மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியரகம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இந்திய ஆட்சி பணி அதிகாரி மாவட்ட ஆட்சித்தலைவராக நியமிக்கபட்டு மாவட்ட நிர்வாகத்தை வழிநடத்துகிறார். அவரே மாவட்ட நிர்வாக நடுவராக இருந்து சட்டம் ஒழுங்கு பாதுகாக்கப்படுவதை உறுதி செய்கிறார். அவர் மாவட்டத்தின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகள், சட்டம், ஒழுங்கு நிர்வாகம், பொது தேர்தல், துப்பாக்கி உரிமம் போன்ற பல முக்கிய பணிகளையும் செயல்படுத்துகிறார். கூடுதல் மாவட்ட ஆட்சியர்/மாவட்ட வருவாய் அலுவலர் வருவாய் துறையின் நேரடி நிர்வாகத் தலைவராகயிருந்து மாவட்டத்தில் வருவாய்த்துறை சட்டங்களின் செயல்பாட்டினை உறுதிசெய்கிறார். அவர் மாவட்ட கூடுதல் நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். குடிமை பொருட்கள் வழங்கல், நில நிர்வாகம், கனிமம் மற்றும் கனிமப்பொருட்கள் சட்டங்கள், கிராம நிர்வாகம் போன்றவை அவரது முக்கிய பணிகளாகும். வருவாய் துறையின் அனைத்து பிரிவுகளையும் நிர்வகித்து, தினசரி நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதும் இவரது பணியாகும். உதவி ஆட்சியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பிரிவுகளின் வேலைகளை நிர்வகித்து மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக இருக்கிறார்கள். இந்திய ஆட்சிப்பணி அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மட்டத்தில், நியமிக்கப்படும் ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட அலுவலர், மற்றும் துனை ஆட்சியர் மட்டத்தில் நியமிக்கப்படும் அலுவர்கள் ஊரக உள்ளாட்சித்துறையின் திட்டம் மற்றும் வளர்ச்சி பணிகளை செயல் படுத்துவதில் ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர். பேருராட்சிகளின் உதவி இயக்குனர், நகராட்சி, மாநகரட்சிகளின் கமிஷனர்கள் நகர்புற உள்ளாட்சிதுறை நிர்வாகத்தினை மேற்கொள்ள மாவட்ட ஆட்சியருக்கு உறுதுனையாக உள்ளனர். பிரிவு எ – பணியாளர் தொகுதி, அலுவலக நடைமுறைகள், பொதுத்தேர்தல் மற்றும் முக்கிய அதிகாரிகளின் தங்கல் மற்றும் பயண ஏற்பாடுகள் பிரிவு பி – நிலம் கையகப்படுத்துதல் மற்றும் அது தொடர்பான வழக்குகள் கையாளுதல், சிப்காட் மற்றும் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பிரிவு சி – சட்டம் ஒழுங்கு, நீதியியல் – வழக்குகள் பிரிவு இ – வரவு செலவு, தனிக்கை, சம்பளம் பிரிவு எப் – குடிமை பொருட்கள் பொது வினியோகம் பிரிவு ஜி – மறுவாழ்வு, அகதிகள் நலம், இலங்கை தமிழர்கள் நலம் பிரிவு ஹச் – நிலமாற்றம், நில ஒப்படைப்பு பிரிவு ஜே – பட்டா மாற்றம் மேல் முறையீடு, நிலா உடமை பதிவு மேம்பட்டு திட்டம் பிரிவு ஆர் – நிலம் கையகப்படுத்துதல், தேசிய நெடுஞ்சாலைகள், மின்சாரம் வாரியம் பிரிவு எல் – ஆதி திராவிடர் நலத்துறை பிரிவு எம் – பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆயத்தீர்வை – மாநில ஆயத்தீர்வை – டாஸ்மாக் மேலாண்மை பிரிவு க்யூ– இயற்கை இடர்பாடுகள், மலை பகுதிகள் வருவாய் வசூல் சட்டம், தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வீடு கட்டும் முன்பணம் சிறப்பு துணை ஆட்சியர் பிரிவு – பொது மக்கள் குறைதீர் பிரவு உதவி இயக்குனர் பஞ்சாயத்து – கிராம பஞ்சாயத்துகள் உதவி இயக்குநர் (தணிக்கை) – தனிக்கை மற்றும் உயர்மட்ட குழு, சிறு சேமிப்பு, பள்ளி சத்துணவு திட்டம், ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் உதவி இயக்குனர் நகர பஞ்சாயத்து – பேரூராட்சிகள் நிர்வாகம், பேரிடர் மேலாண்மை வருவாய் நிர்வாகம் கிருஷ்ணகிரி மாவட்டம் நிர்வாக வசதிக்காக இரண்டு வருவாய் கோட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. வருவாய் கோட்டம் சார் ஆட்சியர்/துணை ஆட்சியரின் தலைமையின் கீழ் இயங்குகிறது. இவர் கோட்ட நிர்வாக நடுவராகவும் செயல்படுகிறார். பணிகளை பொருத்த வரை வருவாய் கோட்ட அலுவலகங்கள், மாவட்ட ஆட்சியரகத்தின் ஒரு பிரதிபலிப்பாக இருந்து நிர்வாகத்தில் ஒரு இடைநிலை அலுவலகமாக செயல்படுகிறது. ஒவ்வொரு வருவாய் கோட்டமும் ஒரு சில வட்டங்களை உள்ளடக்கி அதன் செயல்பாடுகளைக் கண்காணிக்கிறது. வருவாய் கோட்டங்கள் 2 வருவாய் வட்டங்கள் 7 வருவாய் உள்வட்டங்கள் 23 வருவாய் கிராமங்கள் 470 வருவாய் வட்டங்கள் வருவாய் கோட்டங்களின் பெயர் வருவாய் வட்டங்களின் எண் வருவாய் வட்டங்களின் பெயர் கிருஷ்ணகிரி 05 கிருஷ்ணகிரி கிருஷ்ணகிரி 06 பர்கூர் கிருஷ்ணகிரி 07 ஊத்தங்கரை கிருஷ்ணகிரி 08 போச்சம்பள்ளி ஓசூர் 09 ஓசூர் ஓசூர் 10 தேன்கனிகோட்டை ஓசூர் 11 சூளகிரி உள்ளாட்சி அமைப்புகள் நகராட்சி வ.எண் நகராட்சி பெயர் தொலைபேசி எண் 1 கிருஷ்ணகிரி 04343-232597 1 ஓசூர் 04344-222677 பேரூராட்சிகள் வ.எண் பேரூராட்சியின் பெயர் தொலைபேசி எண் 1 ஊத்தங்கரை 04341-220056 2 காவேரிப்பட்டினம் 04343-250058 3 கெலமங்கலம் 04347-232222 4 பர்கூர் 04343-265528 5 தேன்கனிக்கோட்டை 04347-235056 6 நகோஜனஹள்ளி 04343-258064 ஆதாரம் : https://krishnagiri.nic.in/