சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) இணையதளம் டிஜிட்டல் இந்தியா தொலைநோக்குப் பார்வையின் முக்கிய அங்கமான தொலைத்தொடர்பு பயனாளிகளின் பாதுகாப்பு மற்றும் உத்தரவாதத்தை உறுதி செய்வதை நிறைவேற்றும் விதமாக மத்திய தொலைத்தொடர்பு, ரயில்வே, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையால் சஞ்சார் சாத்தி (Sanchar Saathi) என்ற புதிய இணையதளம் என்று தொடங்கப்பட்டது. இந்த இணையதளம் தொலைந்து போன கைபேசிகளைக் கண்டறியவும், போலி கைபேசிகளை அடையாளம் காணவும் உதவும். இந்த இணையதள சேவை, கைபேசி சார்ந்த மோசடிகளைத் தடுக்கவும், கைபேசிகளைத் தவறாக பயன்படுத்துவதைக் கண்டறியவும், வங்கி சேவை சார்ந்த மோசடிகளை அடையாளம் காணவும் உதவும். Centralized Equipment Identity Register (CEIR) என்ற தொழில்நுட்பத்தின் அடிப்படையில், உருவாக்கப்பட்டுள்ள இந்த சேவை மூலம் தொலைந்து போன அல்லது திருடப்பட்ட கைபேசிகளைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள முடியும். இந்த இணையதளத்தில் அளிக்கும் தகவல்கள் சரியாக இருந்தால் அடுத்த 24 மணி நேரத்தில் அவற்றை கண்காணித்து மீட்கும் பணியை மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு https://sancharsaathi.gov.in/ வலைதளத்தைப் பார்க்கவும். ஆதாரம்: பத்திரிக்கை தகவல் மையம்