வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைக்குமாறு இந்திய தேர்தல் ஆணையம் (ECI) அறிவுறுத்தி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தில் இதற்கான சட்ட திருத்தம் கொண்டு வரப்பட்டது. இததைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் ஆணையத்தின் மூலம் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண் இணைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. வாக்காளர் அடையாள அட்டையை, ஆதாருடன் இணைப்பதன் மூலம் தேர்தலில் பலமுறை வாக்களிப்பது, ஒருவர் பல தொகுதிகளில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்பது போன்றவை தடுக்கப்படும். அதேசமயம், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைப்பது கட்டாயம் இல்லை என்றும் ஆதாருடன் இணைக்கப்படாத நிலையிலும், வாக்காளர் பட்டியலில் இருந்து எந்த ஒரு வாக்காளர் பெயரும் நீக்கப்பட மாட்டாது. வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் அட்டையுடன் இணைத்தல்