பின்னணியும் இந்தியாவின் பால் மனிதர் என்று போற்றப்படும் டாக்டர் வர்கீஸ் குரியனின் பிறந்த நாள் தேசிய பால் தினமாக நவம்பர் 26 அன்று கொண்டாடப்படுகிறது. 2014ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 26ஆம் தேதி 'தேசிய பால் தினமாக' கொண்டாடப்படுகிறது. டாக்டர் வர்கீஸ் குரியன் டாக்டர். வர்கீஸ் குரியன் 1921 ஆம் ஆண்டு நவம்பர் 26 அன்று , கேரள மாநிலம் கோழிக்கோட்டில் பிறந்தார். பால் உற்பத்திக்காகக் கடுமையாக உழைத்த குரியன், நாடு அதிக பால் உற்பத்தி மையங்களை உருவாக்கி தன்னிறைவு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் இந்தியாவில் அமுல் ரக பால் பண்ணை இயக்கத்தைத் தொடங்கினார். இதன் மூலம் கிராமிய பால் துறையும் வளர்ச்சியை நோக்கி நகர்ந்தது. இதனால் குரியன் "தேசிய பால் (வெண்மை ) புரட்சியின் தந்தை" என்று அழைக்கப்பட்டார். 1940 ம் ஆண்டு சென்னை லயோலா கல்லூரியில் இயற்பியல் துறை இளங்கலை முடித்தபின், சென்னை பல்கலைக்கழகத்தில் இயந்திரவியல் பொறியியல் பட்டம் பெற்றார். தொடர்ந்து மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் உலோகவியல் துறையில் பட்டம் இந்தியா திரும்பிய குரியன், டாட்டா நிறுவனத்தில் சிறிதுகாலம் வேலை பார்த்து வந்துள்ளார். குஜராத் மாநிலம், ஆனந்தில் இருந்த பால் பண்ணையில் அரசுப் பணியில் சேர்ந்த அவர் மக்கள் படும் துன்பத்தை பார்த்து வெளியேறும் வேலை விடும் திட்டத்தை கைவிட்டார். அங்கே இருந்து அவர்களின் பால் மற்றும் பால் பொருட்களுக்கான சந்தையை உருவாக்க கனவு கண்டார். அதேநேரம் புதியதாகத் துவங்கப்பட்ட கூட்டுறவு பால்பண்ணை , கைரா மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் தனியாரிடமிருந்த பொல்சன் பண்ணையுடன் போட்டியிட்டு தோற்றுக் கொண்டிருந்தது. அரசுப் பணியில் சவால்களில்லாமல் வெறுத்திருந்த குரியனுக்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்தது. கைரா பால் சங்கத் தலைவர் திரிபுவன்தாஸ் படேலிடம் பால் பதப்படுத்தும் ஆலையை நிறுவிட உதவுவதாகக் கூறினார். இதுவே அமுல் பிறக்க வழி வகுத்தது. மேலும் தேசிய பால்பண்ணை மேம்பாட்டு வாரியம் குஜராத்தில் உதயமானது. 1970 வரை இந்தியா முழுவதும், பாலுக்கு அதிகமான தட்டுப்பாடு நிலவியது. பால் உற்பத்தில் இந்தியாவை தன்னிறைவு தேசமாக உருவாக்கி காட்டினார் குரியன். தேசிய பால் தின கொண்டாட்டம் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியம் மற்றும் டாக்டர் குரியனால் உருவாக்கப்பட்ட இதர நிறுவனங்களுடன் இணைந்து இந்த நிகழ்வை கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை ஏற்பாடு செய்கிறது. நாட்டு மாடு / எருமை இனங்களை வளர்க்கும் சிறந்த பால் பண்ணையாளர், சிறந்த செயற்கை கருவூட்டல் தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் சிறந்த பால் கூட்டுறவு சங்கம்) / பால் உற்பத்தியாளர் உள்ளிட்ட விருதுகளை வென்றவர்களுக்கு தேசிய கோபால் ரத்னா விருதுகளை வழங்கப்படுகின்றன. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்