அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (State Express Transport Corporation - SETC) தமிழக அரசால் இயக்கப்படும் அதிதூர பேருந்து சேவைத் துறையாகும். இது முன்பு திருவள்ளுவர் போக்குவரத்துக் கழகம் என அழைக்கப்பட்டது. சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் இத்துறையில் 300கிமீ-க்கு அதிகமான தூரமுள்ள வழித்தடங்களில் இத்துறையின் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழத்தின் 8 பிரிவுகளில் ஒன்றாகும். இக்கழகத்தின் பேருந்துகள் தமிழகத்தின் முக்கியமான மாவட்டத் தலைநகரங்கள், வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், சமய வழிபாட்டுத் தலங்கள் மற்றும் கேரளம், கர்நாடகம், ஆந்திரப் பிரதேசம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன. விபத்தில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றும் தமிழ்நாடு காவல்துறை ஆதாரம் : அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம்