நிலத்தை வாங்கும்போது கிரய பத்திரம் செய்துகொண்டால் மட்டும் போதாது. கண்டிப்பாக பட்டா மாறுதலையும் செய்ய வேண்டும். விலை கொடுக்கப்பட்டது என்பதற்கு சாட்சி கிரய பத்திரம். ஆனால் நிலத்தின் உரிமை மாறிவிட்டது என்பதற்கு பட்டாதான் சாட்சியம்.

பட்டாவில் பட்டா எண், சர்வே எண், கிராமம், வட்டம், மாவட்டம், சொத்தின் உரிமையாளர் அவரது தந்தையார் பெயர் ஆகிய தகவல்கள் இடம்பெற்றிருக்கும். பட்டாவில் நிலத்தின் பரப்பளவு சதுர மீட்டர் அல்லது ஏர் அளவுமுறையில் குறிப்பிடப்பட்டிருக்கும்.

கிரய பத்திரத்திலும் பட்டாவிலும் நிலத்தின் அளவு மாறுபட்டிருக்கலாம். அப்போது பட்டாவில் உள்ள அளவே இறுதியாக கொள்ளப்படும்.

பொதுவாக பட்டா மாறுதலுக்கான விண்ணப்பங்கள் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கள் கிழமையும் பெறப்படும். அதற்கான ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அதைப்போல ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தாசில்தார் அலுவலகத்தில் பட்டா மாற்றத்திற்கான உத்தரவுகள் வழங்கப்படும்.

பட்டாவுக்கு விண்ணப்பிப்பவர் இரண்டாவது வெள்ளிக்கிழமையன்று தாசில்தார் அலுவலகத்தில் பட்டாவை பெற்றுக்கொள்ளலாம் என்ற நடைமுறை இருக்கிறது.

கூட்டு பட்டாவை தனித்தனி பட்டாக்களாக மாற்றம் செய்வதற்கு தாசில்தார் அலுவலகத்தில் உள்ள சர்வேயருக்கு விண்ணப்பித்து நிலத்தை அளக்க வேண்டும். அதன்பிறகு தனிப்பட்டாவுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஆதாரம் : தினத்தந்தி