ஆதாரின் வெவ்வேறு வடிவங்கள் - ஆதார் கடிதம், ஆதார் PVC அட்டை, eAadhaar மற்றும் mAadhaar ஆகும். ஆதாரின் அனைத்து வடிவங்களும் சமமாக செல்லுபடியாகும் மற்றும் ஏற்றுக்கொள்ளக்கூடியவை. ஆதார் PVC அட்டை பிளாஸ்டிக் (PVC) ஆதார் அட்டை என்பது மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் கூடிய நீடித்த, கிரெடிட் கார்டு அளவிலான ஆதார் பதிப்பாகும். இந்த அட்டையில் பாதுகாப்பு அம்சங்கள் உள்ளன: சேதப்படுத்த முடியாத QR குறியீடு ஹாலோகிராம் மைக்ரோ டெக்ஸ்ட் தனிநபர் அடையாளமற்ற புகைப்படம் வெளியீட்டு தேதி & அச்சு தேதி கில்லோச் பேட்டர்ன் (Guilloche Pattern) எம்போஸ் (Embossed) செய்யப்பட்ட ஆதார் சின்னம் விண்ணப்பிக்கும் முறைகள் இணையவழி விண்ணப்ப முறை UIDAI வலைத்தளம் அல்லது M-ஆதார் மூலம் ₹50 (செலுத்த வேண்டிய கட்டணங்கள் ரூ.50/- (ஜிஎஸ்டி & ஸ்பீட் போஸ்ட் கட்டணங்கள் உட்பட) செலுத்தி ஆன்லைனில் ஆர்டர் செய்யலாம் . ஆதார் எண் வைத்திருப்பவரிடமிருந்து ஆதார் PVC அட்டைக்கான ஆர்டரைப் பெற்ற பிறகு, UIDAI அச்சிடப்பட்ட ஆதார் அட்டையை 5 வேலை நாட்களுக்குள் (விண்ணப்ப தேதியைத் தவிர்த்து) அஞ்சல் துறையிடம் ஒப்படைக்கிறது. ஆதார் PVC அட்டை, ஆதார் தரவுத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட முகவரிக்கு, ஏற்கனவே உள்ள விநியோக விதிமுறைகளுக்கு இணங்க, இந்திய அஞ்சல் துறையின் SPEED POST சேவை மூலம் வழங்கப்படுகிறது. இணைய சேவை மையங்கள் அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் பொது இணைய சேவை மையங்கள் மூலமாக பிளாஸ்டிக் ஆதார் அட்டைகள் பெற்றுக்கொள்ளலாம். ஆதார் எண் கிடைக்கப் பெற்றவர்களுக்கு மட்டுமே பிளாஸ்டிக் ஆதார் அட்டை வழங்கப்படும். அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் மூலம், தமிழகம் முழுவதும் 583 பொது இணைய சேவை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. செயல்பாடுகள் ஆதார் அட்டை பெறுவதற்காக ஏற்கெனவே விண்ணப்பம் செய்து, கருவிழி-கைரேகைகளை பதிவு செய்து ஒப்புகைச் சீட்டு பெற்றவர்கள் பொது இணைய சேவை மையங்களுக்குச் செல்லலாம். ஆதார் எண் தயாராக இருக்கும் பட்சத்தில், ஒப்புகைச் சீட்டில் உள்ள பதிவு எண்ணைத் தெரிவித்து பிளாஸ்டிக் ஆதார் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். ஒப்புகைச் சீட்டு பதிவு எண்ணைப் பயன்படுத்தி பிளாஸ்டிக் ஆதார் அட்டை பெறுவதற்கு ரூ.40 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஏற்கெனவே, ஆதார் எண்ணை வைத்துள்ளவர்கள் ரூ.30 கட்டணம் செலுத்தி, பிளாஸ்டிக் அட்டையைப் பெறலாம். தமிழகத்தில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஏதாவது ஒரு பொது இணைய சேவை மையத்துக்குச் சென்று பிளாஸ்டிக் அட்டையைப் பெற்றுக் கொள்ளலாம். பிற சேவைகள் இந்த மையத்தில் பொதுமக்களுக்கு தேவையான வருவாய் துறையால் வழங்கப்படும் வருமான சான்று, சாதி சான்று, இருப்பிட சான்று, குடும்பத்தில் முதல் பட்டதாரிசான்று, கணவரால் கைவிடப்பட்டோருக்கான சான்று உள்ளிட்ட சான்றுகள் பெறுவதற்கும், சமூகநல துறை சார்பில் வழங்கப்படும் முதல்-அமைச்சரின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண உதவி திட்டம், டாக்டர் முத்துலட்சுமிரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண உதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண உதவி திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் பயன்பெறுவதற்கும் முதற்கட்டமாக சேவை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சேவைகள் அனைத்தும் குறைந்த கட்டணத்தில் மக்களுக்கு வழங்கப்படுகிறது. வருவாய் துறை சார்பில் வழங்கப்படும் சான்றுகள் பெறுவதற்கு பதிவு கட்டணமாக ரூ.50-ம், சமூக நலத்துறை சார்பிலான திட்டங்களில் பயன்பெறுவதற்கு பதிவு கட்டணமாக ரூ.100-ம் என குறைந்த கட்டணத்தில் பதிவு செய்யப்படுகிறது. ஆதாரம் : தமிழ்நாடு கேபில் டீவி கார்ப்பரேசன் (இ- பொது சேவை மையம்)