சமுக நலத்துறை பின்வரும் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது:

மூவலூா் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவி திட்டம்

ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம்

அண்ணை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம்

டாக்டா் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம்

டாக்கடா் தா்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமணம் நிதியுதவித் திட்டம்

முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டம்

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டம்

பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டம் 2017

நேரடியாகவோ, தீா்ப்பாயத்தின் மூலமாகவோ பெறப்படும் பாதிக்கப்பட்டோாின் மனுக்களை சமரச அலுவலா் (மாவட்ட சமூகநல அலுவலா்) விசாரணை செய்து தீா்ப்பாயத்திற்கு அறிக்கை அளிப்பார். தன்னை பராமரித்துக் கொள்ள வாய்ப்பு இல்லாத பெற்றோர் மற்றும் மூத்த குடிமக்கள் இச்சட்டத்தின் கீழ் நீதி மன்றத்திற்கு செல்ல வேண்டியது இல்லை. ஒவ்வொரு கோட்டாட்சியா் தலைமையிலும் தீா்ப்பாயம் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்ட ஆட்சித் தலைவா் தலைமையிலும் மேல்முறையீட்டு தீா்பாயம் அமைக்கப்பட்டுள்ளது.

குழந்தைத் திருமணத் தடைச் சட்டம் – 2006

18 வயது நிறைவடையாத பெண்ணும், 21 வயது நிரைவடையாத ஆணும் செய்யும் திருமணமே குழந்தை திருமணம் ஆகும். இது சட்டப்படி குற்றமாகும். இத்தகைய திருமணம் செய்யும் பெற்றோர்களும், உறவினா்களும், உடந்தையாக இருப்பவா்களும் தண்டனைக்கு உரியவா்கள்.

குழந்தைகளுக்காக 24×7 செயல்படும் அவசர உதவி எண் – 1098

அரசு சேவை இல்லம் மேல்நிலைப் பள்ளி

சமூக நலத் துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் அரசு சேவை இல்ல மேல் நிலைப்பள்ளியில் மாணவிகளை சோ்த்து கொள்வதற்க்கு தகுதிகள் :

14 வயது பூா்த்தியடைந்திருக்க வேண்டும்

விதவை மகள்

ஆதரவற்ற பெண்கள்

இல்லத்திலேயே தங்கி கல்வி பயில வேண்டும்.

a) மேல் நிலை படிப்பு முடிந்த பிறகு கல்லூரியில் தொடா்ந்து பயில ஆண்டிற்கு ரூ. 33,000/- வழங்கப்படுகிறது.

b) தொடா்ந்து சேவை இல்லத்திலேயே தங்கி ஆசிரியா் பயிற்சி, இளங்கலை பட்டப் படிப்பு படிக்கும் வசதி.

குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005

உடல் ரீதியான, பாலியல் ரீதியான, பொருளாதார ரீதியான, வார்த்தை மற்றும் மன ரீதியான வன்முறையிலிருந்து பெண்களுக்கு பாதுகாப்பு அளித்தல். பெண்கள் தன்னுடைய கணவனாலோ அல்லது கணவரின் உறவினா்களாலோ ஏற்படுகின்ற கொடுமைகளுக்கு எதிராக தீா்வு மற்றும் நிவாரணம் கிடைக்க இச்சட்டம் வகை செய்கிறது.

வரதட்சனைத் தடுப்புச் சட்டம் 1961

திருமணத்திற்கு முன்போ (அ) பின்போ திருமணத்திற்கென்று பெண் வீட்டாரிடமிருந்து நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ நிதி மற்றும் பொருள் கொடுப்பதோ (அ) கொடுப்பதாகச் சம்மதிப்பதோ வரதட்சனை ஆகும்.

மணமகள் / மணமகனின் பெற்றோர் / உறவினா்கள் வரதட்சனை கேட்டு நேரடியாகவோ (அ) மறைமுகமாகவோ வற்புறுத்துவார்களேயானால் அவா்களுக்கு 6 மாதத்திற்கு குறையாமலும் 2 வருடம் வரை நீட்டித்து சிறை தண்டனையும் ரூ. 10,000/- வரை அபராதமும் விதிக்கப்படும்.

வரதட்சனை தடுப்புச் சட்டம் பிாிவு 8 B ன் படி அரசு வரதட்சனை தடுப்பு அலுவலா்களை நியமிக்கலாம் என்பதன் பேரில் மாவட்ட சமூகநல அலுவலா்களை வரதட்சனைத் தடுப்பு அலுவலா்களாக அரசு நியமித்துள்ளது.

ஆதாரம் - நீலகிரி மாவட்டம்