மண் கார்பன் ஊக்கத்தொகைத் திட்டம் இந்தியாவின் வேளாண் கார்பன் சந்தை கொள்கை நிலையிலிருந்து கள நிலைக்கு நகர்ந்துள்ளது. அதன்படி பஞ்சாப், ஹரியானாவில் உள்ள 2500-க்கும் மேற்பட்ட சிறு விவசாயிகள் வேளாண்மை மறு உருவாக்க முறைகளைப் பின்பற்றியதற்காக டிஜிட்டல் முறையில் ஊக்கத்தொகைப் பெறவுள்ளனர். நீடித்த வேளாண் நடைமுறைகளுக்கும், விவசாயிகளின் கூடுதல் வருவாய்க்கும் இடையே புதிய இணைப்பை ஏற்படுத்தும் வகையில் லூதியானாவிலுள்ள பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதற்கட்டத் தொகைகள் வழங்கப்பட்டன. வேளாண் ஆராய்ச்சிக் கல்வித் துறைச் செயலாளரும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத் தலைமை இயக்குநருமான டாக்டர் எம் எல் ஜாட், பஞ்சாப், ஹரியானாவைச் சேர்ந்த 2550 விவசாயிகளுக்கான நேரடிப் பயன் பரிமாற்றத்தைத் தொடங்கி வைத்தார். இந்த ஊக்கத்தொகைகள் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுமத்தின் தொழில்நுட்ப வழிகாட்டுதல்களுடன் 2019-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஆதி, விவசாயி கார்பன் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இத்திட்டத்தின் கீழ், விவசாயிகள் 2019-22-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்டக் காலத்தில் நேரடி நெல்விதைப்பு, குறைந்தபட்ச நில உழவு, பயிர்க் கழிவு மேலாண்மை போன்ற நடைமுறைகளைப் பின்பற்றினார்கள். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2311218®=3&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் அலுவலகம்