புதுச்சேரி அரசு போக்குவரத்துத் துறை சார்பில் பேன்சி வாகன பதிவு எண்களுக்கான இணையதள ஏலம் செவ்வாய்க்கிழமை தொடங்கி வரும் 21-ம் தேதி வரை நடக்கிறது.

பேன்சி வாகன பதிவு எண் (PY-01-CK) www.auctionindia.com என்ற இணையதளம் மூலம் நாள்தோறும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கிறது.

இந்த இணையதள ஏலத்தில் பங்கு பெற விரும்பும் பொதுமக்கள் அதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் ஏல நிபந்தனைகளை http:transport.puducherry.gov.in என்ற இணையதள முகவரியில் பார்த்தும் மற்றும் பதிவிறக்கமும் செய்யலாம்.

விண்ணப்பத்தொகையின்விவரம், இஎம்டியின் விவரம், மற்றும் இதுதொடர்பான ஏலநிபந்தனைகளின் மூலமாகவும் மற்றும் போக்குவரத்துத் துறை அலுவலகத்திலும் அறிந்து கொள்ளலாம்.