பொதுப்பேரவை

இயக்கத்தின் உச்சநிலை அதிகாரங்களைக் கொண்டப் இப்பேரவையானது, பொதுச் செயலாளரின் தலைமையில் மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை கூட்டப்படும்.

இடைப்பட்டக் காலங்களில் தேவையினடிப்படையில் பொதுச் செயலாளர் சிறப்புப் பொதுப்பேரவையைக் கூட்டலாம்.

அத்துடன், மையப்பேரவையின் வழிகாட்டுதலின் அடிப்படையிலோ அல்லது பொதுப் பேரவையின் உறுப்பினர்களில் மூன்றிலொரு பங்கினர் கையெழுத்திட்டுக் கேட்டுக் கொள்வதின் அடிப்படையிலோ சிறப்புப் பேரவையைக் கூட்டலாம்.

பிரிவு 1

பொதுப் பேரவையில் இடம் பெறும் உறுப்பினர்கள்

மையப்பேரவை உறுப்பினர்கள்.

மாநில மற்றும் மாவட்ட அளவில் தேர்ந்தெடுக்கப்படும் பொதுப்பேரவை உறுப்பினர்கள்.

தலைமை நிர்வாகக்குழு உறுப்பினர்கள்.

தமிழ்நாடு மற்றும் பிறமாநில அமைப்புக்குழு நிர்வாகிகள்.

மாவட்ட, மாநகர, மாவட்ட நிர்வாகிகள்.

ஒன்றியம், நகரம், நகரியம் மற்றும் பகுதி அமைப்பாளர்கள்.

அணிகள் மற்றும் துணைநிலை அமைப்புகளின் மாநில நிர்வாகிகள்.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நகர்மன்றத் தலைவர்கள், ஒன்றியப் பெருந்தலைவர்கள், மாவட்ட ஊராட்சித் தலைவர்கள்.

மாநகரத் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்.

பொதுச்செயலாளரால் நியமிக்கப்படும் பொதுப்பேரவை உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள்.

பிரிவு 2

பொதுப்பேரவைக் கூட்டங்கள்

பொதுப்பேரவை மற்றும் சிறப்புப் பொதுப்பேரவைக் கூட்டங்களுக்கான இடம் மற்றும் நாள் ஆகியவை மையப்பேரவையின் வழிகாட்டுதலின் பேரில் முடிவு செய்யப்படும்.

பிரிவு 3

பொதுப்பேரவையின் பணிகள்

மையப்பேரவையால் முன் வைக்கப்படுகின்ற இயக்கத்தின் அரசியலறிக்கைகள், செயலறிக்கைள், இயக்கத் தொடர்பான பிற அறிக்கைகள், செயல்திட்டங்கள் முதலியன குறித்துத் திறனாய்வு செய்தல் மற்றும் அவை மீதான நடவடிக்கைகளை மேற் கொள்ளுதல்.

இயக்கத்தின் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் விதிமுறைகளைத் திருத்துதல் மற்றும் மாற்றுதல்.

மையப்பேரவைக்கான உறுப்பினர்களைத் தேர்வு செய்தல்.

தணிக்கைக் குழுவின் அறிக்கையைத் திறனாய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.

விதி 1

பொதுப்பேரவையின் விதி 1

பொதுப்பேரவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கினர் பங்கேற்றால்தான் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் விதிமுறைகளை திருத்தவோ அல்லது மாற்றவோ முடியும்.

விதி 2

பொதுப்பேரவையின் விதி 2

பொதுப்பேரவையை நடத்துவதற்கு மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். இவ்வெண்ணிக்கைக்குக் குறைவாக இருப்பின், பொதுப்பேரவையை நடத்தக் கூடாது.

விதி 3

பொதுப்பேரவையின் விதி 3

பொதுப்பேரவையில் கலந்தாய்வு மற்றும் திறனாய்வு செய்ய வேண்டிய இயக்கத்தின் முன்வரைவு ஆவணங்கள் அனைத்தையும் முப்பது நாட்களுக்கு முன்னதாகவே பொதுப்பேரவையின் உறுப்பினர்கள் அனைவருக்கும் மையப்பேரவையின் வழிகாட்டுதலின்படி பொதுச் செயலாளர் அனுப்பிவைக்க வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு சட்டமன்ற பேரவை