நோக்கம்

மாவட்டப் பொதுக்குழுவிற்கான இடம், நாள் மற்றும் நேரம் ஆகியவற்றை கூட்டம் நடத்துவதற்கு பதினைந்து நாட்களுக்கு முன்னதாக மாவட்ட அமைப்புச் செயலாளர் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.

மாவட்டப் பொதுக்குழுவின் பணிகள்

பிரிக்கப்பட்ட மாவட்டங்களின் செயற்குழுக்களால் முன் வைக்கப்படுகின்ற இயக்கத்தின் செயலறிக்கைகள், இயக்கத்தொடர்பான பிற அறிக்கைகள், செயல்திட்டங்கள் முதலியன குறித்துத் திறனாய்வு செய்தல் மற்றும் அவை மீதான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

மூன்றாண்டுகளுக்கொருமுறை மாவட்டப் பொறுப்பாளர்களாக மாவட்ட அமைப்புச் செயலாளர்கள் ஒருவர், பிரிக்கப்பட்ட மாவட்டங்களுக்கான செயலாளர்கள், துணைச்செயலாளர்கள் மூவர், நிதிச்செயலாளர் ஆகியோரையும், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் (பிரதிநிதிகள்) ஆகியோரையும் தெரிவு அல்லது தேர்வு செய்தல்.

செயற்குழுக்கள் முன்வைக்கும் மூன்றாண்டுகளுக்கான செயல்திட்டங்களை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.

தணிக்கைக் குழுவின் அறிக்கையைத் திறனாய்வு செய்து ஒப்புதல் அளித்தல்.

சிறப்புப் பொதுக்குழுவில் காலியாகவுள்ள இடங்களுக்கு பொறுப்பாளர்கள் நிரப்புதல் அல்லது நிரப்பியதற்கு ஒப்புதல் அளித்தல்.

விதிகள்

மாவட்டப் பொதுக்குழுவின் விதி 1

மாவட்டப் பொதுக்குழுவின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கினர் பங்கேற்க வேண்டும். அதற்குக் குறைவாக இருப்பின், அக்கூட்டத்தில் முகாமையான முடிவுகள் எடுக்கவோ அல்லது தீர்மானங்களை நிறைவேற்றவோ கூடாது.

மாவட்டப் பொதுக்குழுவின் விதி 2

மாவட்டப் பொதுக்குழு நடைபெறும் இடம், நாள், நேரம் மற்றும் கூட்டத்திற்கான நோக்கங்கள் ஆகியவற்றை, பொதுக்குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட அமைப்புச் செயலாளர் ஒருமாதத்திற்கு முன்னதாக தெரியப்படுத்த வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு சட்டப்பேரவை மன்றம்