டிஜிட்டல் வேளாண் இயக்கம் டிஜிட்டல் வேளாண் இயக்கத்திற்கு மத்திய அரசு 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் நாட்டில் மண்வளம் உள்ளிட்ட விவசாயம் சார்ந்த பணிகளில் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பை உருவாக்குவது இதன் நோக்கமாகும். விவசாயிகளை மையமாகக் கொண்டு அவர்களுக்கு புதுமை கண்டுபிடிப்புகள் குறித்த தீர்வுகளை டிஜிட்டல் முறையில் வழங்கவும், பயிர் வகைகள் தொடர்பான தகவலை அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நேரத்தில் வழங்க இந்த இயக்கம் செயல்படும். இந்த டிஜிட்டல் இயக்கத்தை செயல்படுத்துவதற்காக தமிழகம் உட்பட 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் மூலம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டது. டிஜிட்டல் அடிப்படையிலான விவசாயிகள் பதிவேட்டில் தரவுகளை அந்தந்த மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது. இவை தவிர இதில் பதிவேற்றம் செய்யப்படும் தரவுகள் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் விதிமுறைகளை முழுமையாகப் பின்பற்றி பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. மேலும், இந்த டிஜிட்டல் சேவைகள் அனைத்து விவசாயிகளுக்கும் கைபேசி வாயிலாக கிடைக்கும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதற்கும், அதனை விவசாயிகள் பயன்படுத்திக் கொள்வதற்கும் ஏதுவாக நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப ஆதரவு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படும். இந்த டிஜிட்டல் வேளாண் இயக்கம் பல்வேறு மத்திய அமைச்சகங்கள், மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் ஆகியவற்றுடன் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த டிஜிட்டல் வேளாண் இயக்கத்தின் கீழ், டிஜிட்டல் முறையில், பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு தமிழக அரசுக்கு மத்திய அரசின் பங்களிப்பாக 30 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்