தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026: சிறப்புப் பார்வையாளர் நியமனம் மற்றும் தொடர்பு விவரங்கள் இந்திய அரசியலமைப்பின் 324–வது பிரிவின் கீழ் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் பயன்படுத்தி, நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026, தொடர்பான பணிகளுக்காக, திரு. பிரதாப் சிங் அவர்களைச் சிறப்புப் பார்வையாளராக இந்தியத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. அவரின் தொடர்பு விவரங்கள் பின்வருமாறு: பெயர் திரு. பிரதாப் சிங் பதவி சிறப்பு பார்வையாளர்,தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் 2026 அலுவலக முகவரி அறை எண் 412, இணைப்பு கட்டிடம்,ஆயகர் பவன், சென்னை தொடர்பு எண்கள் அலுவலகம்: 044 28338378கைபேசி: 7845321461 மின்னஞ்சல் splobs.pelecd@tn.gov.in தொடர்பு அலுவலர் திரு. ஜெகன் மோகன்கைபேசி: 9551322999 பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தேர்தல் தொடர்பான விவகாரங்கள் குறித்து, மேலே குறிப்பிடப்பட்டுள்ள தொடர்பு விவரங்கள் வாயிலாகச் சிறப்புப் பார்வையாளரைத் தொடர்புகொள்ளலாம். தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 ஆதாரம்: த.தே.அ. த.நா. செ.வெ. எண்: 012