வாக்காளர் பட்டியல் அல்லது தேர்தல் ஆணையம் வழங்கும் பூத் சிலிப்பில் புகைப்படம் இல்லாதவர்கள் மட்டும் தேர்தல் ஆணையத்தால் அனுமதிக்கப்பட்டுள்ள மாற்று ஆவணத்தை ஒன்றை காட்டி வாக்களிக்கலாம்.

ஆவணங்கள்

பாஸ்போர்ட்

ஓட்டுநர் உரிமம்

மத்திய, மாநில அரசு, பொதுத்துறை நிறுவனங்கள், அரசின் கீழ்வரும் நிறுவனங்கள் மூலம் ஊழியர்களுக்கு வழங்கியுள்ள புகைப்பட அடையாள அட்டை,

வங்கி மற்றும் அஞ்சல் அலுவலகங்கள் வழங்கிய புகைப்படத்துடனான கணக்குப் புத்தகம்,

வருமானவரித் துறை நிரந்தர கணக்கு அட்டை,

ஆதார் அட்டை,

தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளர் வழங்கிய விரைவூக்க அட்டை (ஸ்மார்ட் கார்டு),

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பணி அட்டை,

புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அட்டை

ஆதாரம் : தமிழ்நாடு தேர்தல் ஆணையம்