சமூக நலத்துறையின் கீழ் ஐந்து வகையான திருமண நிதியுதவி திட்டங்கள் செயல்பட்டு வருகின்றன.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்

டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித்திட்டம்.

ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைமகள் திருமண உதவித்திட்டம்.

அன்னைதெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம்.

டாக்டர். முத்துலெட்சுமிரெட்டி நினைவு கலப்புத்திருமண உதவித்திட்டம்.

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம்

திட்டத்தின் நோக்கம் பெண்களின் கல்வி நிலையை உயர்த்துதல் மற்றும் ஏழை பெண்களின் திருமணத்திற்கு அவர்களின் பெற்றோர்களுக்கு நிதி உதவி வழங்குதல்.

திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1989

17.05.2011 க்கு முன்பாக ரூ25000/- மற்றும் ரூ50000/- காசோலை மட்டும் வழங்கப்பட்டது. (17.05.2011 முதல் ரூ25,000/ ரூ50,000 நிதியுதவியுடன் 4கிராம் 22காரட் தங்க நாணயம் வழங்கப்படுகிறது)

திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள்

ஏழைக்குடும்பமாக இருத்தல்வேண்டும்.

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000த்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே பயன்பெற இயலும்.

திருமணத்தின் போது மணப்பெண் 18 வயதும் மணமகனுக்கு 21 வயதும் பூர்த்தி அடைத்திருந்தல் வேண்டும். உச்ச வயதுவரம்பு ஏதும் இல்லை.

மணப்பெண்ணின் கல்வித்தகுதி

திட்டம்-1
மணப்பெண் 10-ஆம் வகுப்பு வரை பள்ளியில் படித்து (தேர்ச்சி அல்லது தோல்வி) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். தொலை தூரக்கல்வி மூலம் படித்திருந்தால் 10-ஆம் வகுப்பு தேர்ச்சி சான்றிதழ் இருத்தல் வேண்டும்.
பழங்குடியினராக இருந்தால் 5ம் வகுப்பு வரை படித்திருத்தல் வேண்டும்.

திட்டம்-2
பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலை தூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளி பல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.
பட்டயப்படிப்பு சான்றிதழ் பெற்றவர்கள், தமிழக அரசின் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி சான்றிதழ் பெற்றிருத்தல் வேண்டும்.

இணையதளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்படவேண்டிய சான்றுகள்

வருமான சான்றிதழ் (ரூ72,000/-க்குள்)

சாதிச்சான்று

திருமண அழைப்பிதழ்

மணமகள் கல்வி மாற்றுசான்றிதழ்

மணமகள் மதிப்பெண்பட்டியல்–பட்டய சான்றிதழ் (Provisional or convocation)

குடும்பஅட்டை

மணமகன் மாற்று சான்றிதழ்

மணமகள்,மணமகன் மற்றும் தாய்(அ)தந்தை புகைப்படம்

வங்கி கணக்கு புத்தகம்

தாய் தந்தை ஆதார் கார்டு

நிதி உதவியின் அளவு(17.05.2011முதல்)

திட்டம்-1
ரூ.25,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்க நாணயம், 23.05.2016முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம்

திட்டம்-2
ரூ.50,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம் 23.05.2016முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம்

விண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு

திருமணத்திற்கு 40நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு நேர்வுகளில், தக்ககாரணங்கள் இருந்தால், திருமணத்திற்கு முதல்நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒரு சான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவித்திட்டம்

திட்டத்தின் நோக்கம் : விதவைகளுக்கு மறுமணத்திற்கு நிதியுதவி அளித்தல்.

திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு - 1975

திட்டத்தில் பயன் பெறுவதற்கான தகுதிகள்

மறுமணத்தின் போது குறைந்த பட்சவயது 20ஆக இருக்க வேண்டும். மணமகனின் வயது 40க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

வருமான உச்சவரம்பு இல்லை

விதவைச்சான்று மற்றும் மறுமண பத்திரிகை மற்றும் வயதுச்சான்று இருக்க வேண்டும்.

இணைய தளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்படவேண்டிய சான்றுகள்

விதவைசான்று

சாதிசான்று

திருமண அழைப்பிதழ்

மணமகள் கல்வி மாற்று சான்றிதழ்

மணமகள் மதிப்பெண் பட்டியல்–பட்டயசான்றிதழ் (Provisional or convocation)

குடும்பஅட்டை

மணமகன் மாற்று சான்றிதழ்

மணமகள் மற்றும் மணமகன் புகைப்படம்

வங்கி கணக்கு புத்தகம்

மணமகள் மற்றும் மணமகன் ஆதார்கார்டு

திருமண பதிவுசான்று

நிதியுதவியின் அளவு

திட்டம் 1
ரூ.25,000 வழங்கப்படுகிறது. (இதில் ரூ.15,000 காசோலையாகவும், ரூ.10,000 தேசிய சேமிப்பு பத்திரமாகவும் மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்க நாணயம்) 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம் வழங்கப்படும். இதற்கு கல்வித்தகுதி நிபந்தனையில்லை.

திட்டம்-2
பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு சான்றிதழ் பெற்ற பெண்களுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படுகிறது. (இதில் ரூ.30,000 காசோலையாகவும், ரூ.20,000 தேசிய சேமிப்புப்பத்திரமாகவும் வழங்கப்படும்) இதனுடன் சேர்த்து திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம் 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு

மறுமண நாளிலிருந்து 6 மாதத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒரு சான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

ஈ.வெ.ரா.மணியம்மையார் நினைவு ஏழை விதவை மகள் திருமண உதவித்திட்டம்

திட்டத்தின் நோக்கம் : ஏழை விதவையரின் மகளின் திருமணத்தை நடத்த உதவுதல்.

திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு : 1981

திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் :

குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72,000க்கு மிகாமல் இருக்க வேண்டும்.

மணப் பெண்ணுக்கு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன்பெறுவதற்கு உச்ச வயதுவரம்பு ஏதும் இல்லை.

இணையதளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்

வருமான சான்றிதழ் (72000/-க்குள்)

சாதிசான்று

திருமண அழைப்பிதழ்

மணமகள் கல்விமாற்று சான்றிதழ்

மணமகள் மதிப்பெண் பட்டியல்–பட்டயசான்றிதழ் (Provisional or convocation)

குடும்ப அட்டை

மணமகன் மாற்றுசான்றிதழ்

மணமகள்,மணமகன் மற்றும் தாய் புகைப்படம்

வங்கிகணக்கு புத்தகம்

தாய் ஆதார்கார்டூ

தாய் விதவைசான்று

திருமணம் நடைபெறவிருக்கும் இடத்திற்கான சான்று

நிதி உதவியின் அளவு :

திட்டம்-1
ரூ.25,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்க நாணயம். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம் வழங்கப்படும். கல்வித்தகுதி நிபந்தனையில்லை.

திட்டம்-2
பட்டதாரிகள் கல்லூரியிலோ அல்லது தொலைதூரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிபல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பட்டயப்படிப்பு தேர்ச்சி பெற்றவர் எனில் தமிழக அரசின் தொழில்நுட்பகல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
ரூ.50,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு

திருமணத்திற்கு 40நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு நேர்வுகளில் தக்ககாரணங்கள் இருந்தால், திருமணத்திற்கு முதல் நாள் வரை விண்ணப்பிக்கலாம்

குறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒருசான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்

அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண்கள் திருமண உதவித்திட்டம்

திட்டத்தின் நோக்கம் : ஆதரவற்ற பெண்கள் திருமணத்திற்கு நிதி உதவி அளித்தல்.

திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு : 1985-1986

திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் :

ஆதரவற்ற பெண்ணாக இருத்தல் வேண்டும்.

ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை

திருமண தேதியன்று மணப்பெண் 18வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும். உச்ச வயதுவரம்பு இல்லை.

இணையதளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்

தாய் தந்தை இறப்புசான்றிதழ்

சாதிசான்று

திருமண அழைப்பிதழ்

மணமகள் கல்வி மாற்று சான்றிதழ்

மணமகள் மதிப்பெண் பட்டியல்–பட்டயசான்றிதழ் (Provisional or convocation)

குடும்பஅட்டை

மணமகன் மாற்றுசான்றிதழ்

மணமகள் மற்றும் மணமகன் புகைப்படம்

வங்கி கணக்கு புத்தகம்

மணமகன் மற்றும் மணமகள் ஆதார்கார்டூ

திருமணம் நடைபெறவிருக்கும் இடத்திற்கான சான்று

நிதியுதவியின் அளவு :

திட்டம்-1
குறைந்தபட்ச கல்வித்தகுதி நிபந்தனையின்றி ரூ.25,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்கு 4கிராம் 22காரட் தங்கநாணயம். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும்

திட்டம்-2

பட்டதாரிகள் கல்லுாரியிலோ அல்லது தொலைதுாரக்கல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிபல்கலைக்கழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பட்டயப்படிப்பு(DiplomaHolders) எனில் தமிழக அரசின் தொழில்நுட்பக்கல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.

ரூ.50,000 காசோலை மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும்

விண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு

திருமணத்திற்கு 40நாட்களுக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு நேர்வுகளில், தக்ககாரணங்கள் இருந்தால், திருமணத்திற்கு முதல்நாள் வரை விண்ணப்பிக்கலாம்.

குறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒருசான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்

டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்புத் திருமண உதவித் திட்டம்

திட்டத்தின் நோக்கம் : பிறப்பு அடிப்படையிலான சாதியின வேறுபாட்டை அகற்றி, கலப்பு திருமணங்களை ஊக்கப்படுத்துதல்.

திட்டம் தொடங்கப்பட்ட ஆண்டு : 1967
(8.07.2011 முதல் இத்திட்டம் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண நிதி உதவி திட்டம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது)

திட்டத்தில் பயன்பெறுவதற்கான தகுதிகள் :

ஆண்டு வருமான உச்சவரம்பு இல்லை

திருமணத்தின் போது 18வயது பூர்த்தியடைந்திருத்தல் வேண்டும். உச்ச வயதுவரம்பு இல்லை.

கலப்புத் திருமணம் செய்து கொண்ட புதுமணத்தம்பதியரில் ஒருவர் ஆதிதிராவிடர் / பழங்குடியினராகவும் மற்றொருவர் வேறு சாதியினராக இருக்க வேண்டும்.

கலப்புத் திருமணம் செய்து கொண்ட புதுமணத்தம்பதியரில் ஒருவர் முற்பட்ட வகுப்பினராகவும் மற்றொருவர் பிற்படுத்தப்பட்ட / மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருக்க வேண்டும்.

இணையதளத்தில் திருமண நிதியுதவி பெற விண்ணப்பிக்கப்பட வேண்டிய சான்றுகள்

திருமண பதிவுசான்று

மணமகள் , மணமகன் சாதிசான்று

திருமண அழைப்பிதழ்

மணமகள் கல்வி மாற்று சான்றிதழ்

மணமகள் மதிப்பெண் பட்டியல்– பட்டய சான்றிதழ் (Provisional or convocation)

மணமகன்,மணமகள்குடும்ப அட்டை

மணமகன் மாற்றுசான்றிதழ்

மணமகள் மற்றும் மணமகன் புகைப்படம்

வங்கி கணக்கு புத்தகம்(JointAccount)

மணமகன் மற்றும் மணமகள் ஆதார் கார்டூ

நிதியுதவியின் அளவு

திட்டம்-1
கல்வித்தகுதி இல்லை
ரூ.25,000ம் (ரூ.15,000 காசோலையாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்புப்பத்திரமாகவும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும். 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்க நாணயம் வழங்கப்படும்

திட்டம்2
பட்டதாரிகள் கல்லூரியிலோ / தொலைதூரகல்வி மூலமோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட திறந்தவெளிபல்கலைகழகங்களிலோ படித்து தேர்ச்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும். பட்டயப்படிப்பு (DiplomaHolders) எனில் தமிழக அரசின் தொழில்நுட்பகல்வி இயக்குநரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் படித்து தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும்.
ரூ.50,000 (ரூ.30,000 காசோலையாகவும், ரூ.20,000 தேசிய சேமிப்புப்பத்திரமாகவும்) மற்றும் திருமாங்கல்யம் செய்வதற்காக 4கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும் 23.05.2016 முதல் 8கிராம் 22காரட் தங்கநாணயம் வழங்கப்படும்

விண்ணப்பிக்க வேண்டிய காலஅளவு

திருமணமாகி இரண்டாண்டுகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பு மேற்கண்ட சான்றிதழ்களில் ஏதேனும் ஒருசான்றுகள் பதிவேற்றம் செய்யவில்லை எனில் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

ஆதாரம் : https://virudhunagar.nic.in