தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி இயக்குநா் (ஊராட்சிகள்) அலுவலகத்தில் பின்வரும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மாநில நிதிக்குழு மானியத் தொகைகள் மூன்றடுக்கு ஊராட்சிகளுக்கு பிரித்து வழங்குதல்

ஒப்படைக்கப்பட்ட வருவாய் தொகைகள் கிராம ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கு பிரித்து வழங்குதல்

கனிமம் சுரங்கம் தலைப்பில் வரப்பெறும் தொகைகளை சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சிகளுக்கு பிரித்து வழங்குதல், மற்றும் கனிமம் சுரங்கம் தலைப்பில் பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்குதல்

14வது நிதிக்குழு மானியத் தொகைகள் அனைத்து கிராம ஊராட்சிகளுக்கும் பிரித்து வழங்குதல், பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல்

உட்கட்டமைப்பில் விடுபட்டதை சரிபடுத்தும் நிதி தொகையிலிருந்து பணிகளுக்கு நிர்வாக அனுமதி வழங்குதல் மற்றும் நிதி விடுவித்தல்

ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியங்களுக்கான பொதுநிதியில் குடிநீா் பணிகளுக்கு முன்னுாிமை அடிப்படையில் நிர்வாக அனுமதி வழங்குவது

கிராம ஊராட்சிகளில் ஆக்கிரமிப்பு தொடா்பான அறிக்கை பெறுவது

கிராம ஊராட்சி ஒன்றியங்களில் பல்வேறு திட்டங்களில் மேற்கொள்ளப்படும் பணிகள் தொடா்பாக இணையதளத்தில் பதிவு செய்வதை கண்காணித்தல்

அனைத்து கிராம ஊராட்சிகளில் கிராம சபா கூட்டங்கள் நடைபெறுவது தொடா்பான அறிக்கை பெறுவது

கிராம ஊராடசி தலைவா்கள் மீதான நீதிமன்ற வழக்குகள் குறித்த கோப்புகளை பராமரித்தல்

திங்கள் கிழமை குறைதீா்க்கும் பிரிவு மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுகளிலிருந்து பெறப்படும் மனுக்கள் குறித்து நடவடிக்கை மேற்கொள்வது

விளம்பர பலகை அமைப்பதற்கு அனுமதி வழங்குவது அனைத்து வரியினங்களுக்கான கேட்பு வசூல் மற்றும் நிலுவை குறித்து நடவடிக்கை மேற்கொள்வது

ஆதாரம் - தூத்துக்குடி மாவட்டம்