எல்லா ஆவணங்களையும் மாற்றிவிட்டு இறுதியாக பாஸ்போர்ட் முகவரியை மாற்ற வேண்டும். ஏனெனில் பாஸ்போர்ட் முகவரி மாற்றத்துக்குத் தேவையான ஆவணங்கள் அதிகம்.

தேவையான ஆவணங்கள்

குடும்ப அட்டை, பான் கார்டு, வங்கிக் கணக்குப் புத்தகம், ஓட்டுநர் உரிமம், வாக்காளர் அடையாள அட்டை.

எங்கே விண்ணப்பிப்பது?

அந்தந்த மாவட்டங்களில் உள்ள பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையங்களில் விண்ணப்பிக்கலாம் இவற்றுக்கு ஃபார்ம் 2 – ஐ பயன்படுத்த வேண்டும். (பெயர் மாற்றம், முகவரி மாற்றம், திருமணம் ஆனவுடன் உங்கள் மனைவியின் பெயரை உங்கள் பாஸ்போர்ட்டில் குறிப்பிடுதல் போன்ற சிறு திருத்தங்கள் மேற்கொள்ள, பாஸ்போர்ட்டைப் புதுப்பித்துக்கொள்ள ஆன்லைனில் விண்ணப்பிக்கத் தேவை இல்லை).

கட்டணம்

இவற்றில் ஆர்டினரி, தட்கல் இரண்டுக்கும் 1,000 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

ஆதாரம் : மண்டல பாஸ்போர்ட் அலுவலகம், சென்னை