2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்: தேர்தல் பணிகள், ஊதிய உயர்வு மற்றும் கண்காணிப்பு குறித்த தகவல்கள் 1. 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் நடத்தப்படுவதன் ஒரு பகுதியாக, மாநிலம் முழுவதும் பல்வேறு தரப்பினருக்கான பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அனைத்து 234 சட்டமன்றத் தொகுதிகளிலும், வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்டப் பயிற்சி 28.03.2026 மற்றும் 29.03.2026 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இப்பயிற்சித் திட்டத்தில், 3,32,231 அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களின் கடமைகள், பங்களிப்புகள் மற்றும் பொறுப்புகள் தொடர்பான பாடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டது. தேர்தல் தொடர்பான பணிகளைத் திறம்பட நிர்வகிப்பதற்கான அவர்களின் திறனை வலுப்படுத்தவும், நடைமுறைகளைச் சரியாகச் செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கும், சட்டத்திற்கு உட்பட்டு 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தலை சுதந்திரமாகவும், நேர்மையாகவும் மற்றும் வெளிப்படையாகவும் நடத்துவதற்கு தங்களை தயார்படுத்திக் கொள்வதை உறுதி செய்வதே இந்தப் பயிற்சித் திட்டத்தின் நோக்கமாகும். 2. 2026 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள், வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர், வாக்கு எண்ணும் உதவியாளர் மற்றும் நுண் பார்வையாளர்களுக்கு (Micro Observers) வழங்கப்பட வேண்டிய ஊதிய விகிதங்களை இந்திய தேர்தல் ஆணையம் பின்வருமாறு உயர்த்தியுள்ளது. பதவி பழைய ஊதியம் (.) திருத்தப்பட்ட புதிய ஊதியம் (ரூ.) வாக்குச்சாவடி தலைமை அலுவலர் Rs.1700 Rs.3000 வாக்குப்பதிவு அலுவலர் Rs.1300 Rs.2600 வாக்கு எண்ணும் மேற்பார்வையாளர் Rs.850 Rs.1500 வாக்கு எண்ணும் உதவியாளர் Rs.650 Rs.1400 நுண் பார்வையாளர் Rs.1000 Rs.2000 3. அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் ஈடுபடுத்தப்பட்டுள்ள கண்காணிப்புக் குழுக்கள், 24x7 நேரமும் தீவிரமாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளன. 30.03.2026 அன்றைய நிலவரப்படி, இக்குழுக்களால் கைப்பற்றப்பட்ட பொருட்களின் விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. வ.எண் வகை தொகை (கோடிகளில்) 1 ரொக்கம் 61.98 2 மதுபானம் 1.17 3 போதைப்பொருட்கள் 8.39 4 விலைமதிப்பற்ற உலோகங்கள் (தங்கம்/வெள்ளி) 197.35 5 இதர பொருட்கள்/இலவசங்கள் 27.51 மொத்தம் 296.40 "தேர்தல் திருவிழா - தமிழ்நாட்டின் பெருவிழா" தலைமைத் தேர்தல் அதிகாரி, தமிழ்நாடு வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 ஆதாரம்: த.தே.அ. த.நா. செ.வெ. எண்: 018