சட்டப்பேரவை பொதுத் தேர்தல்கள் மற்றும் 2026-க்கான வாக்காளர் தகவல் சீட்டு விநியோகம் தொடங்கியது தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தில் (முதற்கட்டம்) 2026 ஏப்ரல் 23 (வியாழன்) அன்று நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவுக்கான வாக்காளர் தகவல் சீட்டுகள் விநியோகம் செய்யும் பணியை தலைமைத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது. இந்த வாக்காளர் தகவல் சீட்டுகளில் வாக்காளர்களின் விவரங்கள் வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள இடம், வாக்குப்பதிவு நாள் மற்றும் நேரம் மற்றும் வாக்குப்பதிவு நாள் அன்று வாக்காளர் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை போன்ற விவரங்கள் இடம் பெற்றுள்ளது. வாக்காளர் விவரங்களை விரைவாக கண்டறிவதற்கான கியூஆர் குறியீடும் இடம் பெற்றுள்ளது. இந்த வாக்காளர் தகவல் சீட்டு வாக்குச்சாவடி மையத்தில் கூட்டத்தை குறைத்து விரைவாக வாக்குப்பதிவு நடைபெற உதவும். வாக்காளரின் பகுதி எண் மற்றும் வரிசை எண் தெளிவாக வாசிக்கக் கூடிய அளவில் இடம் பெற்றுள்ளது. வாக்குச்சாவடி நிலை அதிகாரி வீடு வீடாகச் சென்று வாக்காளர்களுக்கு வாக்காளர் தகவல் சீட்டுகளை விநியோகிக்கிறார். அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்குப்பதிவு நாளுக்கு குறைந்தது 5 நாட்களுக்கு முன்பாக இந்தச் சீட்டு வழங்கும் நடைமுறை நிறைவுபெற்றுவிடும். வாக்காளர் தகவல் சீட்டு அடையாள ஆவணமாக எடுத்துக்கொள்ளப்படாது. வாக்காளர்கள் 12 அங்கீகரிக்கப்பட்ட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்கலாம். மேலும் தகவல்களுக்கு https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=2252245®=3&lang=1 இணைப்பைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிகை தகவல் மையம்