பணியாளர் வருங்கால வைப்பு நிதி

பணியாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு என்பது பணியில் இருப்பவர்களுக்கு தங்களது ஓய்வுகாலத்தை திட்டமிட ஒரு கருவியாக இருக்கின்றது. இத்திட்டத்திற்கு மேலும் இணைப்பாக, நிறுவனங்களுடன் இருக்கும் தன்னார்வ வருங்கால வைப்பு நிதி (VPF) கணக்கில் பங்களிக்கலாம். வழக்கமான இபிஎஃப் (EPF) எனப்படுவது நமது சம்பளத்தொகையில் பிடிக்கும் பிடித்தமானது ஒரு தொடக்க வரம்புக்குள் உட்பட்டதாகவே இருக்கும் (12% அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி). ஆனால் இத்தகைய வரம்பு விபிஎஃப் (VPF) கணக்கில் இல்லை. இதனால், விபிஎஃப் கணக்கில் இருந்து இபிஎஃப் கணக்கு வேறுபட்டு இருகின்றது. இந்த விபிஎஃப் கணக்கானது, ஊழியர்களின் ஒய்வுக்கால வைப்பு நிதிக்கு அதிகமாக பங்களிக்கச் செய்கின்றது. அதிகபச்சமாக 100% அடிப்படை சம்பளம் + அகவிலைப்படி தொகையை அனுமதிக்கச் செய்கின்றது. ஆனால், வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளிகளின் பங்களிப்பு அதிகரித்தாலும், நிறுவனத்தின் பங்களிப்பு அதே அளவில் தான் இருக்கும். மேலும், இபிஎஃப் கணக்குகளில் இருப்பதுபோல் நிறுவனத்தின் பங்களிப்பு 12% மேல் இருக்காது.

விபிஎஃப் கணக்கை தொடங்குவது எப்படி?

விபிஎஃப் கணக்கை ஒரு பணியாளர் மிக எளிதாக தொடங்கலாம். நிறுவனத்திற்கு தேவையான சில அறிவுறுத்தல்கள் சமர்ப்பிக்க வேண்டும். பணியாளரின் சம்பளத் தொகையில் எவ்வளவு சதவீத தொகையை விபிஎஃப் கணக்கிற்கு பங்களிக்க விரும்புகிறீர்கள் என்பதை குறிப்பிடவேண்டும்.

விபிஎஃப் கணக்கில் பங்களிப்பது எவ்வாறு நன்மையை தரும்?

உறுதியான நெறிமுறையான முதலீடு சம்பளத்தில் குறிப்பிட்ட வரம்பிலான வழக்கமான பங்களிப்புடன் சேர்ந்து, விபிஎஃப் கணக்கு உங்கள் தரப்பில் இருந்து வழக்கமான முதலீட்டை உறுதி செய்கின்றது.

பிடித்தம் அல்லது பங்களிப்பு பிடித்தம் அல்லது பங்களிப்பு ஆகியவற்றிக்கு தொடக்க வரம்பு இல்லாததால், விபிஎஃப் ஒருவரது தேவைக்கு ஏற்ப பங்களிக்கச் செய்கின்றது. எவ்வாறு என்றால், மற்ற ஓய்வுக்கால கருவிகளை ஒப்பிடும்போது, உதாரணமாக PPF கணக்கில் ஒரு வருடத்திருக்கு 1 லட்ச ரூபாய் வரைதான் முதலீடு செய்ய முடியும்.

வட்டி வருமானத்திற்கு வரிவிலக்கு

விபிஎஃப் கணக்கு பங்களிப்பு உண்டாக்கும் வட்டி வருமானத்திற்கு இபிஎஃப் கணக்கு போலவே வரிவிலக்கு உண்டு. மேலும், இதில் வரும் வட்டி வருமானமானது இபிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். ஏனெனில், விபிஎஃப் கணக்கிற்கு தனியாக ஒரு கணக்கு கிடையாது, இபிஎஃப் கணக்கிலேயே அவை சேர்க்கப்படும். அதனால், விபிஎஃப் முதலீட்டில் ஈட்டிய வட்டிக்கு வரிவிலக்கு உண்டு.

ஒய்வு காலம்

இதனால், நமது வழக்கமான முதலீடுகளை தவிர்த்து, விபிஎஃப் கணக்கு நமக்கு ஒய்வுகாலத்தில் மிகையான தொகையை அளிக்கும்.

கேள்வி பதில்

1. குறித்தகால வைப்புத் தொகையை முதிர்வு காலத்திற்கு முன்னதாகவே திருப்பித்தர முடியாது என வங்கிகள் மறுக்கலாமா ?

தொகையின் அளவு எவ்வளவானாலும் பொதுவாக வங்கிகள், தனிநபரகள், இந்து கூட்டுக் குடும்பம் (HUF) ஆகியோரின் குறித்தகால வைப்புத்தொகையை முதிர்வுநிலைக்கு முன்னர் திருப்பித்தருவதை மறுக்க இயலாது. ஆனால் பெரிய அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் பெருந்தொகை வைப்புத்தொகையை முதிர்வு நாளுக்கு முன்னதாகவே திருப்பி தரமுடியாது என்று வங்கிகள் கூறலாம். வங்கிகள் முன்னதாகவே, அதாவது வைப்புக் கணக்கைத் தொடங்கும் போதே,முதிர்வுக்கு முன் அந்த வைப்புத்தொகையைத் திருப்பித் தர இயலாது என்று கூற வேண்டும்.

2. முதிர்வடைவதற்கு முன்னதாகவே திரும்பப்பெறப்படும் வைப்புத்தொகைக்கு தண்டத்தொகை விதிக்கலாமா?

வைப்புத் தொகைகள் முதிர்வடைவதற்கு முன்னதாக திரும்பப் பெறப்படும்போது விதிக்கப்படும் தண்ட வட்டி வீதத்தை வங்கிகளே நிர்ணயித்துக் கொள்ளலாம்.

3. வங்கி விடுமுறை நாட்கள், வங்கிப்பணி நடக்காத வேலைநாட்கள், ஞாயிற்றுக்கிழமை ஆகிய நாட்களில், வைப்புத்தொகை முதிர்வடைந்தால், எவ்வாறு எப்போது வங்கிகள் வட்டி வழங்கவேண்டும்?

வைப்புத் தொகை முடியும் நாளுக்கும், வைப்புத் தொகைக்கான வட்டியை வழங்கும் நாளுக்கும் இடையே வங்கி விடுமுறை நாட்கள், ஞாயிற்றுக்கிழமைகள், வங்கிப்பணி நடக்காத வேலைநாட்கள் குறுக்கிட்டால் ஒப்பந்தப்படியான வட்டி வீதத்தை, வங்கி அக்காலத்திற்கும் சேர்த்து வட்டி வழங்க வேண்டும்.

ஆதாரம் : இந்திய ரிசர்வ் வங்கி