல்லது கீழ் குறிப்பிட்ட அளவில் இடவும் தொழு உரம் : 12.5 டன் / எக்டர் (அல்லது) பசுந்தாள் உரம் : 6.25 டன் / எக்டர் உரமிடுதல் (எக்டருக்கு) தொழு உரம் : 12500 கிலோ அல்லது பசுந்தாள் உரம் : 6250 கிலோ உர அளவு (கிலோ / எக்டர்) தழைச்சத்து மணிச்சத்து சாம்பல் சத்து அடியுரம் 50 60 20 தூர் பிடிக்கும் பருவம் 50 - 20 கதிர் உருவாக்கும் பருவம் 25 - 10 பூக்கும் தருணம் 25 - 10 துத்தநாக சல்பேட் : 25 கிலோ / எக்டர் பயிர் பாதுகாப்பு நாற்றங்கால் நடவு வயல் : பூச்சி மற்றும் நோய்களின் பொருளாதார சேதநிலை அறிந்த ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு முறையை பின்பற்றவும். அறுவடை : பயிர் பூத்த 25 – 30 நாட்களில் அறுவடை செய்யவும். வீரிய ஒட்டு CORH - 2 தொழில்நுட்பங்கள் ஆதாரம்: இந்திய உழவர் உரக்கூட்டுறவு நிறுவனம், திருச்சி