உங்கள் ஆதார் அட்டை தொலைந்து போனால் பயம் கொள்ளாதீர்கள். அதன் பிரதியை பெற்றுக்கொள்வதற்கு மீண்டும் விண்ணப்பம் செய்ய எளிமையான வழிகள் உள்ளது.

இருப்பினும் ஆதார் அட்டையை பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகும். அதற்கு காரணம் அதில் உள்ள உங்கள் தகவல்களை கொண்டு உங்கள் நிதி சார்ந்த தரவுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

உங்களுக்கு உங்களுடைய ஆதார் எண் நினைவிருந்தால் மற்றும் / அல்லது பதிந்த போது கொடுக்கப்பட்ட ஆதார் அட்டை ஒப்புகை சீட்டு உங்களிடம் இருந்தால், ஆன்லைன் மூலம் ஆதார் அட்டையின் பிரதியை எடுத்துக் கொள்ளலாம்.

தொலைந்த ஆதார் அட்டை அல்லது அதன் பிரதியை ஆன்லைன் மூலம் எப்படி விண்ணப்பிக்க கீழ்கூறிய வழிமுறைகளை பின்பற்றவும்:

ஈ-ஆதார் ஆன்லைன் முகவாயிலுக்கு செல்லவும்.

12 இலக்க ஆதார் எண் / 28 இலக்க பதிவு ஐடியைத் தேர்ந்தெடுக்கவும்

ஆதார் ஒப்புகை சீட்டில் உள்ள பதிவீடு விவரங்களை (28 இலக்க பதிவு ஐடியைத்) நிரப்ப வேண்டும்.

மாறாக, உங்களுக்கு உங்கள் ஆதார் அட்டை எண் தெரிந்திருந்தால், 12 இலக்க ஆதார் எண் நிரப்ப வேண்டும்

நீங்கள் பதிந்துள்ள கைப்பேசி எண்ணில் ஓ.டி.பி. (ஒன் டைம் பின்) கடவுச்சொல் ஒன்றை குறுந்தகவல் மூலம் பெறுவீர்கள்.

கடவுச்சொல்லை உள்ளீடு செய்தவுடன் ஆதார் அட்டையின் பிரதியை தரவிறக்கம் செய்யும் தேர்வை நீங்கள் காணலாம். இந்த கோப்பு பி.டி.ஃஎப். வடிவத்தில் இருக்கும். மேலும் பாதுகாப்பிற்காக அது கடவுச்சொல் மூலமாக பாதுகாக்கப்பட்டிருக்கும்.

இ-ஆதார் இன் கடவுச்சொல் என்பது உங்கள் பெயரின் முதல் 4 எழுத்துக்களின் CAPITAL லெட்டர் மற்றும் பிறந்த ஆண்டு (YYYY) இன் கலவையாகும்.
உதாரணத்திற்கு:

உதாரணம் 1 - பெயர் SURESH KUMAR, பிறந்த ஆண்டு : 1990 - கடவுச்சொல் SURE1990

உதாரணம் 2 - பெயர் SAI KUMAR, பிறந்த ஆண்டு: 1990 - கடவுச்சொல் SAIK1990

உதாரணம் 3 - பெயர் P. KUMAR, பிறந்த ஆண்டு: 1990 - கடவுச்சொல் P.KU1990

உதாரணம்4 -பெயர்: RIA, பிறந்த ஆண்டு: 1990 - கடவுச்சொல் : RIA1990

அசலை போலவே அச்சிடப்பட்ட பிரதியும் அனைத்து இடங்களிலும் செல்லுபடியாகும்.

ஆதாரம் : மாநில ஆதார் மையம். தமிழ்நாடு அரசு