அறிமுகம் அரசு துறை ஆணை எண். 828 ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை, நாள். 07.05.1981-ன்படி ஊரக வளர்ச்சித் துறையில் இருந்து பேரூராட்சிகளை, தனித் துறையாக பிரித்து ஆணையிடப்பட்டுள்ளது, 1994-ம் ஆண்டில் பேரூராட்சிகள் மாவட்ட நகராட்சிகள் சட்டம் 1920-ன்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. மாவட்ட பேரூராட்சி அலுவலர், மாவட்ட ஆட்சியர் அவர்களின் நேர்முக உதவியாளர்(பேரூராட்சிகள்) என்ற பெயரில் இருந்த பதவியினை 06.02.1995 முதல் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் என வகைப்படுத்தி, மண்டல அலுவலகம் என இயங்கி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் உள்ள 17 மண்டலங்களில் கடலூர் மண்டலமும் ஒன்று. பேரூராட்சிகளின் இயக்குநரே பேரூராட்சிகளின் ஆய்வாளர் ஆவார். இம் மண்டலம் கடலூர் மற்றும் விழுப்புரம் ஆகிய இரண்டு மாவட்ட ஆட்சித்தலைவர்களது நேரடி கட்டுப்பாட்டிலும், உதவி இயக்குநர் கண்காணிப்பிலும் இயங்கி வருகிறது. இந்த இரண்டு மாவட்டங்களில் மொத்தம் 31 பேரூராட்சிகள் உள்ளன, பேரூராட்சிகள் நான்கு நிலைகளில் கீழ்க்கண்டவாறு தரம் பிரிக்கப்பட்டு இயங்கி வருகின்றன. கடலூர் மண்டல பேரூராட்சிகள் வ.எண்நிலைபேரூராட்சிகளின் பெயர்இணையதள முகவரி 1 சிறப்புநிலை பேரூராட்சி அண்ணாமலைநகர் www.townpanchayat.in/annamalainagar 1 தேர்வுநிலை பேரூராட்சிகள் காட்டுமன்னார்கோயில் www.townpanchayat.in/kattumannarkoil 2 பரங்கிப்பேட்டை www.townpanchayat.in/parangipettai 3 வடலூர் www.townpanchayat.in/vadalur 4 திட்டக்குடி www.townpanchayat.in/tittakudi 5 குறிஞ்சிப்பாடி www.townpanchayat.in/kurinjipadi 6 புவனகிரி www.townpanchayat.in/bhuvanagiri 7 கெங்கைகொண்டான் www.townpanchayat.in/gangaikondan 8 பெண்ணாடம் www.townpanchayat.in/pennadam 9 ஸ்ரீமுஷ்ணம் www.townpanchayat.in/srimushnam 10 சேத்தியாதோப்பு www.townpanchayat.in/sethiyathope 11 முதல்நிலை பேரூராட்சிகள் லால்பேட்டை www.townpanchayat.in/lapettai 12 மங்கலம்பேட்டை www.townpanchayat.in/mangalampettai 13 தொரப்பாடி www.townpanchayat.in/thorapadi 14 மேல்பட்டாம்பாக்கம் www.townpanchayat.in/melpattambakkam 15 இரண்டாம்நிலை பேரூராட்சி கிள்ளை www.townpanchayat.in/killai பேரூராட்சிகளில் தொடர்புக்கு வ.எண்பேரூராட்சியின் பெயர்தொலைபேசி எண்மின் அஞ்சல்முகவரி 1 அண்ணாமலை நகர் 04144 –238810 7824058363 annamalainagartp[at]gmail.com 2 காட்டுமன்னார் கோயில் 04144 –262032 7824058366 eotpc2[at]gmail.com 3 பரங்கிப்பேட்டை 04144 –243249 7824058372 eotpc3[at]gmail.com 4 வடலூர் 04142 – 259232 7824058378 eotpc4[at]gmail.com 5 திட்டக்குடி 04143 – 255369 7824058376 eotpc5[at]gmail.com 6 குறிஞ்சிப்பாடி 04142 – 258387 7824058368 kurinjipaditp.cud[at]gmail.com 7 புவனகிரி 04144 – 241212 7824058364 bhuvanagiritp[at]gmail.com 8 கெங்கை கொண்டான் 04142 – 262354 7824058365 eotpc8[at]gmail.com 9 பெண்ணாடம் 04143 – 222221 7824058373 eotpc9[at]gmail.com 10 ஸ்ரீமுஷ்ணம் 04144 – 245388 7824058375 srimushnamtp[at]gmail.com 11 லால்பேட்டை 04144 – 268078 7824058369 eotpc11[at]gmail.com 12 மங்கலம் பேட்டை 04143 – 244240 7824058370 eotpc12[at]gmail.com 13 தொரப்பாடி 04142 –244905 7824058377 eotpthorapadi[at]gmail.com 14 மேல்பட்டாம் பாக்கம் 04142 – 276489 7824058371 melpattampakkamtp[at]gmail.com 15 கிள்ளை 04144 – 249227 7824058367 killaitp[at]gmail.com 16 சேத்தியாதோப்பு 04144 – 244252 7824058374 eotpc16[at]gmail.com தகவல் பெறும் உரிமைச் சட்டம் அலுவலகம் பெயர்பொருள்பொது தகவல் அலுவலர்மேல்முறையீட்டு அலுவலர் தொடர்புடைய பேரூராட்சி அலுவலகம் தகவல் பெறும் உரிமைச் சட்டம் மனுக்கள் தொடர்புடைய பேரூராட்சி செயல் அலுவலர் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், கடலூர் மண்டலம் தூய்மை இந்தியா திட்டம் – தனிநபர் கழிப்பிடம் கட்டுதல் தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் இம்மாவட்டத்தில் கெங்கைகொண்டான், காட்டுமன்னார்கோயில், குறிஞ்சிப்பாடி, மேல்பட்டாம்பாக்கம், பரங்கிப்பேட்டை, பெண்ணாடம், திட்டக்குடி மற்றும் கிள்ளை ஆகிய 8 பேரூராட்சிகள் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத பேரூராட்சிகளாக இந்திய அரசால் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள 8 பேரூராட்சிகளும் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத பேரூராட்சிகளாக இந்திய அரசால் அறிவிப்பு செய்வதற்கு தயார் நிலையில் உள்ளது. கடந்த 2015-16 மற்றும் 2016-17ம் ஆண்டுகளில் 5865 தனிநபர் கழிப்பிடங்கள் ரூ.505.68 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளது. மேலும் ஏற்கனவே பல்வேறு திட்டங்களின்கீழ் 145 ஒருங்கிணைந்த சுகாதார வளாகங்கள் ரூ.94.25 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. நடப்பு ஆண்டில் 1497 தனிநபர் கழிப்பிடம் ரூ. 119.76 லட்சம் மதிப்பீட்டில் எடுக்கப்பட்டு பயனாளிகளால் கட்டி முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இத்திட்டம் முழுமையாக பேரூராட்சிப் பகுதிகளில் செயல்படுத்தப்பட்டு பேரூராட்சிப் பகுதிகளில் திறந்தவெளியில் மலம் கழித்தல் இல்லாத பேரூராட்சிகளாக அரசு அளவில் அறிவிப்பு செய்திட தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் (பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டம்) கடலூர் மாவட்டத்தில் 16 பேரூராட்சிகளில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின்கீழ் 2015-16-ம் ஆண்டிற்கு 1067 வீடுகள் ரூ.3361.05 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு (1 வீட்டிற்கு ரூ.2.10 இலட்சம் மான்யம்) அனுமதிக்கப்பட்டு 832 வீடுகள் பயனாளிகளால் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சியுள்ள 235 வீடுகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 2016-17-ம் ஆண்டில் 13 பேரூராட்சிகளில் 5853 வீடுகள் ரூ.18436.95 லட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு 34 வீடுகள் பயனாளிகளால் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய 5819 வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. 2017-18ம் ஆண்டில் ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சியில் 115 வீடுகள் ரூ. 47.25 இலட்சம் மதிப்பீட்டில் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்டு பயனாளிகளால் வீடுகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் (SWM) கடலூர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மைத் திட்டம் அனைத்து பேரூராட்சிகளிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் பேரூராட்சிப் பகுதிகளில் உள்ள மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி துப்புரவு பணியாளர்களைக் கொண்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் நோக்கம் பேரூராட்சிகளை குப்பையில்லாத நகராமாகவும், சுத்தமான, சுகாதார நிலையிலும் வைத்திருக்க வேண்டும் என்பதே ஆகும். இத்திட்டத்தின் மூலம் வீடுகள்தோறும் குப்பைகள் தரம் பிரித்து வாங்கப்படுகிறது. தெருக்களில் உள்ள குப்பைகள் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் மூலம் சேகரம் செய்து திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தும் இடத்தில் ஒன்றாக கொட்டப்பட்டு அதில் மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பைகள் என்று தனித் தனியாக பிரித்தெடுக்கப்படுகிறது. மக்கும் குப்பைகள் உரம் தயாரிக்கவும், மக்காத குப்பைகள் தரம் வாரியாக பிரித்து விற்பனை செய்யப்படுகிறது. இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட பேரூராட்சிகளின் பகுதிகள் எங்கும் குப்பைகள் இல்லாத நிலை காணப்படுகிறது. அதுவும் தவிர பேரூராட்சிகளின் மக்களிடையே குப்பைகளை கண்ட இடங்களில் கொட்டாமல் தங்கள் வீட்டுக்குள்ளேயே வைத்து தனித் தனியாக பிரித்து கொடுக்கும் எண்ணமும் பரவி வருகிறது. இத்திட்டத்தின் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும் நிலையும், கிடைக்கும் உரத்தினை விற்பனை செய்வதால் பேரூராட்சிக்கு வருமானத்தை பெருக்கும் நிலையும் முன்னேற்றத்தில் உள்ளது. மேலும், பேரூராட்சிகளில் இத்திட்டத்தின் மூலம் தயாரிக்கப்படும் இயற்கை உரம் மற்றும் மண்புழு உரம் விவசாயத்திற்கு பயன்படும் வகையில் மொத்தமாகவும், சில்லைரையாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய முகவரி பேரூராட்சிகளின் உதவி இயக்குநர்,பழைய நாட்டாண்மைக் கழக கட்டடம்,பீச்ரோடு,கடலூர்- 607001. தொலைபேசி எண் – 04142 – 294542 நிகரி – 04142 – 294542 மின் அஞ்சல் – adtp-tncud[at]nic.in , adcuddalore[at]gmail.com , adtpcud[at]hotmail.com ஆதாரம் : https://cuddalore.nic.in/