நோக்கம் தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளுக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்டு தமிழ்நாடு உள்ளாட்சி மன்றங்கள் உருவாக்கப்படுகின்றன. இந்த மன்றங்களில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படியே அந்த ஊர்களின் வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் இருக்கும் உள்ளாட்சி மன்றங்கள் மாநகராட்சி மன்றம், நகராட்சி மன்றம், பேரூராட்சி மன்றம், மாவட்ட ஊராட்சி மன்றம், ஊராட்சி ஒன்றியக் குழு, ஊராட்சி மன்றம் எனும் மன்றங்களாகப் பிரிக்கப்பட்டு இருக்கின்றன. மாவட்டம் நகர்ப்புறம் கிராமப்புறம் மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி ஒன்றியம் ஊராட்சி 1. வேலூர் 1 3 4 13 753 2.விழுப்புரம் 0 2 8 14 683 3.விருதுநகர் 1 5 9 13 420 4. மதுரை 1 3 9 8 157 5. பெரம்பலூர் 0 1 4 12 228 6. புதுக்கோட்டை 1 2 8 14 589 7. நீ்லகிரி 0 4 11 10 333 8. நாமக்கல் 1 5 19 7 288 9. நாகப்பட்டினம் 0 2 8 10 430 10. தேனி 0 6 22 4 121 11. தூத்துக்குடி 1 3 19 11 429 12. திருவாரூர் 0 4 7 14 404 13 திருவள்ளூர் 1 6 10 8 359 14. திருவண்ணாமலை 1 4 10 9 412 15. திருப்பூர் 1 6 17 10 251 16. திருநெல்வேலி 1 3 36 14 306 17. திருச்சிராப்பள்ளி 1 5 16 14 408 18. திண்டுக்கல் 0 3 23 6 201 19. தர்மபுரி 1 1 10 6 208 20. தஞ்சாவூர் 2 2 22 14 589 21. சேலம் 1 6 33 7 247 22. சென்னை 1 0 0 0 0 23. சிவகங்கை 0 4 12 8 130 24. கோயம்புத்தூர் 1 7 37 15 322 25. கிருஷ்ணகிரி 1 1 6 18 860 26. காஞ்சிபுரம் 1 2 5 5 274 27. கரூர் 1 3 11 13 265 28. கன்னியாகுமரி 1 4 55 11 450 29. கடலூர் 1 6 16 14 526 30. ஈரோடு 1 4 42 20 385 31. இராமநாதபுரம் 0 4 7 13 497 32. அரியலூர் 0 2 2 4 35 33. கள்ளக்குறிச்சி 0 3 7 9 204 34. மயிலாடுதுறை 0 2 0 5 241 35. தென்காசி 0 6 18 12 445 36. ராணிபேட் 0 6 9 10 221 37. திருப்பத்தூர் 0 4 3 12 403 38. செங்கல்பட்டு 2 4 6 9 95 Total 25 138 529 385 12,524 தமிழ்நாடு அரசு மாநகராட்சி மன்றம் தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. இந்த மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களில் ஒருவர் மாநகராட்சி மன்றத் துணைத் தலைவராகத் (துணை மேயர்) தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டிலுள்ள 25 மாநகராட்சி மன்றங்களும் 1374 வார்டுகளும் (4 புதிய மாநகராட்சி சேர்க்கபடாமல்) இருக்கின்றன. நகராட்சி மன்றம் தமிழ்நாட்டில் மாநகராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் அதிக வருவாயுடைய ஊர்களை நகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த நகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் நகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த நகராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட நகராட்சி மன்ற உறுப்பினர்களில் ஒருவர் நகராட்சி மன்றத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுகின்றார். நகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் நகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி நகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் 138 நகராட்சி மன்றங்கள் இருக்கின்றன. இவற்றில் 3,843 நகராட்சி மன்ற உறுப்பினர்களுககான இடங்கள் உள்ளன. பேரூராட்சி மன்றம் இந்தியாவில் முதன்முறையாக தமிழ்நாட்டில்தான் நகராட்சிகளுக்கும், ஊராட்சிகளுக்கும் இடைப்பட்ட நிலையில் 'பேரூராட்சி' என்ற அமைப்பு நிறுவப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நகராட்சிக்கு அடுத்த நிலையில், அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்களைப் பேரூராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த பேரூராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் பேரூராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்தப் பேரூராட்சி உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. பின்னர் தேர்ந்தெடுக்கப்பட்ட பேரூராட்சி மன்ற உறுப்பினர்களில் ஒருவர் பேரூராட்சி மன்றத் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுகின்றார். பேரூராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் பேரூராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி பேரூராட்சிச் செயல் அலுவலர் அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது தமிழ்நாட்டில் 490 பேரூராட்சி மன்றங்கள் இருக்கின்றன. இப்பேரூராட்சிகளில் 7621 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன. மாவட்ட ஊராட்சி மன்றம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும், மாவட்ட அளவில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை என்கிற அமைப்பு அமைக்கப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் இருக்கும் சில கிராமப் பகுதிகளைக் கொண்டு மாவட்ட ஊராட்சிக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு மாவட்ட ஊராட்சி மன்றத்திற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாவட்ட ஊராட்சி மன்றத் தலைவராகவும், ஒருவர் மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாவட்ட ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாவட்ட ஆட்சிச் தலைவர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அதிகாரி ஆகியோர் அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 36 மாவட்ட ஊராட்சி மன்றங்கள் இருக்கின்றன. இம்மாவட்டங்களில் 655 மாவட்ட ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன. ஊராட்சி ஒன்றியக் குழு மாவட்டத்தில் இருக்கும் கிராமப்பகுதியின் ஊராட்சி அமைப்புகள் சில சேர்க்கப்பட்டு வட்டார அளவில் ஊராட்சி ஒன்றியங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஒன்றியங்கள் அளவில் இருக்கும் சில கிராமப் பகுதிகளைக் கொண்டு ஊராட்சி ஒன்றியத்துக்கான வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் இருக்கும் வாக்காளர்களைக் கொண்டு ஊராட்சி ஒன்றியக் குழுவிற்கான உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களின் பதவிக்காலம், ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களில் இருந்து ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவராகவும், ஒருவர் ஊராட்சி ஒன்றியக்குழுத் துணைத்தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி ஒன்றியக் குழுக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர், அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 388 ஊராட்சி ஒன்றியங்கள் இருக்கின்றன. இந்த ஊராட்சி ஒன்றியங்களில் 6,471 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன. ஊராட்சி மன்றம் தமிழ்நாட்டில் பேரூராட்சிக்கு அடுத்த நிலையில் அதிகமான மக்கள் தொகையுடன் குறிப்பிட்ட வருவாயுடைய ஊர்களை ஊராட்சிகளாகப் பிரித்துள்ளனர். இந்த ஊராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. இந்த வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் ஊராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த ஊராட்சி மன்றங்களின் உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த ஊராட்சி மன்றத்திற்கான தலைவர், மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்படுகின்றார். இந்த ஊராட்சி மன்றத்திற்கான துணைத் தலைவர், ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுகின்றார். ஊராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் ஊராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி ஊராட்சி மன்றத்தலைவரே அந்தப் பணிகளைத் தனக்குக் கீழுள்ள ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் மற்றும் தலைவர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாகப் போட்டியிட அனுமதி அளிக்கப்படவில்லை. தமிழ்நாட்டில் மொத்தம் 12,525 ஊராட்சிகள் இருக்கின்றன இந்த ஊராட்சி மன்றங்களில் 99327 கிராம ஊராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன. ஆதாரம் : தமிழ்நாடு அரசு