தட்கல் முன்பதிவு

இந்தப் புதிய திட்டத்தின்படி ஏசி வகுப்புக்கு காலை 10 மணியிலிருந்தும் மற்ற வகுப்புக்கு காலை 11 மணிக்கும் பிரிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு கவுண்டர்களில் கூட்டம் குறைவாக இருக்கும் தவிர irctc.co.in என்ற இணையதளத்திலும் எளிதில் பதிவு செய்து கொள்ளலாம்.

தற்போது இதனைப் பாகுபடுத்தி பயணிகளின் வசதிக்காக ஒழுங்கமைக்கப்பட்டது. உதாரணமாக க்யூவில் ஆறாம் இடத்தில் ஏஸி டிக்கெட் வாங்க வந்தவர், அவருக்கு முன்னால் நிற்கும் ஐந்து சாதாரண வகுப்பு டிக்கெட் வாங்க நிற்பவர்களைத் தாண்டி போகவேண்டும். வேறு வழியில்லாமல் அங்கேயே காத்திருக்க வேண்டியிருக்கும்.

விதிமுறைகள்

ஏஸி வகுப்பு வேண்டுவோர் 10 மணிக்கு கவுண்டருக்கு வந்தால் போதும், 11 மணியிலிருந்து மற்றவர்களின் முன்பதிவு நடைபெறும். இதை நடைமுறைப்படுத்தினால் தட்கல் முன்பதிவு எளிதாகி டிக்கெட் கிடைப்பதும் உறுதியாகும்.

கூட்ட நெரிசல் குறையும்.

பத்து மணிக்கு ஏஸி டிக்கெட் கிடைக்கவில்லை என்றால் காத்திருந்து பதினொரு மணிக்கு சாதாரண டிக்கெட் கிடைக்குமா என்று முயற்சி செய்யலாம்.

கவுண்டரிலேயே நிறைய பேருக்கு டிக்கெட் உறுதியாகக் கிடைக்கும்.

இப்படி நேரில் குறித்த நேரத்தில் வந்து முன்பதிவு செய்கையில், வலைத்தளத்திலும் சர்வர் பிரச்னைகள் குறைந்து முன்பதிவு செய்வது எளிதாகும்.

ஆதாரம் : தென்னிந்திய ரயில்வே