தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி தகவல் அறிய சமர்ப்பிக்கப்படும் இரண்டாம் மனு எழுதுவது குறித்த சில குறிப்புகள்

இரண்டாம் முறையீட்டை எப்போது செய்வது?

முதன்மை முறையீட்டு அதிகாரியின் தீர்ப்பு உங்களுக்கு திருப்தியளிக்காத போது.

பொதுதகவல் அதிகாரியினால் உங்களுக்குத் தரப்பட்ட தகவல் போதுமானதாக இல்லாமல் இருக்கும் போது (அ) தவறானதாக இருக்கும் போது மற்றும் தவறான வழிகாட்டுதலுக்குக் காரணமாக அமையும் போது.

பொதுத்தகவல் அதிகாரி (PIO) அல்லது முதன்மை முறையீட்டு அதிகாரி (AA) உங்களது மனுவில் கோரப்பட்டுள்ள தகவலைத்தர நிராகரிக்கும்போது.

மேல்முறையீட்டு அதிகாரி, குறிப்பிட்ட கால அளவுக்குள் மனுவிற்கான தீர்ப்பு கூறாமலிருந்தால்.

துணை பொதுத்தகவல் அதிகாரி உங்களது மனுவை பெறமறுத்தால், அல்லது மனுவை மாநில/மத்திய பொதுதகவல் அதிகாரிகளுக்கு அல்லது மாநில/மத்தியத் தகவல் குழுக்களுக்கு அனுப்பமறுத்தால்.

தகவல் அறியும் சட்டம் 2005 இன் மூலம் தகவலைப் பெற மனுவிற்காக வசூலிக்கப்படும் கட்டணம் அதிகமென்று நீங்கள் எண்ணினால்.

இரண்டாம் மேல்முறையீட்டு மனுவை எங்கு சமர்ப்பிக்க வேண்டும்?

மாநிலத்தகவல் ஆணையர் அலுவலகத்தில் (State Information Commission (SIC)) மனுவானது மாநில பொது அதிகாரத்திற்குட்பட்டிருந்தால் (State’s Public Authority)

மத்தியத்தகவல் ஆணையர் அலுவலகத்தில் (State’s Public Authority) மனுவின் சாரம் மத்தியத்தகவல் பொது அதிகாரத்திற்குட்பட்டிருந்தால்

இரண்டாம் மேல்முறையீடு செய்யக்கால அவகாசம்

கூறப்பட்டுள்ள காலாவதியாகிய நாளிலிருந்து 90 நாட்களுக்குள் அல்லது முதன்மை மேல்முறையீட்டு அதிகாரியிடமிருந்து தகவல்பெற்ற (தீர்ப்பு அல்லது வேண்டுதல் நிராகரிப்பு) 90 நாட்களுக்குள்

மாநில / மத்தியத்தகவல் ஆணையம், மேல்முறையீட்டாளர் தனது மனுவினைப் பதிவு செய்ய முடியாமல் தடுக்கப்பட்டார் என்று உணர்ந்தால் மேல்முறையீட்டாளரின் மனு தரப்பட்டு 90 நாள்கள் சென்ற பின்னும் இரண்டாம் மனு சமர்ப்பிக்கலாம்.

இரண்டாம் மேல்முறையீட்டு மனுவினை எழுதும் முறை

உங்கள் மனுவை வெள்ளைத்தாளில் எழுதவும் செய்யலாம் அல்லது  இரண்டாவது முறையீட்டிற்கான படிவம் என்னும் இணைப்பிலிருந்து இறக்கம் செய்து கொள்ளலாம்.

மனுவினைக் கையால் எழுதலாம் அல்லது தட்டச்சு செய்யலாம்.

மனு, ஆங்கிலம் அல்லது இந்தியில் எழுதப்பட்டிருக்க வேண்டும் (மத்தியத்தகவல் ஆணையம் தொடர்பான மனுவாக இருப்பின்) அல்லது எந்த மாநில மொழியிலாவது எழுதப்பட்டிருக்க வேண்டும் (மாநிலத் தகவல் ஆணையம் தொடர்பான மனுவாக இருப்பின்)

மனுவினை/விண்ணப்பபடிவத்தினைத் தயாரித்தல்

தேவையான தகவலை அதற்குரிய படிவத்தில் தெளிவாகத் தரவேண்டும்.

இணைக்கப்பட்ட ஆவணங்களின் பட்டியலை பக்க எண்ணுடன் சேர்க்கவும்.

அனைத்து ஆவணங்களையும் 5 நகல்கள் எடுத்துக்கொண்டு (அதாவது, மேல்முறையீட்டு மனு, தகவலுக்கான வேண்டுதல், முதலில் அனுப்பப்பட்ட மனு, பொதுதகவல் அதிகாரியிடம் கட்டணம் செலுத்தப்பட்டதற்கான ஆதாரம் போன்றன) அவைகளில் சுய ஒப்பமிட (self attested) வேண்டும். உங்களுக்காக ஒரு சொந்த நகல் ஒன்றையும் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

மனுவினை எவ்வாறு அனுப்ப வேண்டும்

பதிவுத்தபால் மூலம் மனுவின் ஐந்து நகல்களை அனுப்பவேண்டும்.

மனுவிடன் ஒப்புதல் அட்டையை (acknowledgement card) இணைத்து அனுப்பவும்.

மத்திய தகவல் ஆணையத்திற்கு (Central Information Commission) அனுப்பப்பட வேண்டிய மனு எனில் கணிப்பொறிவழி (online) சமர்ப்பிக்கலாம். என்ற இணையதள முகவரியில் மனுவினைச் சமர்ப்பிக்கலாம்.

தகவல் தருவதற்கான கால அவகாசம்

சாதாரணமாக மனுவின் மீதான முடிவு 30 நாட்களில் தரப்பட வேண்டும். விதிவிலக்கான சில வழக்குகளில் 45 நாட்கள் ஆகலாம்.

மத்திய/மாநில தகவல் ஆணையம் மனுவினை பெற்றுக்கொண்ட நாளிலிருந்து மனுவிற்கு பதிலளிக்க வேண்டிய கால அவகாசம் துவங்குகிறது.

மாநில/மத்திய தகவல் ஆணையக்குழு

இருவரையும் கட்டுப்படுத்தினாலும் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் (Public Authority) மாநில / மத்திய தகவல் ஆணையத் தீர்ப்பினை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம்.