இந்திய தண்டனைச் சட்டம், 1860 இன் பிரிவு 312 இந்திய தண்டனைச் சட்டம், 1860 இன் பிரிவு 312, எந்த நபராவது தன்னிச்சையாக அந்த பெண்னைக் காக்கும் நல்லெண்ணமில்லாது கருச் சிதைவு செய்யத் தூண்டினால் அந்த நபருக்கு இப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டலாம். அந்த நபருக்கு 3 வருடம் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் தண்டனையாக விதிக்கப்படும். அப்பெண்ணின் 4வது அல்லது 5வது மாதத்தில் கருச்சிதைவு செய்தால் 7 வருடம் சிறை மற்றும் அபராதம் தண்டனையாக விதிக்கப்படும். ஒரு பெண் தானாக கருச்சிதைவு செய்து கொண்டாலும் இப்பிரிவின் கீழ் குற்றம் சாட்டலாம். கருச்சிதைவு செய்யும் நபர் மருத்துவராக இல்லாவிட்டால் அந்நபர் தண்டிக்கப்படுவார். மருத்துவக் கருவுறுதல் சட்டம் (எம்.டி.பி சட்டம்) 1971 ஆம் ஆண்டில், கருக்கலைப்புக்கு அணுகுவதை தாராளமயமாக்க மருத்துவக் கருவுறுதல் சட்டம் (எம்.டி.பி சட்டம்) அறிமுகப்படுத்தப்பட்டது. எம்.டி.பி சட்டம் இரண்டு நிலைகளில் ஒரு மருத்துவ பயிற்சியாளரால் கர்ப்பத்தைக் கலைக்க அனுமதித்தது. கருத்தரித்ததிலிருந்து 12 வாரங்கள் வரை கர்ப்பத்தைக் கலைக்க ஒரு மருத்துவரின் கருத்து தேவை. 12 மற்றும் 20 வாரங்களுக்கு இடைப்பட்ட கர்ப்பங்களைக் கலைக்க இரண்டு மருத்துவர்களின் கருத்து தேவை – கர்ப்பத்தின் தொடர்ச்சி கர்ப்பிணிப் பெண்ணின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துமா அல்லது குழந்தை பிறந்தால், அவளது உடல் அல்லது மன ஆரோக்கியத்திற்கு கடுமையான காயத்தை ஏற்படுத்துமா, அந்த பெண்ணின் கர்ப்பத்தைக் கலைப்பதற்கு ஒப்புக்கொள்வதற்கு முன், அவர் உடல் அல்லது மனரீதியாக பாதிக்கப்படுவாரா, தீவிரமாக ஊனமுற்றவராக இருப்பது போன்ற உடல் அல்லது மனநல குறைபாடுகளால் பாதிக்கப்படும் கணிசமான ஆபத்து உள்ளதா என்பதை மருத்துவர்கள் தீர்மானிக்க வேண்டும். 2021 ஆம் ஆண்டில், நாடாளுமன்றம் இந்த சட்டத்தை திருத்தியது. 20 வாரங்கள் வரயிலான கருவை ஒரு மருத்துவரின் கருத்தின் படி கலைக்கலாமா என்ற முடிவுக்கு அனுமதித்தது. 20 முதல் 24 வாரங்களுக்கு இடைப்பட்ட கர்ப்பத்தைக் கலைக்க திருத்தப்பட்ட சட்டத்தின்படி இரண்டு மருத்துவர்களின் கருத்து தேவைப்படுகிறது. இரண்டாவது வகையில், கருக்கலைப்பு கோருவதற்கு தகுதியுடைய பெண்களின் ஏழு பிரிவுகளை சட்ட விதிகள் குறிப்பிட்டுள்ளன. எம்.டி.பி சட்டத்தின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட விதிகளின் பிரிவு 3பி பின்வருமாறு கூறுகிறது: “இந்த சட்டத்தின் உட்பிரிவு (2) பிரிவு 3 இன் உட்பிரிவு (பி) இன் கீழ், இருபத்தி நான்கு வாரங்கள் வரையிலான கர்ப்பத்ததைக் கலைப்பதற்கு பின்வரும் வகை பெண்கள் தகுதியுடையவர்களாக கருதப்படுவார்கள். அதாவது: பாலியல் வன்கொடுமை அல்லது கற்பழிப்பு அல்லது பாலியல் வன்கொடுமையில் இருந்து தப்பியவர்கள், அல்லது முறையற்ற உறவுகளால் கர்ப்பமடைந்தவர்கள் கர்ப்பத்தைக் கலைக்கத் தகுதியுடையவர்கள். 18 வயது நிரம்பாத சிறுமிகள் கர்ப்பத்தைக் கலைக்கத் தகுதியுடையவர்கள் கர்ப்பத்தின் போது திருமண நிலை மாற்றம் (விதவை மற்றும் விவாகரத்து); உடல் குறைபாடுடைய பெண்கள் [மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள அளவுகோல்களின்படி பெரிய குறைபாடு இருந்தால் கர்ப்பத்தைக் கலைக்கத் தகுதி உடையவர்கள். மனநலம் குன்றியவர்கள் உட்பட மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள்; பெண்ணின் உயிருடன் ஒத்துப்போகாமல் இருப்பதற்கு கணிசமான ஆபத்துள்ள கருவின் குறைபாடு அல்லது குழந்தை பிறந்தால், அது போன்ற உடல் அல்லது மன அசாதாரணங்களால் கடுமையாக ஊனமுற்றவராக ஆகலாம் என்ற பெண்கள் அரசாங்கத்தால் அறிவிக்கப்படும் மனிதாபிமான சூழல்கள் அல்லது பேரிடர் அல்லது அவசரகால சூழ்நிலைகளில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள்.