தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026: மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு மற்றும் தேர்தல் பாதுகாப்பு முன்னேற்பாடுகள் சட்டமன்றத் தொகுதி / பகுதி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் (Electronic Voting Machine), வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளையும் ஒதுக்கீடு செய்வதற்கு, முதல் நிலை பரிசோதனை நிறைவடைந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளும் மாவட்டத் தேர்தல் அலுவலரால் முதலாவது சமவாய்ப்பிற்குட்படுத்தபடுகின்றன. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களையும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளையும் முதலாவது சமவாய்ப்பிற்குட்படுத்துதல் குறித்த விரிவான அறிவுறுத்தல்கள் குறித்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பற்றிய நடைமுறை நூலில் குறிப்பிடப்பட்டுள்ளன. இது, இந்தியத் தேர்தல் ஆணையத்தின் https://www.eci.gov.in/evm-vvpatt என்ற வலைதளத்தில் இடம்பெற்றுள்ளது. 1. தமிழ்நாட்டிற்கான வரவிருக்கும் பொதுத் தேர்தலில் பயன்படுத்தப்பட வேண்டிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் முதலாவது சமவாய்ப்பிற்குட்படுத்துதல் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளது: மாவட்டத்தின் பெயர் முதலாவது சமவாய்ப்பிற்குட்படுத்துதல் நாள் திருவள்ளுர் 23.03.2026 சென்னை 23.03.2026 காஞ்சிபுரம் 23.03.2026 வேலூர் 23.03.2026 கிருஷ்ணகிரி 23.03.2026 தர்மபுரி 20.03.2026 திருவண்ணாமலை 23.03.2026 விழுப்புரம் 23.03.2026 சேலம் 24.03.2026 நாமக்கல் 23.03.2026 ஈரோடு 23.03.2026 நீலகிரி 23.03.2026 கோயம்புத்தூர் 23.03.2026 திண்டுக்கல் 23.03.2026 கரூர் 23.03.2026 திருச்சிராப்பள்ளி 23.03.2026 பெரம்பலூர் 23.03.2026 கடலூர் 23.03.2026 நாகப்பட்டினம் 23.03.2026 திருவாரூர் 23.03.2026 தஞ்சாவூர் 23.03.2026 புதுக்கோட்டை 24.03.2026 சிவகங்கை 23.03.2026 மதுரை 23.03.2026 தேனி 25.03.2026 விருதுநகர் 24.03.2026 இராமநாதபுரம் 23.03.2026 தூத்துக்குடி 23.03.2026 திருநெல்வேலி 23.03.2026 கன்னியாகுமரி 23.03.2026 அரியலூர் 20.03.2026 திருப்பூர் 23.03.2026 கள்ளக்குறிச்சி 23.03.2026 தென்காசி 23.03.2026 செங்கல்பட்டு 23.03.2026 திருப்பத்தூர் 23.03.2026 இராணிப்பேட்டை 23.03.2026 மயிலாடுத்துறை 23.03.2026 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் முதலாவது சமவாய்ப்பிற்குட்படுத்துதல் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர மேலாண்மை முறை (EMS) வாயிலாக சம்பந்தப்பட்ட மாவட்டத் தேர்தல் அலுவலரால் மேற்கொள்ளப்படும். முதலாவது சமவாய்ப்பிற்குட்படுத்துதல் நிறைவடைந்த பின்னர், தொகுதி வாரியாக ஒதுக்கீடு செய்யப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் பட்டியல்கள் மாவட்ட தலைமையிடங்களிலுள்ள அங்கீகரிக்கப்பட்ட அனைத்து தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளுடன் பகிரப்படும். இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தாம் அளித்த வாக்கினை சரிபார்க்கும் கருவிகள், தேர்தலில் பயன்படுத்துவதற்காக சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு/உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வழங்கப்படும். இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளும், அங்கீகாரம் பெற்ற தேசிய மற்றும் மாநில அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளின் முன்னிலையில் அந்தந்த சட்டமன்ற காப்பறையில் பாதுகாப்பாக வைக்கப்படும். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை இறுதி செய்த பின்னர், முதலாவது சமவாய்ப்பிற்குட்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வாக்காளர் தான் செலுத்திய வாக்கினை சரிபார்க்கும் கருவிகளின் பட்டியல் தேர்தலில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுடனும் பகிரப்படும். 2. தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் 2026 தொடர்பாக பாதுகாப்பு படைகளின் பணியமர்த்தல் தொடங்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் ஏற்கனவே மத்திய ஆயுத பாதுகாப்புப் படையின் 50 கம்பெனிகளை 10.03.2026 அன்று அனுப்பியுள்ளது. தற்போது, மத்திய உள்துறை அமைச்சகம் கூடுதலாக மத்திய ஆயுத பாதுகாப்புப் படையின் 250 கம்பெனிகளை பாதுகாப்பான, சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை நடத்துவதற்காக நியமித்துள்ளது. அந்த கம்பெனிகள் 06.04.2026 மற்றும் 13.04.2026 அன்று தமிழ்நாட்டிற்கு வழங்கப்படவுள்ளது. 3. அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர் / தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு வாக்குச்சாவடி தலைமை அலுவலர் கைபேசி செயலி பயன்படுத்துதல் பற்றிய பயிற்சி இந்திய தேர்தல் ஆணையம் மூலம் 19.03.2026 அன்று காணொலி வழியாக வழங்கப்பட்டது. இந்த கைபேசி செயலியின் மூலம், வாக்குப்பதிவு நாளில் ஒவ்வொரு 2 மணி நேரத்துக்கும் வாக்குப்பதிவு நிலவரங்களை வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பதிவு செய்வதற்கான வசதிகள் உள்ளது. 4. தேர்தல் நாளன்றும் மற்றும் தேர்தல் நாளுக்கு ஒரு நாள் முன்னதாகவும், எந்தவொரு அரசியல் கட்சியோ, வேட்பாளரோ அல்லது வேறு எந்த அமைப்போ அல்லது நபரோ, மாநில/மாவட்ட அளவிலான ஊடகச் சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக் குழுவிடம் (MCMC) உள்ளடக்கத்தை முன்-சான்றொப்பம் (Pre-certified) பெறாமல், அச்சு ஊடகங்களில் (Print Media) எந்தவொரு அரசியல் விளம்பரத்தையும் வெளியிடக்கூடாது என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாநிலத்தில் புழக்கத்தில் உள்ள அச்சு ஊடகங்களில் வெளியிடப்படும் அரசியல் விளம்பரங்களுக்கு, கீழே கொடுக்கப்பட்டுள்ள நாட்களுக்கு இந்த நடைமுறை பொருந்தும்: தேர்தல் நாள் தடை செய்யப்பட்ட நாட்கள் (தேர்தல் நாள் மற்றும் தேர்தலுக்கு முந்தைய நாள்) 23.04.2026 22.04.2026 & 23.04.2026 “தேர்தல் திருவிழா – தமிழ்நாட்டின் பெருவிழா” தலைமைத் தேர்தல் அதிகாரி மற்றும் அரசு முதன்மைச் செயலாளர் வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9 ஆதாரம்: https://cms.tn.gov.in/cms_migrated/document/press_release/pr190326_t_007_CEO.pdf