மாநில தேர்தல் அலுவலர்கள்

ஊரக உள்ளாட்சி : ஊரக வளர்ச்சி இயக்குநர்

நகர்ப்புற உள்ளாட்சி : நகராட்சி நிர்வாக இயக்குநர் / ஆணையர் / பேருராட்சிகளின் இயக்குநர்/ஆணையர்

மாவட்ட தேர்தல் அலுவலர்கள்

சென்னை மாவட்டத்தை தவிர இதர மாவட்ட ஆட்சித் தலைவர்களே ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சிகளின் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் ஆவர். சென்னை மாநகராட்சியின் தேர்தல் நடத்தும் அலுவலர் சென்னை மாநகர ஆணையர் ஆவார்.

மாநகராட்சிகளுக்கான மாவட்ட தேர்தல் அலுவலர்

சென்னை மாநகராட்சி - சென்னை மாநகராட்சி ஆணையர்

மற்ற மாநகராட்சிகளுக்கு - சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள்

ஊரக உள்ளாட்சிகள்:

மாவட்ட ஊராட்சி வார்டு - தலைமை செயல் அலுவலர் நிலைக்கு குறையாத அலுவலர்

ஊராட்சி ஒன்றிய வார்டு - உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி) நிலைக்கு குறையாத அலுவலர்

சிற்றுராட்சி தலைவர் / வார்டு உறுப்பினர் - வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு குறையாத அலுவலர்

நகர்ப்புற உள்ளாட்சிகள்:

மாநகராட்சிகள் - சம்பந்தப்பட்ட மாநகராட்சி ஆணையர்கள்

நகராட்சிகள் - சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர்கள்

பேருராட்சிகள் - சம்பந்தப்பட்ட செயல் அலுவலர்கள்

உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள்

ஊரக உள்ளாட்சிகள்:

மாவட்ட ஊராட்சி வார்டு - உதவி இயக்குநர் (ஊரக வளர்ச்சி) நிலைக்கு குறையாத அலுவலர்

ஊராட்சி ஒன்றிய வார்டு - வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு குறையாத அலுவலர்

சிற்றுாராட்சித் தலைவர் - துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலைக்கு குறையாத அலுவலர்

சிற்றுாராட்சி வார்டு உறுப்பினர் - உதவியாளர் நிலைக்கு குறையாத அலுவலர்

நகர்ப்புற உள்ளாட்சிகள்:

மாநகராட்சி / நகராட்சி - கண்காணிப்பாளர் நிலைக்கு குறையாத அலுவலர்

பேருராட்சி வார்டு உறுப்பினர் - உதவியாளர் நிலைக்கு குறையாத அலுவலர்

வாக்காளர் பதிவு அலுவலர்கள்

ஊரகம் - ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள்

நகர்ப்புறம் - மாநகராட்சி ஆணையர்கள் (சென்னை மாநகராட்சிக்கு மாநகராட்சியின் வருவாய் அலுவலர்) / நகராட்சி ஆணையர்கள் மற்றும் பேருராட்சிகளின் செயல் அலுவலர்கள்.

ஆதாரம் : தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்