சென்னை பொதுமக்களின் குறைகளை எவ்வித காலதாமதமின்றி உடனடியாக நிவர்த்தி செய்ய எளிய முறையில் குறைதீர்க்கும் செயலி, பெருநகர சென்னை மாநகராட்சியால் கடந்த ஜனவரி மாதம் தொடங்கப்பட்டது.

இதன் மூலம் பொதுமக்கள் தங்களுடைய குறைகளை பதிவு செய்தால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும். (Android) கைபேசி உபயோகிப்பாளர்கள் ios (iphone) பயன்பாட்டாளர்களும் பதிவிறக்கம் செய்யும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

கைபேசி செயலி மூலமாக பெறப்படும் மனுக்கள் அனைத்தும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உடனுக்குடன் அனுப்பப்பட்டு, அதன்மீது மேற்கொண்ட நடவடிக்கை விவரங்களை மனுதாரருக்கு கைபேசி செயலி மூலமாகவே உடனுக்குடன் தெரிவிக்கும் வண்ணம் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. உதாரணமாக, தெருவிளக்கு பராமரிப்பு, குப்பை அகற்றுதல், நாய் தொல்லை, சாலைப் பணிகள் பராமரிப்பு, மழைநீர் வடிகால் பராமரிப்பு போன்ற பொதுமக்களின் புகார்கள் கைபேசி செயலி மூலமாக பதியப்பட்டு, புகார்கள் அனைத்தும் எல்லைக்குட்பட்ட துறை சார்ந்த அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று பொதுமக்களின் குறைகள் மீது துரித நடவடிக்கை மேற்கொள்ள இந்த கைபேசி செயலி வழிவகை செய்கிறது. இதனால் பொதுமக்களின் குறைகள் எவ்வித காலதாமதமின்றி உடனடியாக நிறைவேற்றப்படுகிறது.

ஆதாரம் : சென்னை பெருநகர வளர்ச்சிக்குழுமம்