அங்ககப் பொருளும் நூற்புழுவும்

தேயிலைக் கழிவு, மரவள்ளி ஆலைக் கழிவு, பசுந்தாள் உரங்களான சணப்பை, கொளுஞ்சி. எருக்கு இலை மற்றும் தக்கைப் பூண்டு, எண்ணெய்வித்துப் பிண்ணாக்குகளான வேப்பம்பிண்ணாக்கு மற்றும் ஆமணக்குப் பிண்ணாக்கு போன்றவற்றைத் தேவைக்கேற்ற அளவில் இடுவதால் கீழ்கண்ட வகைகளில் நூற்புழுக்கள் அழிக்கப்படுகின்றன.

சில அங்ககப் பொருட்கள் தாமாகவே நூற்புழுக்களை அழிக்கும் திறன் கொண்டவை. (உதாரணம் –வேப்பம் பிண்ணாக்கு).

இப்பொருட்கள் மண்ணின் தன்மையை மாற்றி நூற்புழுக்கள் வாழ ஏதுவற்ற சூழலை ஏற்படுத்துகின்றன.

பயிரின் வளர்ச்சியை ஊக்குவிப்பதன் மூலம் நூற்புழுக்களால் ஏற்படும் சேதம் ஈடு கட்டப்படுகின்றது.

தாவரங்களுக்கு எதிர்ப்புத்திறன் உண்டாகிறது.

நூற்புழுக்களுக்கு எதிரி உயிரினங்கள் அதிக அளவில் பெருக்கமடைந்து நூற்புழுக்களை அழிக்கின்றன.

இப்பொருட்கள் மண்ணில் மட்கும் போது உண்டாகும் வெப்பமும் அப்போது உண்டாகும். சில அங்கக அமிலங்களும் நூற்புழுக்களை அழிக்கின்றன.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்