கற்றலின் நோக்கங்கள்

பங்கு வணிகம் வெளிப்படையாகப் பலமாகக் கூக்குரல் இடும் முறைக்கும் மின்னியக்க முறைக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகள் மூலதனச் சந்தை மற்றும் அதன் பல்வேறு பிரிவுகள்

வியாபார உறுப்பினர்களின் நிறுவன அதிகார வரிசை

முன்னுரை

இந்தியாவில் பங்கு மாற்றக வணிகம் தற்போது உள்ள தகவல் தொழில்நுட்பப் பயன்பாட்டினால் நடைபெறும் உடனடி ஒத்திசைவு அல்லது வணிகத்தைப் பதிவு செய்வது போன்று இல்லாமல் வெளிப்படையான பலமான கூக்குரல் இடுதல் முறைமூலம் நடைபெற்றது. இது நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்ளும் ஒரு திறமையற்ற முறையாகும். இக்குறைகளை நீக்கிட திறமையான நீர்மத்தன்மையுள்ள மற்றும் வெளிப்டையான ஒரு முறையை தேசிய அளவில் தேசியப் பங்கு மாற்றகம் அறிமுகப்படுத்தியது. இது முழுவதும் தானாக இயங்க கூடிய கணினித் திரையின் அடிப்படையிலான நேரடி வணிகமாகும். இதில் உறுப்பினர்கள் கணினித்திரையை இயக்குவதின் மூலம் தாங்கள் விரும்பிய விலையில் பத்திரங்களின் எண்ணிக்கை மற்றும் அவைகளை இணையான விலைகளில் எதிராளியிடமிருந்து விற்க அல்லது வாங்க உதவும் வசதியைத் தேசியப் பங்கு மாற்றகம் கொண்டுவந்தது. இம்முறையில் வரம்பு மீறாத விலை / நேர முன்னுரிமை ஆகியவற்றை மின்னியக்ககம் மூலம் ஒத்திசைவு செய்யப்படுகிறது. இதனால் நேரம் குறைப்பு, பிழைகளினால் ஏற்படும் செலவு மற்றும் இடர், மோசடிகள் தவிர்த்ததன் விளைவாக இதன் இயக்கத்திறமை அதிகரித்தது. இது அடிக்கடி மாறுபடுகின்ற நுண்ணிய விலை மாற்றத்தைக் கூட வேகமாகப் பதிவு செய்வதால் அதன் சந்தைத் தகவல் அளிப்பு திறமை அதிகரித்தது. இதனால் சந்தையில் பங்கு பெறுவோர், புவியமைப்பைக் கூட பொருட்படுத்தாமல், ஒரே சமயத்தில் ஒருவர் மற்றவரிடம் வியாபாரம் செய்வதால் சந்தையின் மதிதிட்பமும் நீர்மத்தன்மையும் அதிகரிக்கிறது. சந்தைக்குள் வியாபாரம் செய்ய வருபவர்களின் அடையாளம் மறைக்கப்படுவதால், ஆணைகள் பெரியதோ சிறியதோ, முகம் தெரியாத நபர்களிடையே நடக்கும் வியாபாரம் அனைவருக்கும் சமமான வாய்ப்பினை அளிக்கிறது. மேலும், வியாபாரத்தை முழுமையாக நிறைவேற்றப்படும் பொழுது ஏற்படும் சச்சரவுகளை தீர்த்துக் கொள்வதற்காக நேர்மையான தணிக்கை முறையையும் இது அளிக்கிறது.

இந்தத் தொழிற்நுட்பம் பங்குமாற்றகங்களின் கட்டிடங்களுக்குள்ளேயே நடந்து கொண்டிருந்த வர்த்தகத்தை இந்தியாவின் எல்லாப் பகுதிகளுக்கும் கொண்டு செல்லவும், தரகர்களின் வீட்டிலிருக்கும் கணினியிலிருந்தே வியாபாரம் செய்யவும், பயன்படுகிறது. மேலும், தேசியப் பங்கு சந்தை, இந்த வர்த்தகத்தைக் கணினி வலையமைவு மூலமாக முதலீட்டாளர்களின் வீட்டிலுள்ள தனிநபர் கணினிகளுக்குக் கொண்டு செல்கிறது. மற்றும் கம்பியில்லாத் தொடர்பு முறை மூலம் முதலீட்டாளர்களின் கையில் உள்ள கைப்பேசிகளுக்கே இவ்வர்த்தகத்தைத் தேசியப் பங்கு மாற்றகம் எடுத்துச் செல்கிறது.

தேசியப் பங்கு மாற்றகத்தில் பங்கு வர்த்தகம் செய்யும் கணினிகளின் வலையமைவு எப்படி செயல்படுகின்றது? என்பதைக் கீழ்க்காணும் வரைபடத்தில் காணலாம். தேசியப் பங்கு மாற்றகத்தின் அலுவலகத்தில் உள்ள முதன்மைக் கணினி, வீசாட் (VSAT) மூலமாக இணைக்கப்பட்டுள்ளது. இந்த முதன்மைக்கணினி கோளாறு ஏதும் நிகழ்ந்து செயலிழந்து போகாதவாறு திட்டமிடப்பட்டு (fault tolerant) நிர்மாணிக்கப்பட்ட ஸ்ட்ராட்டஸ் (STRATUS) எனும் முதன்மை அமைப்புக் (Main Frame) கணினியாகும். உறுப்பினர்கள் அவர்களுடைய அலுவலகத்திலிருந்தபடியே வீசாட் (VSAT), தந்திக் கம்பி இணைப்பு மற்றும் மோடம் மூலமாக அவர்களுடைய கணினியை (படத்தில் தனிநபர் கணினி எனக் காட்டப்பட்டுள்ளது) இந்த வலையமைவின் முதன்மைக்கணினியுடன் தொடர்ந்து இணைப்பில் இருத்தி வியாபரம் செய்ய முடியும்.

வர்த்தகத்திற்கான வலையமைவு

முதலீட்டாளர் அவருடைய சார்பாகக் கட்டளை ஒன்றை வழங்குமாறு தரகரிடம் தெரிவிப்பார். தரகர்அவருடை அலுவலகத்தில்இருக்கும்கணினியில்(WindowsNTயில்இயங்குவது)முதலீட்டாளரது கட்டளையைச் செயலாக்கி அந்தக் கட்டளையை வீசாட் / தந்தி கம்பி இணைப்பு / மோடம் மூலமாக அடையாளச் செய்தியைச் செயற்கைக் கோளுக்கு அனுப்பி வைப்பார். அந்த அடையாளச் செய்தி தேசியப் பங்கு மாற்றகத்தில் உள்ள முதன்மை அமைப்புக் கணினிக்கு அனுப்பப்படும். கட்டளைச் செயல்பாட்டைப் பற்றிய ஒரு செய்தி ஒவ்வொரு உறுப்பினருக்கும் அறிவிக்கப்படும். அக்கட்டளை ஏற்பு செய்தியானது உடனடியாகத் தரகரின் தனிக் கணினிக்குச் செலுத்தப்படும். இக்கட்டளை முதன்மைக் கணினியில் இருக்கும் வேறு ஏதாவது ஒரு முதலீட்டாளர் கொடுத்த கட்டளையோடு ஒப்பிட்டுப் பார்த்து அது ஒத்திசைவாகவில்லை என்றால், செயல்படுத்துகின்ற கட்டளை வரும் வரை காத்திருக்கவேண்டும். கட்டளை ஒத்திசைவு ஏற்பட்டால், அதைப் பற்றிய செய்தி ஒன்று ஒவ்வொரு உறுப்பினருக்கும் அறிவிக்கப்படும்.

இந்த வியாபார முறை கட்டாய விலை நேரமுன்னுரிமையில் இயங்குகிறது. இந்த முறையில் ஏற்படும் அனைத்து ஆணைகளும் பிரிக்கப்பட்டு அதில் சிறந்த விலை ஆணை முதலில் ஒத்திசைவுக்காக எடுத்துக் கொள்ளப்படும். அதாவது சிறந்த வாங்கும் விலை சிறந்த விற்கும் விலையுடன் ஒத்திசைவு செய்யப்படும். ஒரே விலை ஆணைகள் நேரத்தை அடிப்படையாகக் கொண்டு பிரிக்கப்படும். அதாவது பின்னர் வந்த ஆணையை விட முன்னர் வந்த ஆணைக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஆணைகள் விதிவிலக்கில்லாமல் முதன்மை கணினி கடைப்பிடிக்கும். ஒன்றுக்கொன்று நிகரான கணிப்பொறியில் வெளிப்படையாக, அறியக்கூடிய மற்றும் நேர்மையான முறையில் தானாகவே ஒத்திசைவு செய்யப்படும். அவ்வாறு ஓர் ஆணைக்கு அதற்குரிய ஒத்திசைவு கிடைக்கப் பெறவில்லை எனில், புதிய ஆணை வரும் வரை அல்லது பழைய ஆணையை நீக்கும் அல்லது மாற்றம் செய்யும் வரை, அது கணினியில் வைக்கப்பட்டு, சந்தை முழுவதும் அது வெளிப்படுத்தப்படும்.

நேரம் - சார்ந்த (உடனடி அல்லது இரத்து ஆணை), விலை - சார்ந்த (நிர்ணயித்த விலை ஆணை அல்லது இழப்பை நிறுத்தும் ஆணை) மற்றும் எண்ணிக்கை - சார்ந்த எந்த எண்ணிக்கை அளவைச் சந்தையில் பட்டியலிட்டு வெளிப்படையாகக் காண்பிப்பது) போன்ற நிபந்தனைகளை எளிதாக ஆணைகளில் இணைத்துக் கொள்ளலாம்.

இந்த வியாபாரமுறையில் சந்தையைப் பற்றிய முழு தகவல்களையும் சந்தைக் கணிப்பொறி நேரடியாக அளிக்கிறது. சந்தை முழு தகவல்களையும் சந்தைக் கணிப்பொறி திரையில் எந்த நேரத்திலும் அளிக்கலாம். அவையாவன:

ஒரு பத்திரத்தின் மொத்த ஆணையின் மதிப்பு, சந்தையில் உள்ள சிறந்த ஐந்து வாங்கும் ஆணைகள் மற்று விற்கும் ஆணைகள், அதுவரை அந்தப் பத்திரத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் நடந்த வியாபாரத்தின் அளவு, அதுவரை நடந்த விலைகளில் குறைந்த அளவு மற்றும் அதிக அளவு, கடைசியாக நடைபெற்ற விலை போன்ற தகவல்களைத் கணினித்திரையில் அறியமுடியும். முதலீட்டாளர்கள் உடனுக்குடன் அவர்கள் விற்கவோ வாங்கவோ முடிவு செய்து கொடுத்த கட்டளைகளுக்கு என்னவாயிற்று? என்பதையும் உடனடியாகத் தெரிந்துகொள்ள முடியும். இவ்வாறு தேசிய தானியங்கி வர்த்தக மாற்றகத்தின் தொடக்க, பொது அளிப்புப் பிரிவு மூலம் திறந்த மின்னியக்கக் கோர்வை வரம்பு ஆணைப்புத்தகத்தை அளிக்கிறது.

விலை வரம்பு நிர்ணயிக்கப்பட்ட வாங்கும் மற்றும் விற்கும் கட்டளைகள் என்பது ஒரு பங்கில் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கைப் பங்குகளை ஒரு குறிப்பிட்ட விலையில் வாங்குவதற்காக முதலீட்டாளரால் இடப்பட்ட கட்டளையாகும். எண்ணிக்கை மற்றும் விலைக்கு ஈடான ஒத்திசைவு கிடைக்கப்பெறவில்லை எனில் அந்த வரம்புக் கட்டளைகள் செயல்படுத்தப்பட மாட்டாது. “வரம்பு ஆணை புத்தகம்" என்பது வரம்பு ஆணைகளைச் சேமித்து வைக்கும் புத்தகம் என்றும், மற்றும் அப்புத்தகத்தில் உள்ள சந்தை ஆணைகள்வரம்பு ஆணைகளுக்கு எதிராகக் கீறல் செய்யப்படுகின்றன என்ற உண்மையையும் கொண்டது. இந்த ஆணைப்புத்தகம் சந்தைப் பங்கேற்பாளர்கள் அனைவரின் பார்வைக்கும் வைக்கப்படுவதால் இது "திறந்த ஆணைப்புத்தகம்’என்றும் அழைக்கப்படுகிறது.

தேசிய தானியங்கி வர்த்தக மாற்றகத்தின் தொடக்க பொது அளிப்பு முறை (NEAT)

தேசியத் தானியங்கி வர்த்தக மாற்றகத்தின் தொடக்க பொது அளிப்புமுறையானது ஆணை இயக்கச் சந்தைக்குப் பக்கபலமாக இருந்து செயல்படுகின்றது. இந்த முறையில் நேரம் மற்றும் விலைகள் முன்னுரிமை அடிப்படையில் ஒத்திசைவு நடைபெறுகிறது. பங்குகளின் எண்ணிக்கை அலகுகளிலும் (Units) விலை இந்திய ரூபாயிலும் குறிப்பிடப்படுகின்றது. ஒவ்வொரு பங்கிலும் குறைந்த பட்சம் எந்த எண்ணிக்கையில் (ot size) வியாபாரம் செய்யப்படவேண்டும் என்பதையும், ஒவ்வொரு விலை மாறுதல்களுக்கும் இடையே இருக்க வேண்டிய குறைந்த பட்ச இடைவெளியின் (tick size) அளவையும் தேசியப் பங்கு மாற்றகம் அவ்வப்போது அறிவிக்கும்.

சந்தையின் வகைகள்

பங்கு முதலீட்டுச் சந்தை முறை நான்கு வகையான பிரிவுகளைக் கொண்டது.

வழக்கமான சந்தை

வழக்கமான சந்தையில் முறையான பங்கீட்டு ஆணை, சிறப்பு வரையறை ஆணை, பேரவணிக ஆணை மற்றும் இழப்பை நிறுத்தும் ஆணை ஆகியவற்றை அவற்றின் சிறப்பியல்புகளின் அடிப்படையில் உள்ளடக்கிய பல புத்தக வகைகளால் பிரிக்கப்பட்டுள்ளது.

உதரிப் பங்கீட்டுச் சந்தை

இந்த வகைச் சந்தை வசதி வரையறுக்கப்பட்ட வடிவம் கொண்ட சந்தையில் வியாபாரம் செய்ய உபயோகப்படுகின்றது. இது பங்கு மாற்றகம் எண்ணிக்கையில் 500க்கு மேற்படாத எண்ணிக்கையில் வடிவம் கொண்ட பங்குகளை வியாபாரம் செய்வதற்காக அளிக்கும் வசதியாகும். இந்தச் சந்தை வரையறுத்த வடிவம் கொண்ட சந்தை என்றும் அழைக்கப்படுகின்றது. ஜின் 7,1999இல் இந்த வகைச் சந்தை அறிமுகப்படுத்தப்பட்டது.

சில்லரைக் கடன் சந்தை

சிறு முதலீட்டாளர்களுக்கு அரசுக் கடன் பத்திரங்கள், நிறுமங்களின் கடன் பத்திரங்கள் மற்றும் வேறுபல கடன் பத்திரங்களை வாங்குவதற்கு இச்சந்தைகள் வசதியை அளிக்கிறது. இந்த வசதி, மூலதனச் சந்தையின் பிரிவான தேசிய தானியங்கி வர்த்தக மாற்றகத்தின் தொடக்கப் பொது அளிப்புமுறையில் உள்ள சில்லறைக் கடன் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்தப்படுகிறது. பங்குச் சந்தையில் வியாபாரம் செய்யப்படுவதைப் போலவே சில்லரைக்கடன் பத்திரச் சந்தையிலும் வியாபார நடைமுறை இருக்கின்றது.

ஏல முறைச் சந்தை

ஏல முறைச் சந்தையில் வியாபார உறுப்பினர்களுக்காகப் பங்கு மாற்றகத்தால் தீர்வு சம்மந்தப்பட்ட பிரச்சனைகளுக்காக ஏலம் நடத்தப்படுகிறது. தீர்வு நாளன்று விற்பதை தரகர் ஒரு சில காரணங்களால் தேவையான பங்குகளைத் தீர்வகக் கழகத்திற்குக் கொடுக்கத் தவறினால் இது போன்ற ஏலங்கள் நடைபெறும். அப்பங்குகள் ஏலமுறையில் தீர்வுக் கழகத்தால் சந்தையில் இருந்து ஏலம் எடுக்கப்பட்டு வாங்கியவர்களுக்கு அளிக்கப்படும்.

நிறுவன அதிகார வரிசை

தேசிய தானியங்கி வர்த்தக மாற்றகத்தின் தொடக்கப் பொது அளிப்புப் பிரிவு அதிகாரிகளின் அதிகார வரம்பை வியாபார உறுப்பினர்கள் வரையறுத்துக் தெரிந்து கொள்ள வேண்டும். அந்த அதிகார வரிசை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அலுவலக அதிகாரி

ஒரு வியாபார நிறுவனத்தில் உபயோகிப்பாளர்கள் வைத்திருக்கும் கணினிக் கட்டமைப்பில் உயர்ந்த நிலை இது. இந்த வகை உபயோகிப்பாளர்கள் ஒரு வியாபார நாளின் இறுதியில் அனைத்துகிளைகளிலும் நடந்த வியாபாரம் குறித்த நடவடிக்கைகளின் அறிக்கையைப் பெறலாம். மேலும் கிளையின் வியாபர அளவை நிர்ணயிக்கவும் (அதிகரிக்கவோ -குறைக்கவோ), ஒரு வர்த்தகரின் வியாபார அளவை நிர்ணயிக்கவும் அதிகாரம் பெற்றது இந்த வகை நிலை. இதுவும் தவிர எந்த ஒரு நேரத்திலும் தனக்குக் கீழ் எல்லா நிலையில் இருக்கும் கணினிகளிலும் எந்தெந்த வாங்கும்/விற்கும் கட்டளைகள் நிலுவையில் இருக்கின்றது? என்பதையும் பார்க்கும் வசதியைக் கொண்டது இந்த நிலை. நிலுவையில் இருக்கும் கட்டளைகளை நீக்குவதற்கான அதிகாரமும், மாற்றுவதற்கான அதிகாரமும் இந்த நிலைக்கு உண்டு.

கிளை மேலாளர்

கிளை மேலாளர் என்ற நிலை அலுவலக அதிகாரிக்குக் கீழே செயல்படும் நிலையாகும். இந்த நிலையில் உள்ள உபயோகிப்பாளர் தனக்குக் கீழேயுள்ள உபயோகிப்பாளர்களின் வியாபாரம் குறித்த தகவல்களை நாளின் இறுதியில் பெற்றுக்கொள்ளும் தகுதியைக் கொண்டவராவார். மேலும் தனக்குக் கீழேயுள்ளவர்களுக்கு வியாபர அளவை நிர்ணயம் செய்யும் தகுதியுடையவராவார். இது தவிர தனக்குக் கீழேயுள்ளவர்களின் நிலுவையில் இருக்கும் கட்டளைகளைச் சந்தை நடைபெறும் போது பார்க்கவும், மாற்றியமைக்கவும், நீக்கவும் அதிகாரம் பெற்றவராவார்.

வர்த்தகர்

வர்த்தகர் எனப்படும் நிலை கடைசி நிலையாகும். வர்த்தகர் அவருக்கு சம்பந்தப்பட்ட கணினியில் வியாபாரம் செய்பவர்களின் தகவலையும், அவர்களுடைய நிலுவையில் இருக்கும் கட்டளைகளையும் பார்க்கமுடியும் எனலாம். மேலும் அந்தக் கணினியில் நிலுவையில் இருக்கும் வர்த்தகக் கட்டளைகளை மட்டுமே மாற்றவோ நீக்கவோ முடியும்.

ஆதாரம் : தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்