இ-ஆதார் அட்டை இ-ஆதார்(e-Aadhaar) என்பது UIDAI ஆல் டிஜிட்டல் கையொப்பமிடப்பட்ட ஆதாரின் கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட மின்னணு நகல் ஆகும். ஆதார் அட்டையை பதிவிறக்க தேவையானவை பதிவு ஐடி / ஆதார் எண் (ஏற்றுகொள்ளல் ரசீதில் (acknowledgement slip) உள்ள படி) பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண் மேலும் ஆதார் கடிதம் மற்றும் ஆதார் அட்டை கூட ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துக்கொள்ளலாம். இதற்கு தேவையானவை ஆதார் அட்டை பதிவு செய்த பதிவு எண், தேதி மற்றும் நேரம் அல்லது ஆதார் அட்டை எண். இ-ஆதார் அட்டை பதிவிறக்குவது எப்படி என்பதை பற்றி இங்கு பார்க்கலாம் செயல்முறை முதலில் ஆதார் அமைப்பின் இணைய தளத்திற்கு (https://myaadhaar.uidai.gov.in/) செல்ல வேண்டும். பின்பு 14 இலக்க ஆதார் பதிவு எண்ணை உள்ளிடவும், ஆதார் ஏற்றுகொள்ளல் ரசீதில் உள்ள 14இலக்க தேதி, நேரம் குறித்த எண்ணை உள்ளிடவும். 16 இலக்க மெய்நிகர் ஐடி (VID) எண் / 28 இலக்க பதிவு ஐடி (எய்ட்) ஆகியவையும் பயன்படுத்தலாம். வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டு எண்ணை (captcha) பூர்த்தி செய்யவும். கொடுக்கப்பட்ட தரவுகள் சரியாக இருந்தால், பதிவு செய்யப்பட்ட கைபேசிக்கு OTP (ஒரு முறை கடவுச்சொல்) கிடைக்கப்படும். அதை உரைபெட்டியில் உள்ளிடவும். ஓடிபி எண்ணை உள்ளிடவும். இ-ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்யலாம் இ-ஆதார் இன் கடவுச்சொல் என்பது உங்கள் பெயரின் முதல் 4 எழுத்துக்களின் CAPITAL லெட்டர் மற்றும் பிறந்த ஆண்டு (YYYY) இன் கலவையாகும்.உதாரணத்திற்கு: உதாரணம் 1 - பெயர் SURESH KUMAR, பிறந்த ஆண்டு : 1990 - கடவுச்சொல் SURE1990 உதாரணம் 2 - பெயர் SAI KUMAR, பிறந்த ஆண்டு: 1990 - கடவுச்சொல் SAIK1990 உதாரணம் 3 - பெயர் P. KUMAR, பிறந்த ஆண்டு: 1990 - கடவுச்சொல் P.KU1990 உதாரணம்4 -பெயர்: RIA, பிறந்த ஆண்டு: 1990 - கடவுச்சொல் : RIA1990 ஆதாரம் : UIDAI