தமிழ்நாட்டில் சட்டமன்றம், இந்திய நாடாளுமன்றம், உள்ளாட்சி அமைப்புகள் போன்றவற்றுக்கு தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. தேர்தல் வகைகள் தமிழ்நாடு மாநிலத்தில் பொதுத் தேர்தலாகிய தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தல்கள் மாநிலத் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையிலும், உள்ளாட்சித் தேர்தல்கள் மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மேற்பார்வையிலும் என இருத் தேர்தல்கள் நேரடித் தேர்தல்களாக நடைபெறுகின்றன. தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையால் நடத்தப்படும் தேர்தல்கள் நேரடித் தேர்தல்கள் எண் தேர்தல்கள் தொகுதிகள் 1 சட்டப்பேரவை 234 2 மக்களவை 39 மறைமுகத் தேர்தல் இது தவிர மறைமுகத் தேர்தலாக மாநிலங்களவை உறுப்பினர்களின் தேர்தல் மற்றும் குடியரசுத தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்கள் தலைமைத் தேர்தல் அலுவலரின் மேற்பார்வையில் நடைபெறுகின்றன. மறைமுகத் தேர்தல்கள் எண் தேர்தல்கள் தொகுதிகள்/இருக்கை 1 மாநிலங்களவை 18 2 குடியரசுத் தலைவர் 1 3 குடியரசுத் துணைத் தலைவர் 1 மாநிலத் தேர்தல் ஆணையரின் மேற்பார்வையில் நடத்தப் பெறும் தேர்தல்கள் உள்ளாட்சி நேரடித் தேர்தல்கள் எண் அலுவலகம் மொத்த பதவியிடங்களின் எண்ணிக்கை 1 மாநகராட்சி மேயர் 25 2 மாநகராட்சி உறுப்பினர்கள்(கவுன்சிலர்-நகாரட்சி உறுப்பினர்) 1374 3 நகராட்சித் தலைவர்கள் 138 4 நகராட்சி உறுப்பினர்கள் 3,843 5 பேரூராட்சி தலைவர்கள் 490 6 பேரூராட்சி உறுப்பினர்கள் 7,621 7 மாவட்ட ஊராட்சி தலைவர்கள் 36 8 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 655 9 ஊராட்சி ஒன்றியம் தலைவர்கள் 388 10 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் 6,471 11 கிராம ஊரட்சித் தலைவர்கள் (பிரசிடன்ட்) 12,525 12 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் 99,327 ஆதாரம் : தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்