ஒருத்தருக்கு ஆயுள் அதிகம் இருக்கோ இல்லையோ, ஆனா கண்டிப்பா ஒரு பாலிசி இருக்கும். இன்சூரன்ஸ் பாலிசி குறித்துத் தற்போது பெருகியுள்ள விழிப்புணர்வின் மூலம் நாம் அனைவரும் குறைந்த பட்சம் ஒரு பாலிசியோ அல்லது குடும்பத்தை நமக்குப் பிறகு பாதுகாக்க ஒரு திட்டத்தையோ வைத்திருப்போம். மேலும் இது வருமான வரியைச் சேமிக்கும் ஒரு வழியாகவும் இருப்பதால் இதன் முக்கியத்துவம் அதிகரிக்கிறது. ஆயுள் காப்பீட்டுக்காகச் செலுத்தப்படும் அனைத்து பிரிமியத் தொகைகளுக்கும் 80சி பிரிவின் கீழ் வரி விலக்கு ருபாய் ஒன்றரை லட்சம் வரை உண்டு என்கிற பொதுவான ஒரு கருத்து நிலவுகிறது. மேலும் பாலிசி முதிர்வுத் தொகையும் பிரிவு10(10d)-ன் கீழ் வரி விலக்கிற்கு உரியது .

இந்தப் புதிய நிதி மசோதா மூலம் பாலிசி முதிர்வுத் தொகைகளின் மேல் டிடிஎஸ் (TDS) எனப்படும் நிதி மூல வரியை கழித்துக் கொடுக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலிசி மீதான பிரிமியத் தொகை பிரிவு 80c இன் கீழ் ரூபாய் ஒன்றரை லட்சம் வரை வரி விலக்கிற்கு உரியது.

பாலிசி முதிர்வுத் தொகையில் செலுத்துகின்ற பிரிமியத் தொகை 10 சதவிகிதத்திற்கும் அதிகமாக இருந்தால் முதிர்வுத்தொகையில் 10 சதவிகித அளவிற்குப் பிரிமியத் தொகையில் வரிப் பிடித்தம் செய்யப்படும்.

பிரிவு 10(10d)-இன் படி இறப்பின் பொது வழங்கப்படும் உறுதியளிக்கப்பட்ட தொகைக்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.

பிரிமியத் தொகை முதிர்வுத் தொகையில் 10 சதவிகிதத்திற்கும் குறைவாக இருந்தால் முதிர்வுத் தொகைக்கு வரி விலக்கு உண்டு.

இதற்கு முன்னர் வரி விலக்கிற்குரிய பாலிசி பிரிமியத் தொகை வரம்பு முதிர்வுத் தொகையில் 20 சதவிகிதமாக இருந்தது

உங்கள் பெற்றோர், உடன் பிறப்புகள் அல்லது பிற சொந்தங்களின் பாலிசிகள் மீது நீங்கள் செலுத்தும் பிரிமியத் தொகைக்கு வரிவிலக்கு ஏதும் இல்லை என்பதை நீங்கள் கவனிக்க வேண்டியது அவசியம்.

ஒன்றிற்கு மேற்பட்ட பாலிசிகள் மீது நீங்கள் செலுத்தும் அத்தனை பிரிமியத் தொகையும் வரி விலக்கிற்கு உட்பட்டது.

ஐஆர்டிஏ வினால் (காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம்) அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டங்களில் முன்கூட்டியே மொத்தமாகப் பெறப்படும் பென்ஷன் தொகைக்கு (commuted pension) வரி இல்லை.

செலுத்தப்படும் எல்லா விதமான பிரிமியத் தொகைகளும் சேவைவரி, கல்வி கூட்டு வரி உள்ளிட்ட அந்த அந்த ஆண்டிற்குப் பொருந்தக்கூடிய வரிகளுக்குட்பட்டவை

ஆதாரம் : லைப் இன்ஜீனரஸ் கார்ப்ரசேன் இந்தியா