உலக மீன்வள, மீனவர் தினம் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21-ந் தேதி உலகம் முழுவதிலும் கடைபிடிக்கப்படுகிறது. பின்னணியம் 1997 ஆம் ஆண்டு "உலக மீன் அறுவடை செய்பவர்கள் மற்றும் மீன் தொழிலாளர்களின் உலக மன்றம்" புது தில்லியில் கூடி, 18 நாடுகளின் பிரதிநிதிகளுடன் "உலக மீன்வள மன்றம்" உருவாவதற்கு வழிவகுத்தது மற்றும் நிலையான மீன்பிடி நடைமுறைகள் மற்றும் கொள்கைகளுக்கான உலகளாவிய ஆணையை வலியுறுத்தும் பிரகடனத்தில் கையெழுத்திட்டது. இதனை குறிக்கும் வகையில் மற்றும் உலகம் முழுவதும் உள்ள அனைத்து மீனவர்கள், மீன் விவசாயிகள் மற்றும் துறைசார்ந்த பங்குதாரர்களுடன் பரஸ்பர ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 21ஆம் தேதி உலக மீன்வள தினம் கொண்டாடப்படுகிறது. 2022 கொண்டாட்டம் மீன்வளத் துறை, மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வள அமைச்சகம் மற்றும் தேசிய மீன்வள மேம்பாட்டு வாரியம் ஆகியவை இணைந்து 21 நவம்பர் 2022 அன்று டாமனில் உள்ள சுவாமி விவேகானந்தர் அரங்கத்தில் ‘உலக மீன்வள தினத்தை’ கொண்டாடுகின்றன. இந்த நிகழ்வின் போது, கடந்த மூன்று ஆண்டுகளில் 2019-20 முதல் 2021-22 வரை சிறப்பாக செயல்பட்ட மாநிலங்கள் / மாவட்டங்கள் மற்றும் மீன் வளம் சார்ந்த நடவடிக்கைகளில் சிறப்பாக செயல்பட்ட பல்வேறு நிறுவனங்களுக்கு பாராட்டும், விருதும் அளிக்கப்படும். மீன்வள அபிவிருத்திக்கான அரசின் திட்டங்கள் மீன்பிடித் துறையை பல்வேறு வகையில் மேம்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகின்றது. நாட்டில் நீலப் புரட்சி மூலம் நிலையான மீன்வளம், மீன்வளர்ப்பு மற்றும் பொருளாதார புரட்சியை ஏற்படுத்துகிறது. மீன்வளர்ப்பை தீவிரப்படுத்துதல், விரிவுபடுத்துதல், மேம்படுத்துதல் மற்றும் மீன்வள மேலாண்மையை மேம்படுத்துதல் போன்றவற்றின் மூலம் விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க இந்தத் துறை திட்டமிட்டுள்ளது. கடந்த 2020 ஆண்டு மே மாதம் “பிரதான் மந்திரி மத்ஸ்ய சம்பதா யோஜனா (பிஎம்எம்எஸ்ஒய்) என்ற திட்டத்தை ரூ. 20050 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம், வரும் 2024-25 ஆம் ஆண்டில் மீன் உற்பத்தியை தற்போதைய 13.76 மில்லியன் மெட்ரிக் டன்னில் இருந்து 22 மில்லியன் மெட்ரிக் டன்னாக அதிகரித்து, இந்தத் துறையின் மூலம் சுமார் 55 லட்சம் கூடுதலாக வேலைவாய்ப்பை உருவாக்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்