பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டம் பிரதமரின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் (2021-22 முதல் 2025-26 வரை) நாடு முழுவதும் 6,300.97 லட்சம் விவசாய காப்பீட்டுகான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் 284.61 லட்சம் விண்ணப்பங்களும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 8.73 லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் கீழ் கடந்த ஐந்து ஆண்டுகளில் காப்பீட்டு நிறுவனங்களால் ரூ.1,30,268.20 கோடி மொத்தக் காப்பீட்டுக் கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாயிகளின் பங்கு ரூ.18,351.69 கோடி, மாநில அரசுகளின் பங்கு ரூ.66,177.87 கோடி மற்றும் மத்திய அரசின் பங்கு ரூ.55,738.64 கோடியாகும். மேலும், மாற்று இடர் பரிமாற்ற மாதிரி அமைப்புகளின் கீழ் ரூ.15,552.29 கோடியை காப்பீட்டு நிறுவனங்கள் அரசுகளுக்குத் திருப்பி அளித்துள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் பெறப்பட்ட ரூ.91,318.21 கோடி இழப்பீட்டுக் கோரிக்கைகளில் ரூ.86,731.59 கோடி விவசாயிகளுக்கு இழப்பீடாக வழங்கப்பட்டுள்ளது. சரிபார்க்கப்படாத வங்கிக் கணக்கு விவரங்கள் காரணமாகவே தமிழ்நாட்டில் சில இழப்பீட்டுத் தொகைகள் நிலுவையில் உள்ளன. விரைவான இழப்பீட்டுக்கு டிஜிட்டல் தொழில்நுட்பம் இழப்பீட்டுத் தொகையை விரைவாக வழங்கிட 'டிஜிக்ளெய்ம்' (Digiclaim) சேவை உருவாக்கப்பட்டுள்ளது. காப்பீட்டுத் தொகையை வழங்கத் தாமதிக்கும் நிறுவனங்களுக்கு 12 சதவீத அபராதமும், மாநில அரசு மானியத் தொகையைத் தாமதித்தால் 12 சதவீத அபராதமும் விதிக்கப்படுகிறது. மேலும், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி செயற்கைக்கோள் மூலம் பயிர் சேதத்தைக் கணக்கிடும் 'யெஸ்-டெக்' (YES-TECH) மற்றும் 'கிளாப்' (CLAP) செயலிகளும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. விவசாயிகளுக்கான குறைதீர்ப்பு சேவை விவசாயிகளின் புகார்களுக்குத் தீர்வு காண தேசிய அளவில் 14447 என்ற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுடன் 'கிரிஷி ரக்ஷக்' (Krishi Rakshak) இணையதளமும் செயல்பட்டு வருகிறது. ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்