நிலத்தின் பட்டா மாறுதல் பணிகள் வருவாய் மற்றும் நில அளவைத் துறையினர்களால் தாலுகா அலுவலகங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த 2003ம் ஆண்டு முதல் கைகளால் எழுதப்பட்ட பட்டா நில பதிவேடுகள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டு, வருவாய்த் துறை மூலம் நேரடி பட்டா மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றம் செய்ய இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் வசதி தமிழகத்தில் முதல் கட்டமாக, கடலுார், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில் மற்றும் விருத்தாசலம் ஆகிய நான்கு வட்டங்களில் செயல்படுத்தப்பட்டது.

இந்த வசதியினைக் கொண்டு பொது மக்களும் பொது சேவை மையங்களான தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகள், தாலுகா அலுவலகத்தில் உள்ள அரசு இ-சேவை மையங்கள், புதுவாழ்வு மையங்கள் போன்றவற்றில் பட்டா மாறுதல் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் அளிக்கலாம். விண்ணப்பம் பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் சீட்டு சேவை மையத்தினால் பொது மக்களுக்கு வழங்கப்படும். இந்த மனு ஏற்கப்பட்ட விவரம் மனுதாரருக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தெரிவிக்கப்படும்.

அவ்வாறு விண்ணப்பித்தோரின் சொத்து விவரங்கள் குறித்த அசல் ஆவணங்களை அதே மையத்தில் கொடுத்து ஸ்கேன் செய்து மீண்டும் ஆவணங்களை பெற்றுக்கொள்ளலாம்.

பட்டா மாற்றப்பட்ட பின்னர் அதன் உத்தரவினை பொது சேவை மையங்களில் மனுதாரர் பெற்றுக்கொள்ளலாம். இந்த பட்டாவில் 'க்யூ ஆர் கோடு' உள்ளதால் தாசில்தார் கையொப்பம் தேவையில்லை. இதன் மூலம் பொது மக்கள் எளிதில் ஆவணங்களை பெற முடிவதோடு கால விரயமும் தவிர்க்கப்படுகிறது.

ஆதாரம் : முற்றம் நாளிதழ்