தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: அரசியல் கட்சிகளுக்கான ஊடக கால ஒதுக்கீடு மற்றும் தேர்தல் பறிமுதல் விவரங்கள் 1. இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களின்படி தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி முன்னிலையில், தமிழ்நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுக்கும் இன்று மின்னணு காலச் சீட்டுகள் ஒதுக்கப்பட்டுள்ளன.இந்த மின்னணு காலச் சீட்டுகள், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் தங்கள் பிரச்சாரத்திற்காக தூர்தர்ஷன் மற்றும் அகில இந்திய வானொலியில் ஒளிபரப்பு நேரத்தைப் பெற வழி செய்கின்றன. அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தை தேர்தல் நடத்தை விதிகள் மற்றும் ஆணையம் வெளியிட்டுள்ள நடைமுறை அறிவுறுத்தல்களுக்கு உட்பட்டு முறையாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 2. அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24x7 நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 26.03.2026 அன்றைய நிலவரப்படி, இக்குழுக்களால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன வ.எண் வகை தொகை (கோடிகளில்) 1 ரொக்கம் 41.98 2 மதுபானம் 0.88 3 போதைப்பொருட்கள் 7.24 4 விலைமதிப்பற்ற உலோகங்கள் (தங்கம்/வெள்ளி) 115.10 5 இதர பொருட்கள்/இலவசங்கள் 24.53 மொத்தம் 189.74 3. மாநிலம் முழுவதும் 2169 பறக்கும் படைகள் மற்றும் 2166 நிலை கண்காணிப்புக் குழுக்கள் பணம் மதுபானம் மற்றும் இதர கவர்ச்சி பொருட்கள் விதிமுறைகளை மீறி வழங்கி வாக்குகளைக் கவருவதை தடுக்கும் பொருட்டு பணியாற்றி வருகின்றன. பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுக்களால் பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் இதர பொருட்களை உரிய ஆவணங்களை சமர்பித்து, திரும்ப பெற்றுக் கொள்ள மாவட்டந்தோறும் குறை தீர்ப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் பறிமுதல்கள் தொடர்பான குறைகளுக்கு இக்குழுக்களை அணுகி தீர்வு பெற்றுக்கொள்ளுமாறு கோரப்படுகிறது.. மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டுள்ள இக்குழுக்களின் தொடர்பு எண்கள் பின்வருமாறு. வ. எண் மாவட்டத்தின் பெயர் தொலைபேசி எண்கள் 1. திருவள்ளூர் 7373704202 2. சென்னை 9551055182 3. காஞ்சிபுரம் 9442745251 4. வேலூர் 7373704205 5. கிருஷ்ணகிரி 9500014446 6. தர்மபுரி 7373704209 7. திருவண்ணாமலை 7373704206 8. விழுப்புரம் 7402606327 9. சேலம் 9444094335 10. நாமக்கல் 7373704208 11. ஈரோடு 9442149101 12. நீலகிரி 7373704231 13. கோயம்புத்துதூர் 7373704213 14. திண்டுக்கல் 7373704224 15. கரூர் 7373704218 16. திருச்சிராப்பள்ளி 7373704217 17. பெரம்பலூர் 7373704220 18. கடலூர் 7373704203 19. நாகப்பட்டினம் 7373704215 20. திருவாரூர் 9444094386 21. தஞ்சாவூர் 7373704214 22. புதுக்கோட்டை 7373704221 23. சிவகங்கை 7373704227 24. மதுரை 7373704222 25. தேனி 7373704223 26. விருதுநகர் 7373704226 27. ராமநாதபுரம் 7373704225 28. தூத்துக்குடி 7373704229 29. திருநெல்வேலி 7373404228 30. கன்னியாகுமரி 9445000930 31. அரியலூர் 7373704219 32. திருப்பூர் 7373704212 33. கள்ளக்குறிச்சி 9003328441 34. தென்காசி 7305089505 35. செங்கல்பட்டு 7305089502 36. திருப்பத்தூர் 7305089501 37. ராணிப்பேட்டை 7305089500 38. மயிலாடுதுறை 9176001546 "தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா" தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 ஆதாரம்: த.தே.அ. த.நா.செ.வெ. எண்: 016