முன்னுரை

வளம் குன்றா வேளாண்மை என்பது வேளாண்மையின் ஒரு முறையாகும். வேளாண்மையின் உற்பத்தித் திறனை நீண்ட காலத்திற்கு ஒரே மாதிரி வைத்திருக்க உதவும் முறையே வளம் குன்றா வேளாண்மையாகும். வளம் குன்றா வேளாண்மை என்பது பண்ணை முறையும், தத்துவமும் இணைந்ததாகும். சூழ்நிலை மற்றும் சமூக யதார்த்தங்களை பிரதிபலிக்கக் கூடிய பெறுமானத்தின் வேர் போன்று செயல்படுகிறது.

அனைத்து வளங்களை பாதுகாத்தல், கழிவுகளைக் குறைத்தல் மற்றும் சுற்றுப் புற சூழலில் ஏற்படும் சேதம், போன்றவற்றை இயற்கை முறைகளுடன் இணைந்து செயல்படுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இயற்கை மண் முறைகளுடன் செயல்படுவது தான் மிகவும் முக்கியம் வாய்ந்தது.

ஏற்கெனவே இருக்கிற மண் சத்துக்கள் மற்றும் நீர் சுழற்சி, சக்தி தருதல், உணவு உற்பத்திக்கான மண் உயிரிகள் போன்றவற்றின் பயன்களை அதிகரிக்கும் நோக்கத்துடன் இந்த வளம் குன்றா வேளாண்மை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த முறையால் உற்பத்தி உணவு சத்துக்கள் நிறைந்ததாகவும், எந்த வித பொருளுடன் கலப்பிடமில்லாமலும், மனிதனின் ஆரோக்கியத்திற்கு கேடு விளைக்காமலும் இருக்கிறது.

நடைமுறையில், இந்த முறை செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், வளர்ச்சி ஊக்கிகள், கால்நடைகளுக்கான உணவுகளுடன் சேர்க்கும் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்கிறது. இந்த பொருட்கள் அதனுடைய புதுப்பிக்க முடியாத வளங்களை சார்ந்திருத்தலாலும், சுற்றுப்புற சூழலுக்குள் ஏற்படுத்தும் மாற்றங்கள், வனவிலங்களுக்கு ஏற்படுத்தும் தாக்கங்கள், கால்நடை மற்றும் மனித நலத்திற்கு ஊரு விளைவிப்பதாலும் தவிர்க்கப்படுகின்றன. உதாரணத்துக்கு, செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள் மண்ணில் நடைபெறும் உயிரியல் செயல்முறைகளை மட்டுபடுத்துகின்றன.

சில வளர்ச்சி ஊக்கிகள் மற்றும் உணவுடன் கலக்கும் பொருட்கள் உரங்கள் சிதைவுறச் செய்யாமல், மனித நலத்திற்கு தீங்கு விளைவிக்கின்றன. வளம் குன்றா வேளாண்மை முறைகள் பயிர் சுழற்சிகள், பயிர் கழிவுகள், விலங்கின் உரங்கள், பயிறு வகைகள், பசுந்தாள் உரங்கள் பண்ணையில்லாத அங்கக கழிவுகள், தகுந்த இயந்திர சாகுபடிமுறை மற்றும் கனிமங்களுடைய பாறைகள் போன்றவற்றை நம்பி இருக்கிறது. இதனால் மண்ணில் உயிர்களின் செயல்பாடுகள், அதிகரிக்கின்றன மற்றும் மண் வளம் மற்றும் உற்பத்தித் திறனை நிலைபடச் செய்கின்றன. இயற்கை, உயிரியல், உழவு முறைகளைப் பயன்படுத்தி பூச்சிசள், களைகள் மற்றும் நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

வளம் குன்றா வேளாண்மையின் நோக்கம் வேளாண்மையை நீண்ட காலத்திற்கு செயல்படச் செய்யதாகும். முதல் பயிர் விதைத்திருந்தாலும், விலங்குகளை பட்டியில் அடைத்தாலும், விவசாயிகள் தங்களுடைய நிலத்திலிருந்து குறிப்பிடத்தக்க விளைச்சல் ஒவ்வொரு வருடமும் கிடைக்க செய்ய வேண்டும் என்பதில் முயற்சி மேற்கொண்டுள்ளனர். தற்போதைய புதிய முயற்சிகளால் இந்த முறை பிரபலமடைந்து வருகிறது.

நவீன வரையறை

வளம் குன்றா வேளாண்மை என்பது பண்ணை முறையின் அமைப்புகள் மற்றும் செயல்முறைகளைப் பயன்படுத்தி.

வேளாண் உற்பத்தியின் பொருளாதார திறனை அதிகப்படுத்துதல்.

இயற்கை வளங்களின் அடிப்படையை நிலைப்படுத்துதல்.

வேளாண் செயல்களால் மற்ற சூழ்நிலை அமைப்புக்களை ஒரே மாதிரி நிலைபடுத்துதல் ஆகும்.

வளம் குன்றா வேளாண்மையின் சில அடிப்படைக் கொள்ளைகள்:

பண்ணை உற்பத்தித் திறனை நீண்டகாலத்திற்கு ஒரே மாதிரி வைத்திருக்க உதவுதல்.

இயற்கை வளங்களின் அடிப்படை மற்றும் அதைச் சார்ந்து சூழ்நிலை அமைப்புகளுக்கு ஏற்படுத்தும் மோசமான விளைவுகளை களைதல், குறைத்தல் அல்லது தவிர்த்தல்.

வேளாண்மையில் வேதிப்பொருட்களை பயன்படுத்துவதால் வரும் எச்சங்களைக் குறைத்தல்.

வேளாண்மையிலிருந்து வரும் சமூக பயன்களை (பணம் மற்றும் மணம் சம்பந்தமில்லாதது) அதிகரித்தல்.

வானிலை மற்றும் சந்தைகளில் ஏற்படும் தீடீர் மாற்றங்கள் போன்ற இடர்பாடுகளை இளைவதன் மூலம் பண்ணை முறைகளை எளிதாகப் பயன்படுத்துதல்.

வேளாண்மையின் குறிக்கோள்கள் மற்றும் கொள்கைகள் நம்பிக்கை தரும்படி இல்லை என்று சிலர் விவாதம் செய்கின்றனர். இருந்தாலும், வளம் குன்றா வேளாண்மையை எப்படி அளவிடுவது என்ற கேள்வி இருந்து கொண்டே இருக்கிறது.

உலகத்தின் பார்வையில் வளம் குன்றா வேளாண்மை

வரையறை 1

சுற்றுப்புற சூழல் நன்றாகவும், பொருளாதார ரீதியாக திறனுடையதாகவும், பண்பாட்டுக்கு பொருத்தமாகவும், புனித அறிவியல் அணுகு முறையை அடிப்படையாகக் கொண்டிருக்கும் பொழுது வேளாண்மை வளம் குன்றாமல் இருக்கும். (என்.ஜி.லு. வளம் குன்றா வேளாண்மை சங்கம், 1992).

வரையறை 2

குறைந்த - வெளிப்புற இடுபொருள் மற்றும் வளம் குன்றா வேளாண்மை (LEISA) என்பது உள்ளூரிலேயே இருக்கக்கூடிய இயற்கை மற்றும் மனித வளங்களை அளவாகப் பயன்படுத்துதல், (மண், நீர், தாவர வளம், அப்பகுதி தாவரங்கள் மற்றும் விலங்குகள், வேலையாட்கள், அறிவு மற்றும் திறன் போன்ற வளங்கள்) மற்றும் பொருளாதார ரீதியாக பயன்படுத்தக் கூடிய வகையிலும், சுற்றுப்புற சுழலைப் பாதிக்காதவாறும், பண்பாட்டுக்குத் தகுந்த மாதிரியும், சமூகத்திற்கு ஈடு கொடுக்கும் வகையிலும் உள்ள வேளாண்மையாகும். (ரெய்ஜின்டிஸ், ஹேவர்கோர்ட், + வாட்டர்ஸ் -பேயர், எதிர்கால வேளாண்மை, 1992).

வரையறை 3

நிலைப்பாடன வளர்ச்சி என்பது இயற்கை வளங்களின் அடிப்படையை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல், தொழில்நுட்ப மற்றும் நிறுவன மாற்றங்களின் ஒருங்கிணைப்பால் மனிதனின் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததிகளுக்கான தேவைகளை தொடர்ந்து பூர்த்தி செய்தால் மற்றும் அதை அடைய உறுதி செய்வதும் ஆகும். இத்தகைய நிலைப்பாடான வளர்ச்சி (வேளாண்மை, வனவியல் மற்றும் மீன்வளத்துறைகளில்) நில, நீர், தாவர மற்றும் விலங்குகளின் மரபு வளங்களை பாதுகாத்தல், சுற்றுப்புற சுழலுக்கு ஊறு விளைவிக்காமல், தகுந்த தொழில்நுட்பத்துடன், பொருளாதார ரீதியாகப் பயன்படும் வகையிலும், சமூகத்தில் நடைமுறைபடுத்துவதேயாகும். (எப்.ஏ.ஒ.குழுவின் 94 வது கூட்டத்தின் 9416 அறிக்கை, 1998).

குறிக்கோள்கள்

கிடைக்கும் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல்

புதுப்பிக்க இயலாத வளங்களை பயன்படுத்துவதை குறைத்தல்

பண்ணை தொழிலாளர்கள், உள்ளூர் சமூகங்கள் மற்றும் சமுதாயத்தை பாதுகாத்தல்

சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களை பாதுகாத்தல் மற்றும் மேம்படுத்தல்

சாகுபடி நுட்பங்களின் பொருளாதார நன்பகத்தன்மையை பாதுகாத்தல்

சமூகத்தின் நலனுக்காகவும் தொடர்ந்து உற்பத்தி செய்வதற்காகவும் விவசாயிகளுக்கு போதுமான நிதி வழங்குதல்

உயர் தரமான மற்றும் பாதுகாப்பான உணவு உற்பத்தி செய்தல்

சூழ்நிலைகள் மற்றும் திறனுக்கு ஏற்ப தொழில்நுட்பங்கள் மற்றும் திறமைகளை வளர்த்தல்

வளம் குன்றா வேளாண்மையின் அடிப்படை ஆதாரங்கள்

வளம் குன்றா வேளாண்மை பண்ணைக்கும், பண்ணை சமூக பொருளாதாரத்திற்கும் பயன்தரும் வகையில் பொருளாதார வளர்ச்சியை கொண்ட 4 கொள்கைகளும், ஐந்தாவது சமூகத்திற்காகவும் உள்ளது.

குறிப்பிட்ட அளவு இடுபொருள் இடுதல்

வளம் குன்றா உற்பத்தியால் பண்ணை வளங்களை அதிகப்படுத்த முடிகிறது. உள்ளுக்குள்ளே பெறப்படும் இடுபொருள்களான, வேலையாட்கள், அதி தீவிர புல்வெளி அமைப்புக்கள், சுழற்சி செய்த சத்துக்கள், பயிறு வகை தழைச்சத்து, பயிர் சுழற்சிகள், புதுப்பிக்கும் சூரிய ஆற்றல் பயன்படுத்துதல், மேம்படுத்தப்பட்ட பூச்சி மண் மற்றம் நிலக் கட்டுப்பாடு போன்றவை சில உதாரணங்களாகும். விளைச்சலை ஒரேமாதிரி வைத்துக் கொள்ளும் பொழுது இந்த மாதிரி மாற்றுப் பொருட்கள் பயன்படுத்தப்படும் என்று ஆய்வுகள் காட்டியுள்ளன. இதனால் மொத்த பண்ணை வருமானம் அதிகரிக்கும். இந்த வருமானத்தால் பயன்படும் வகையில் சில்லறை விற்பனை அதிகரிக்கப்படுவதால் மற்றும் வரி விதிப்பாலும், சமூகத்திற்கு பயன்பாடு அதிகரிக்கிறது,

மாற்று வழிமுறை

ஆரோக்கியமான மண் உருவாக்குவதற்கும், இடுபொருட்கள் வாங்குவதை குறைப்பதற்கும், வளம் குன்றா வேளாண்மை மாற்று பயிரிடுதல் மற்றும் கால்நடை அமைப்புக்களை மாற்றுதல் போன்றவற்றை வலியுறுத்துகிறது. மாற்று வழிமுறையால் அதிகப்படியான பண்ணை வருமானம், பொருளாதார இடர்களான வானிலை, பூச்சி வேளாண் சந்தை மாற்றங்களை குறைப்பதாலும் பெற முடிகிறது. இதனால் நிலங்களை விவசாயிகள் வைத்துக் கொள்ளவும், உள்ளூர் பொருளாதாரத்திலிருந்து ஏற்படும் இடர்பாடுகளை களையவும் உதவுகிறது.

இயற்கை மூலத்தனத்தைப் பாதுகாத்தல்

மூலதன சொத்துக்களின் மதிப்புக் குறைநிலை மதிப்பிடுதலாகும். விவசாயிகள் இந்த முறை நிலையாகப் பயன்படுத்துவதில்லை. பண்ணை முறைகளின் மதிப்பு குறைவதால் இயற்கை வளங்களை பாதுகாக்க முடியாமல் போகிறது. இந்த இழப்பு, விளைச்சலைப் பாதிக்கும், பண்ணை வருவாய், நிலைப்பாட்டையும் பாதிக்கும், வளம் குன்றா வேளாண்மையில், நிலத்தின் உற்பத்தித் திறன் மற்றும் நீர் வளங்களின் உற்பத்தித் திறனை மேம்படுத்துதாலும், மனித வளம் மற்றும் சுற்றறுப்புறச்சூழல் மேம்படுவதாலும் பொருளாதார மதிப்பு உயருகிறது.

மதிப்புக் கூட்டல்

விவசாயிகளுக்கு விளைவித்த விளை பொருட்களை சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுவதிலும் பங்கு உள்ளது. உண்மையான வளம் குன்றா வேளாண்மையை உருவாக்கி, நிலைப்படுத்துவதில், விவசாயிகள் மிக அதிகளவு மதிப்புக் கூட்டிய வழிகளைப் பயன்படுத்த வேண்டும். இந்த முறையால் தனி விவசாயிகளால் இதை வடிவமைத்தல், செயல்படுத்துதல் மற்றும் தங்களுடைய பொருட்கள நேரடி விற்பனை செய்ய முடியும். மற்ற மதிப்புக் கூட்டால் நுட்பங்களுக்கு அதிக வளங்கள் தேவைப்படும். ஆனால் ஒரு விவசாயினால் இதை கையாளுவது எளிதாக இருக்கும். ஆகவே, இந்த மதிப்பு கூட்டல் நுட்பங்களுக்காக உள்ளூர் விவசாயிகள் குழுவாக உருவாக வேண்டும் மற்றும் உள்ளூர் சமூகத்துடன் ஒருங்கிணைந்த உறவை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

சமூகம்

அனைத்து சமூகத்தினருக்கும் ஒருங்கிணைப்பாக வளம் குன்றா வேளாண்மை உள்ளது. வளம் குன்றா வேளாண்மையை வளரச் செய்ய வேண்டுமானால், நாம் முதலில் ஊரக மற்றும் நகர்ப்புறங்களுக்கு இடையேயான தொடர்பை அறிந்திருக்க வேண்டும் மற்றும் கருத்து வேறுபாடுகள் மற்றும் அதிகமான சந்தர்ப்பங்களையும் அறிந்திருக்க வேண்டும். வளம் குன்றா வேளாண்மையால், விளைச்சல், உணவு பாதுகாப்பு, நீர் உற்பத்தி செய்ய திறந்த வெளி இடம், தாவரங்கள் வளருவதற்கான இயற்கை வாழிடங்கள் மற்றும் சமூக, பொருளாதார கட்டமைப்புகள் ஒருங்கிணைந்து இருத்தல் போன்ற நன்மைகள் ஏற்படுகின்றன. தற்பொழுது, நகர சமூகங்கள் விவசாய சமூகத்திலிருந்து தத்துவம் மட்டுமல்லாமல், புரிந்து கொள்ளல், குறிப்பாக, உணவு உற்பத்தி மற்றும் பரவுச் செய்தல் போன்றவற்றில் தனித்து இருக்கின்றன. நம்முடைய சமூகத்தை நிலைபடச் செய்வதில் உள்ள சிக்கல் (அ) நாம் ஒருங்கிணைந்து இல்லாமல் இருத்தல் வாழ்வாதாலும் நல்லபடியாக இல்லாமல் இருத்தல் போன்றவற்றில் பண்ணை முறையின் பங்கு எவ்வளவு என்பது தெள்ளத் தெளிவாக உணர முடிகிறது, இதற்காக நாம் நம்முடைய அக்கம்பக்கத்தினரும் ஒன்றுபட்டு இருந்தால் நகர்புற மற்றும் கிராமப்புற சமூகங்கள் நல்லநிலையைில் இருக்க முடியும்.

வழிமுறைகள்

வேளாண் சூழ்நிலை அமைப்பு பல இடைப்பட்ட பகுதிகளுடன் பல குறிக்கோளுடன் அமைக்கப்பட்டுள்ளது. மண் தரம் வளம் குன்றா வேளாண் சூழ்நிலை மேம்பாட்டின் முக்கியமான பகுதியாகும். இதுவே நீர் மற்றும் காற்றின் தரத்திலும் வளம் குன்றா வேளாண்மை முக்கியமானது, மண் தரத்தை மதிப்பிடுவதால் மேலாளர்கள் எளிதாக செயல்படுது்த வேண்டிய முறைகளை கண்டுபிடிக்க முடிகிறது. வளம் குன்றா வேளாண் சூழல் மேம்பாட்டின் முக்கியமான பகுதி மண் தரமாகும்.

தரமான பண்ணை உருவாக்குதல் மற்றும் பாதுகாத்தல்:

மண் அரிப்பை அடுக்குத்தளம் அமைத்தல், படிப்படியாக பயிரிடுதல், சுழமான குழிகளை சரிசெய்தல் போன்றவற்றால் தடுக்கலாம்

மண்ணுடன் அங்ககப் பொருட்களை சேர்க்கலாம் (பசுந்தாள் உரப்பயிர்கள் வரப்பு பயிர்களாக வளர்த்தல், மட்கிய உரம், உரங்கள், பயிர்க் குப்பைகள், அங்கக உரங்கள்)

நிலப் பண்படுத்துதலை பேணுதல்

காற்று தடுப்புக்களை வளர்த்தல்

பணப்பயிர்களுடன் வைக்கோல், புற்கள் அல்லது வரப்பு பயிர்களுடன் சுழற்சி செய்தல்

நீரின் தரத்தைப் பாதுகாத்தல் மற்றும் பேணிக் காத்தல்

வயல் மற்றும் புல்வெளியில் மண் அரிப்பதை் தடுத்தல்

வேதிப்பொருட்கள் பயன்படுத்துதலை குறைக்கலாம்

பாதுகாக்கப்பட்ட செறிவான பகுதிகளை விரிவுபடுத்தல்

மழை பெறுவதைப் பொறுத்து பயிர்களை வளர்த்தல்

பயனுள்ள பாசன முறைகளை பயன்படுத்துதல்

அங்ககக் கழிவுகள்

மண் பரிசோதனை செய்து, தேவைப்படும் அளவு உரங்கள் மற்றும் பறவை எச்சங்களை இடவேண்டும்

இறந்த பறவைகள் மற்றும் எச்சங்கள், கழிவுகளை மட்கச் செய்ய வேண்டும்

மழை மற்றும் பனியிலிருந்து பறவைக் கழிவுகளை பாதுகாக்க வேண்டும்

புல்வெளி (அ) கோழிப்பண்ணையை அமைக்கலாம்

பண்ணை வேதிப் பொருட்கள் மற்றம் அகற்றுதல்

வேதிப்பொருட்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்தல்

குறைந்த அளவே பயன்படுத்த வேண்டும்

நச்சுத்தன்மை குறைவான வேதிப் பொருட்களை பயன்படுத்த வேண்டும்

மறுசுழற்சி அட்டையில் கொடுத்துள்ள வழிமுறைப்படி அகற்றிவிட வேண்டும்

அணுகுமுறைகள்

பலநூறு வருடங்களாக வளம் குன்றா வேளாண்மை பின்பற்றப்பட்டு வருகிறது. பல தரப்பட்ட பெயர்களில் பலதரப்பட்ட அணுகுமுறையும் பின்பற்றப்படுகிறது. இதில், இந்த அணுகுமுறைகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்று செய்வது வரையறுக்கப்பட்டுள்ளது

முக்கிய முன்னேற்றங்கள் எதிர்ப்பார்க்கப்பட்டது, இருந்தாலும், அறிவியலில் வளர்ச்சி மற்றும் வேளாண் சூழ்நிலை அமைப்பு வடிவமைப்பு மற்றும் மேலாண்மை செய்வது பற்றியும் தரப்பட்டுள்ளது

பராம்பரிய வேளாண்மையில் பல அணுகு முறைகள் (குறைந்தபட்ச நில பண்படுத்ததுல், வேதிப்பொருட்கள் வளையம் செய்தல்) ‘பயன்பாடு’ வகையில் வருகிறது. வளங்கள் பயன்படுத்துதலை குறைத்தல் மற்றும் எதிர்மறை சூழ்நிலை தாக்கம் ஏற்படுத்துகிறது. விவசாயிக்கான இடுபொருள் செலவைக் குறைக்கிறது. இது வளம் குன்றா வேளாண்மையின் ஆரம்பநிலையாகும்.

பாதுகாப்பான பொருட்கள் மற்றும் செய்முறைகள் (உயிரியல் பூச்சிக் கொல்லிகள், உயிரிக்கட்டுப்பாடு பொருட்கள், இறக்குமதி உரங்கள், பாறை துகள்கள், இயந்திரக் களைக் கட்டுப்பாடு) போன்றவற்றிற்கு மாற்றுப் பொருட்கள் தயாரிப்பதற்கான முயற்சிகள் பிரபலமடைந்து வருகின்றன. எதிர்மறை சுற்றுப்புற சூழல் சேதக்குறைவும் பிரச்சனைக்குரியதாக உள்ளது. உயிரியல் பூச்சிக் கொல்லிகள் பயனுள்ள உயிரிகளையும் அழிக்கிறது. பூச்சி கட்டுப்பாட்டிற்கு உயிரிக் கட்டுப்பாட்டு பொருட்களை வயலில் விடுவது, இறக்குமதி செய்யப்பட்ட உரப் பொருட்கள் இந்த முறையை சிரமமானதாகவும் மாற்றுகிறது. களைகளைக் கட்டுப்படுத்த அதிகப்படியான சாகுபடி மேற்கொள்வதும் மண்ணிற்கு தீங்கு விளைவிக்கும்.

திட்டங்கள்

1. எஸ்டி.சி.ஐ.சி.திட்டம்

தலைப்பு: நீர்த்தேக்க பகுதிகளில் வளம் குன்றா வேளாண்மை என்.ஜி.ஒக்கள் மற்றும் விவசாயிகள் திறன்களை வலுப்படுத்துல்- எஸ்.பி.டபிள்யூ.டி-கே திட்டம்,

காலம் : 1.04, 2002, லிருந்து (1999 -ம் வருடத்திலிருந்து பகுதி ஆரம்பிக்கப்பட்டது)

செயல்பாடுகள்: வளம் குன்றா வேளாண்மையையும் குல்பர்கா, கோபல் மற்றும் பீடார் மாவட்டங்களில் மூன்று SPWD பங்குதாரர்களுடன் நீர்த்தேக்கப் பகுதிகளில் என்.ஆர்.எம்யையும் ஒருங்கிணைத்தல், பட்டாணியில் எப்.எப்.எஸ்.ஐ நடத்த பங்குதாரர்கள வழிகாட்டவும், ஒருங்கிணைந்த பண்ணை முறை செயல்பாடுகளுக்கும் உறுதுணையாக உள்ளது.

2. கவாட் (KAWAD)

தலைப்பு: ஒருங்கிணைந்த பண்ணை முறைகளை கவாட் நீர்த் தேக்கப் பகுதிகளில் மேம்படச் செய்தல்

செயல்பாடுகள்: சித்ரதுர்கா, பெல்லாரி, பீஜப்பூர் மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களில் வளம் குன்றா வேளாண்மையின் பகுதிகளை வலுப்படுத்துல் வழங்குபவர்கள் : கவாட் /டி.எப்.ஐ.டி.

கேள்வி பதில்கள்

1. வளங்குன்றா வேளாண்மையின் பொருள் விளக்கம் என்ன?

சூழலைப் பாதுகாக்கும் போது தற்போதைய பண்ணை வளங்களை அதிகப்படுத்தல் மற்றும் மறுசுழற்சி மூலம் லாபத்தை உறுதிப்படுத்தலுக்கு வளங்குன்றா வேளாண்மை முயற்சிக்கின்றது. உள்ளூர் சமூகத்துடன் ஒரு பரஸ்பர நன்மை பயக்கும் உறவு மூலம் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்வதற்கு, வளங்குன்றா உத்திகள் விவசாயிகளை ஊக்கப்படுத்துகிறது.

2. வளங்குன்றா வேளாண்மையில் யார் பங்கு பெற வேண்டும்?

பண்ணை வளங்களின் மேம்படுத்தப்பட்ட மேலாண்மையின் செலவுகளைக் குறைக்க மற்றும் விவசாய லாபத்தை மேம்படுத்த விருப்பம் உள்ள முயற்சி செய்பவர்கள். எல்லோரும் வளங்குன்றா வேளாண்மையில் பங்களிக்கவும் மற்றும் தங்கள் சொந்த நடவடிக்கையை மேம்படுத்துவதற்கு தங்கள் கருத்தை மதிப்பு மிக்கதாக செய்யும் முயற்சிக்கும் வரவேற்கப் படுகிறார்கள். உள்ளூர் சமூகத்துடன் இணைந்து சூழலில் இணக்கமான லாபம் தரும் விவசாய பொருட்களை உற்பத்தி செய்வதற்கான தார்மீக கடமையைத் தவிர வேறு ஒரு குறிப்பிட்ட நிலையான தேவைகள் இல்லை.

3. விவசாய பண்ணை ஒரு நவீன அணுகுமுறையை வளங்குன்றா வேளாண்மையில் பயன்படுத்துமா?

வளங்குன்றா வேளாண்மையின் பொருள் குறைந்த விளைச்சல் அல்லது ஏழை விவசாயிகளுக்கான முறை என்பது அல்ல. இது 19-ம் நூற்றாண்டின் வகைப்படுத்துதல் முறையாகும். மாறாக, வளங்குன்றா வேளாண்மை, தற்போதைய வேளாண் சாதனைகள் எந்த விவசாயத்தை நம்பியிருக்கும் வளங்களின் மதிப்பு குறையாமல் அதிக லாபம் மற்றும் பண்ணை லாபத்தைப் பராமரித்தல் போன்ற சிக்கலான அணுகுமுறையை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். பயிர் சுழற்சி வேலைகள் பூச்சிக் கட்டுப்பாட்டைக் குறைத்தல் செலவுகள் போலவே, உயர் விளைச்சல் ரகங்களின் செலவுகளும் இருக்கிறது, அது போலவே, நேற்றைய குறைந்த விளைச்சல் தரும் இரகங்களின் செலவுகளும் இருக்கிறது. விவசாயத்தை வளங்குன்றாமல் செய்வது என்பது, பயிர்களைத்தின்னும் பூச்சிகளைக் கவனிப்பது என்று பொருளல்ல. அது உயர் தரமான மண், பயிர் சுழற்சி, மற்றும் நன்மை பயக்கும் பூச்சிகளைப் பயன்படுத்தி ஒரு முற்றிலும் மாறுபட்ட வழியில் பூச்சிக் கட்டுப்பாட்டை நெருங்குதலாகும்.

நாம் நமது விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகளைக் குறைவாக மதிப்பிட்டால், சிறந்த இன்றைய உற்பத்தியை ஏற்றுக்கொண்டால், மிகவும் மாசுபட்டுள்ள விவசாயத்தைத் தான் நாம் இந்த நாட்டில் செய்ய முடியும். அதிக உற்பத்தியை மேம்படுத்தும் சவாலில், விவசாயிகள் மற்றும் விஞ்ஞானிகளுக்கு வளங்களைக் கொடுக்க வேண்டும்.

ஆதாரம்: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்