ஆண்டு தகவல் அறிக்கை மொபைல் செயலி வரி செலுத்துவோருக்கான ஆண்டு தகவல் அறிக்கை மொபைல் செயலியை (AIS for Taxpayer Mobile App) வருமான வரித்துறை (Income Tax Department) தொடங்கியுள்ளது. இதில் வரி செலுத்துவோர் கூகுல் ப்ளே (Google Play) மற்றும் ஆப் ஸ்டோர்களில் (App Store) இலவசமாக தகவல்களை அறிந்து கொள்ளலாம். வரி பிடித்தம், வட்டி, ஈவுத்தொகை, பங்கு பரிவர்த்தனைகள், வரித்தொகை, வருமான வரி திரும்ப பெறுதல் மற்றும் இதர தகவல்களை மொபைல் செயலி மூலம் வரி செலுத்துவோர் தெரிந்து கொள்ளலாம். வரி செலுத்துவோர் பின்னூட்டம் இடுவதற்கான வசதியும் இதில் இடம் பெற்றுள்ளது. ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்