அறிமுகம்

தமிழ்நாட்டில், மூலிகைகள் பலவற்றை வணிக ரீதியில் பயிர் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. மற்ற மருத்துவ முறைகளில் ஏற்படும் எதிர் தாக்கமோ, பக்க விளைவுகளோ அல்லது பின் விளைவுகளோ உண்டாகாத சிறப்புடையது நமது இந்திய பாரம்பரிய மருத்துவம். ஓவ்வொரு தாவரத்திலும் நோய் தீர்க்கும் ஏதாவது ஒரு வேதிப்பொருள் உண்டு. இவ்வாறு பயன் தரும் மூலிகைப் பயிர் சாகுபடியில் பல்வேறு நோய்கள் தோன்றி, பெரும் விளைச்சல் இழப்பை உண்டாக்குகிறது.

மருந்துக்கூர்க்கன்

வேரழுகல் நோய்

மருந்துக்கூர்க்கன் மருந்துச் செடியை தாக்கும் நோய்களில் வேரழுகல் நோய் மிக முக்கியமானதாகும். குறிப்பாக ஆகஸ்டு – நவம்பர் மாதங்களில் நோயின் தாக்குதல் அதிகமாக இருக்கும். இந்நோய் ரைசோக்டோனியா படோட்டிக்கோலா என்ற பூசணத்தால் ஏற்படுகின்றது. நடவு செய்த 50 நாட்கள் வரை இந்நோய் அறிகுறிகளை ஏற்படுகின்றது. நடவு செய்த 50 நாட்கள் வரை இந்நோய் அறிகுறிகளை ஏற்படுத்துவதில்லை. நட்ட 60 ஆம் நாளில் இந்நோயின் தீவிரம் அதிகமாக வெளிப்படுகிறது. இந்நோய் தாக்கிய செடிகளில் இலைகள் பழுப்பு நிறத்துடன் காணப்படும். நோயின் தீவிரம் அதிகமாகும் பொழுது செடிகள் முழுவதும் காய்ந்துவிடும். வேர் உட்பகுதி கருப்பு நிற பூசணம் படர்ந்து வேர் அழுகி காணப்படும்.

கட்டுப்படுத்தும் முறை

வயலில் வடிகால் வசதியை ஏற்படுத்தி நீர் தேங்காத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். பயிர்ச் சூழற்சி முறையை கடைபிடித்தல் மண்ணில் உள்ள பூஞ்சாணத்தை கட்டுப்படுத்தலாம். தண்டுக்குச்சிகளை வயலில் நடுவதற்கு முன் சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் எதிர் உயிரி பாக்டீரியத்தை 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து 20 நிமிடங்கள் நனைத்து நட வேண்டும். கார்பன்டசிம் மருந்தினை ஒரு கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து செடிகளின் வேர்களைச் சுற்றி ஊற்றி கட்டுப்படுத்தலாம். ட்ரைக்கோடெர்மா ஆஸ்பெரல்லாம் என்ற எதிர் உயிரி பூசணத்தை ஒரு எக்டருக்கு 2.5 கிலோ வீதம 250 கீலோ பொடி செய்யப்பட்ட தொழு எருவுடன் கலந்து 20 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை மண்ணில் செடிகளைச் சுற்றி இட்டு வந்தால் இந்நோயினைக் கட்டுப்படுத்தலாம்.

இலைப்புள்ளி நோய்

இலைப்புள்ளி நோய் (செர்கோஸ்போரா) செடிகளுக்கு அதிகச் சேதத்தை விளைவிக்கும். குறிப்பாக, மழைக் காலங்களில் இந்த நோய் தென்படும். இலைகளில் சிறு சிறு வட்ட புள்ளிகள் தோன்றும். புள்ளிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து கருகலை ஏற்படுத்தும். கார்பன்டசிம் மருந்தினை ஒரு கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து இலைகளில் மேல் 15 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கவும்.

வேர் முடிச்சு நூற்புழு

சேடியின் வளர்ச்சி குன்றி காணப்படும். இலைகள் மஞ்சள் நிறத்தில் வெளுத்து காணப்படும். பாதிக்கப்பட்ட வேர்களின் மீது சிறு சிறு முடிச்சுகள் காணப்படும். இதனை கட்டுப்படுத்த ட்ரைக்கோடெர்மா ஆஸ்பெரல்லம் என்ற எதிர் உயிரி பூசணத்தை ஒரு எக்டருக்கு 2.5 கிலோ வீதம் 150 கீலோ பொடி செய்யப்பட்ட வேப்பம் புண்ணாக்குடன் கலந்து நட்ட 30 ஆம் நாளில் மண்ணில் இடவும். செண்டுமல்லி செடியை வயலில் ஆங்காங்கே விதைத்து, பூக்கும் தருணத்தில் மண்ணில் மடக்கி விடவும்.

செங்காந்தல்

வேர் அழுகல் நோய்

வேர் அழுகல் நோய் மேக்ரோமினா பாசியோலோனா எனும் பூசணத்தினால் ஏற்படுகிறது. இலைகள் மஞ்சள் நிறத்துடன், செடி கீழிலிருந்து மேலாக வாடத் தொடங்கும். வேர்ப்பகுதி அடர் நிறத்தில் அழுகி காணப்படும். வேர்ப்பகுதி மற்றும் தண்டுப்பகுதியில் சிறு சிறு கருப்பு நிற கடுகு போல புள்ளிகள் தென்படும். நோய் தீவிரம் அடையும்போது செடிகள் வாடி கருகிய தோற்றத்துடன் காணப்படும். அதிக மழை உள்ள இடங்களில் வேர் இழுகல் நோய் தென்படலாம். இதனைப் கட்டுப்படுத்த மண்ணில் வடிகால் தாக்கப்பட்ட செடிகளுக்கு கார்பன்டசிம் ஒரு கிராம் மருந்தை ஒரு லிட்;டர் நீரில் கலந்து, வேர்கள் நனையுமாறு 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஊற்ற வேண்டும்.

இலைப்புள்ளி நோய்

இலைப்புள்ளி நோய் (கொலிட்டோ டிரைக்கம்) செடிகளுக்கு அதிக சேதத்தை விளைவிக்கும். குறிப்பாக மழைக்காலங்களில் இந்த நோய் தென்படும். இலைகளில் சிறு சிறு வட்ட புள்ளிகள் தோன்றும். புள்ளிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து கருகலை ஏற்படுத்தும். இதனைக் கட்டுப்படுத்த, இரண்டு கிராம் மேன்கோசெப் பாசன மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

இலைக்கருகல் நோய்

செங்காந்தல் பயிரில் இலைக்கருவில் நோய் (ஆல்டர்னேரியா ஆல்டர்னேட்டா) ஏற்படும். இந்நோய் தொடர் மழை மற்றும் பனிக்காலத்தில் அதிகம் ஏற்படும். இலை புள்ளிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து கருகலை ஏற்படுத்தும். இதனைக் கட்டுப்படுத்த குளோரோதலோனில் பூஞ்சான மருந்தை ஒரு மில்லிக்கு ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும்.

கிழங்கு அழுகல் நோய்

கிழங்கு அழுகல் நோய் (ஸ்கிளோரோசியம் ரால்ப்சி) மழைக்காலத்தில் வரும் பூஞ்சாண நோயாகும். மண்ணில் வடிகால் வசதி குறைவாக இருக்கும்போது அதிக அளவில் பாதிக்கப்படுகிறது. இதனால் கொடிகள் நிறம் வெளுத்து காய்ந்து விடும். வேர்கள் கருமை நிறத்தில் காணப்படும். பாதிக்கப்பட்ட தண்டுகள் மற்றும் கிழங்குகளில் பூசண இழைகள் மற்றம் கடுகு போன்ற பூசண வித்துக்கள் காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த எதிர் உயிரியான டிரைக்கோடெர்மா ஆஸ்பெரல்லம் ஒரு ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் மக்கிய தொழு உரத்துடன் (50 கிலோ) கலந்து மண்ணில் இடவும். சூடோமோனாஸ் புளுரோசன்ஸ் எதிர் உயிரி பாக்டீரியத்தை 2 கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தாக்கப்பட்ட கொடிகளில் கிழங்குகள் நனையுமாறு மண்ணில் ஊற்ற வேண்டும். மண்ணில் தண்ணீர் தேங்காத வண்ணம் வடிகால் வசதியை ஏற்படுத்த வேண்டும்.

நச்சுயீரி கருகல் நோய்

இலைகள் மேலிருந்து கீழாக கருக ஆரம்பிக்கும். இந்நோயால் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டு அதிக விளைச்சல் இழப்பு ஏற்படுகிறது. இந்நோய் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மூலம் பரவுகிறது. நோய் பரப்பும் பூச்சிகளை கட்டுப்படுத்த பிப்ரோனில் ஒரு மில்லி மருந்து 1 லிட்டர் தண்ணீரில் கரைத்து இலைகள் மீது தெளிக்கவும்.

மணத்தக்காளி

வேர் அழுகல் நோய்

ஆதிக மழை உள்ள இடங்களில் வேர் அழுகல் நோய் (ரைக்சோக்டோனியா படோட்டிக்கோலா) தென்படலாம். நிலத்தில் வடிகால் வசதியை ஏற்படுத்தினால் இந்நோய் வருவதைத் தடுக்கலாம். நோய் தாக்கப்பட்ட செடிகளுக்கு கார்பன்டசிம் மருந்தை ஒரு கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து வேர்கள் நனையுமாறு 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை ஊற்ற வேண்டும்.

இலைச் கருகல் நோய்

இலைக்கருகல் நோய் (ஆல்டர்னேரியா சொலானி) இலைகளைச் சேதப்படுத்தும். இந்நோய் தாக்குவதால் முதிர்ச்சியாகும் இலைகள் பெருமளவில் உதிர்ந்து விளைச்சலைப் பாதிக்கும். இதனைக் கட்டுப்படுத்த, இரண்டு கிராம் மேன்கோசெப் பூசண மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

மஞ்சள் தேமல் நச்சுயிரி நோய்

இந்நோய் இலைகளைச் சேதப்படுத்தும். இலைகளின் மேல் சிறு சிறு மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும். மஞ்சள் தேமல் நோய் சாறு உதிஞ்சும் பூச்சிகளால் பரவுகின்றது. இவற்றைக் கட்டுப்படுத்த, டைமெத்தோயேட் 2 மி.லி. மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

வெண்கோடிவேலி

இலைப்புள்ளி நோய்

இலைப்புள்ளி நோய் கொலிட்டோ டிரைக்கம் எனும் பூசனத்தினால் ஏற்படுகிறது. இலையின் மேற்புறத்தில் சிறு சிறு புள்ளிகள் தென்படும். நாளடைவில் புள்ளிகள் ஒன்றோடு ஒன்று இணைந்து கருகி காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த மேன்கோசெப் இரண்டு கிராம் பூசன மருந்தினை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து 15 நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்

நுனிக்கருகல் நோய்

நுனிக்கருகல் நோய் கொலிட்டோடிரைக்கம் எனும் பூசணத்தினால் ஏற்படுகிறது. செடியின் கிளைகள் நுனியிலிருந்து கீழாக வாடி காணப்படும். அதிக அளவில் இந்த நோய் தோன்றினால் காப்பர் ஆக்ஸி குளோரைடு பூசண மருந்தை மூன்று கிராம் ஒரு லிட்டர் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். இதுபோல, இருபது நாட்கள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும்.

வேர் முடிச்சு நூற்புழு

செடியின் வளர்ச்சி குன்றி காணப்படும். இலைகள் மஞ்சள் நிறத்தில் வெளுத்து காணப்படும். வேர்களின் மீது சிறு சிறு முடிச்சுகள் காணப்படும் இதனை கட்டுப்படுத்த ட்ரைக்கோடெர்மா ஆஸ்பெரல்லம் என்ற எதிர் உயிரி பூசணத்தை ஒரு எக்டருக்கு 2.5 கிலோ வீதம் 150 கிராம் பொடி செய்யப்பட்ட வேப்பம் புண்ணாக்குடன் கலந்து நட்ட 30 ஆம் நாளில் மண்ணில் இடவும். செண்டுமல்லி செடியை வயலில் ஆங்காங்கே விதைத்து, பூக்கும் தருணத்தில் மண்ணில் மடக்கி விடவும்.

மேற்காணும் முறைகளை பின்பற்றி மருந்து மற்றும் மணமூட்டும் பயிர்களை தாக்கும் நோய்களை கட்டுப்படுத்த முடியும்.

மூலிகை பொருட்கள் தயாரிக்க – தொழில்நுட்பங்கள்

மத்திய மருந்து மற்றும் நறுமணத் தாவர ஆராய்ச்சி மையத்தில் நறுமண தாவர எண்ணெய், மருத்துவ செடிகளைக் கொண்டு மூலிகைப் பொருட்கள் தயாரிக்க தேவையான உற்பத்தி தொழில் நுட்பம், தொழில் முனைவோருக்கு பயிற்சி, தொழில் முனைவோருக்கு பயிற்சி, தொழில் செய்ய உரிமம் கிடைக்க இம்மையத்தில் வழி செய்யப்படுகின்றது. கீழ்க்கானும் மூலிகை பொருட்களின் உற்பத்தி தொழில் நுட்பங்கள் பற்றிய விளக்கங்கள் ஆராய்ச்சி மையத்தில் கிடைக்கும்.

கால் வெடிப்புக்கு மருந்தாகும் “ஆன்ட்டி – கிரேக் கிரிம்” ((Cracknil))

தலைவலி, உடம்பு வலி நீக்கும் பெயின் - சூ ((Pain choo))

கைகளில் நுண்கிருமிகளை நீக்கும் “கேன் கூல்(Hankool)

கை, முகம் கழுவ உதவும் - கிளென்சி - (Kleenzie)

தரைகள், சமையலறை சுத்தம் செய்ய - (Swabee)

முடி உதிர்வு, கடினத்தன்மை நீக்கும் சாம்பூ - ஹர்பி மற்றும் ஜரனியம் ஏ “Herby & geranium A

கொசுக்களை விரட்டும் “Mospray”, “Mosrep”, “Mosaway”, “Mosnobit”

உடல் வலிமை, நோய் எதிர்ப்பு சக்திக்கு “CIM - Paushak” & “CIM- Phal”.

ஆதாரம்: உழவரின் வளரும் வேளாண்மை